search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ குளிக்க முயற்சி"

    • பிரசாத கடையை அதிகாரிகள் அகற்றியதை கண்டித்து ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயன்றார்.
    • தீ விபத்து எதிரொலியாக கோவுல் வளாகத்திற்குள் கடைகள் அமைக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலில் பிரசாத கடை நடத்துவதற்கான உரி மையை ராமர் என்பவர் ஏலம் எடுத்து ஆண்டாள் சன்னதி கொடி மரம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலை யில் மதுரை மீனாட்சி அம் மன் கோவில் வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக கோவுல் வளாகத்திற்குள் கடைகள் அமைக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து இந்த ஆண்டு நடந்த கோவில் கடைகளுக்கான ஏலத்தில் கோவில் வளாகத்திற்கும் கொடிமரம் அருகே கடை வைக்க கூடாது. மாறாக கோயில் முன் உள்ள மண்ட பத்திலோ, ஆடிப்பூர கொட் டகையிலோ சொந்த மாக செட் அமைத்து பிரசாத கடை வைத்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனை யுடன் ஏலம் விடப்பட்டது.

    இந்த ஆண்டு பிரசாத கடை நடத்துவதற்கான உரிமையை ரூ.21 லட்சத்திற்கு ஏலம் எடுத்த ராமர் கொடி மரம் அருகிலேயே கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று கோவில் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடையை அப்புறப்படுத்த முயன்ற போது, எதிர்ப்பு தெரிவித்த ஒப்பந்ததாரர் ராமர், அவரது சகோதரி மற்றும் மகளுடன் உடலில் நெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர்களை போலீசார் தடுத்தனர். கடை யில் இருந்த பொருட்களை அகற்றிய ஊழியர்கள் கோவில் முன் உள்ள மண்ட பத்தில் வைத்தனர்.

    இதுகுறித்து செயல் அலுவலர் முத்துராஜா கூறுகையில், இந்த ஆண் டுக்கான ஏலத்தில் கோவில் வளாகத்திற்குள் கடை வைக்க அனுமதி கிடையாது. அதற்கு பதில் கோவில் முன் உள்ள மண்டபத்திலோ அல்லது ஆடிப்பூர கொட்ட கையில் பிரசாத கடை அமைத்துக் கொள்ள வேண்டும் தெளிவாக குறிப்பிடப்பட்டது. இது ஒப்பந்தத் தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஆடிப்பூர திருவிழா முடிந்த பின் கடையை இடமாற்றம் செய்து கொள் கிறேன் எனக்கோரி யதால் ஒரு மாதம் அவகாசம் வழங் கப்பட்டது. அதன்பின் 4 முறை நோட்டீஸ் அனுப்பி யும் கடையை அகற்றவில்லை. அதனால் கோவில் பணியா ளர்கள் மூலம் கொடிமரம் அருகே இருந்த பொருட்கள் எடுக்கப்பட்டு, கோவில் முன் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது என் றார்.

    • கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது.
    • நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றார்

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொது மக்களை நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் தான் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி திடீரென தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் தற்கொலைக்கு முயன்ற அவர் மீது தண்ணீர் ஊற்றினர். விசாரணையில் அவர், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் ரோட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துராஜ் (வயது53) என்பது தெரியவந்தது.

    அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனக்கு சொந்தமான 1 அரை சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே போலீசார் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடலூர் கலெக்டர் ஆபீஸ் முன்பு 2 மகன்களுடன் பெண் தீ குளிக்க முயன்றார்.
    • எனது கணவர் கையெழுத்திட்டதாக கூறி போலியாக பத்திரம் தயாரித்து ரூ.6.37 லட்சம் பணம் பெற்றதாக ஒரு பெண் உள்பட 2 பேர் என்னை மிரட்டுகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி காவேரி. இவர் தனது 2 மகன்களுடன் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்குள்ள பஸ் நிறுத்தம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பெட்ரோல் கேனை கைப்பற்றினர். காவேரியின் கையில் மனு இருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் கடந்த ஆண்டு இறந்து போனார். அதற்கு முன்பு எனது கணவர் கையெழுத்திட்டதாக கூறி போலியாக பத்திரம் தயாரித்து ரூ.6.37 லட்சம் பணம் பெற்றதாக ஒரு பெண் உள்பட 2 பேர் என்னை மிரட்டுகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனது கணவர் இறந்த பின்பும் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனது 2 மகன்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர். இதற்கு எனது உறவினர் ஒருவரும் உடந்தையாக உள்ளார். எனவே எனக்கும், எனது மகன்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×