search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க செயின்"

    • இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.
    • மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.

    இவரது மனைவி இந்திராணி (வயது 50).

    நேற்று இரவு வீட்டில் இந்திராணி தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியை பிரித்துக் கொண்டு மூன்று மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். திடுக்கிட்டு எழுந்த இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.

    இதையடுத்து அந்த மர்ம நபர்கள் கத்தி, கட்டையை காண்பித்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் எனக் கூறி மிரட்டல் விடுத்தனர்.

    பின்னர் கத்தி முனையில் இந்திராணி, சுஷ்மிதா, ஸ்ருதி கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தனர்.

    மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து இந்திராணி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தூய்மை பணியாளர் செந்தாமரையை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
    • ரெயில் நிலையத்தில் தங்க செயினை தவறவிட்டவர்கள் முறையான ஆவணத்துடன் ரெயில்வே போலீசாரை அணுகினால் அதனை ஒப்படைக்க தயாராக உள்ளனர்.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 8 மற்றும் 9-ல் வ.உ.சி.நகரை சேர்ந்த துப்புரவு பெண் ஊழியர் செந்தாமரை தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது பிளாட் பாரத்தில் ஒரு செயின் கிடந்ததை கண்டு எடுத்தார். அது தங்க செயின் என தெரிய வந்தது. அதனை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்கபந்துவிடம் ஒப்படைத்தார்.

    தங்க செயினின் எடை 32 கிராம் ஆகும். 4 பவுன் செயினை பயணி யாரோ தவறவிட்டு சென்று விட்டுள்ளார். அவற்றின் தற்போதைய மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தங்க செயினை நேர்மையாக எடுத்துக்கொடுத்த தூய்மை பணியாளர் செந்தாமரையை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    செயினை தவறவிட்ட பயணி யார் என்று கண்டு பிடித்து அவர்களிடம் ஒப்படைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில் நிலையத்தில் தங்க செயினை தவறவிட்டவர்கள் முறையான ஆவணத்துடன் ரெயில்வே போலீசாரை அணுகினால் அதனை ஒப்படைக்க தயாராக உள்ளனர்.

    • மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்க செயின் வழங்கப்படும்.
    • 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை வைத்தார். தலைமை ஆசிரியர் அருளாளன் வரவேற்று பேசினார். மாணவ -மாணவிகளுக்கு, கலைவாணன் எம்.எல்.ஏ., சைக்கிள்களை வழங்கி பேசும்போது:-

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒன்றரை பவுன் தங்கச் செயின் வழங்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் முருகதாஸ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அபிநேசா, மாலஸ்ரீ, அட்சயா ஆகியோருக்கும் 10-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த அமிர்தவல்லி, வர்ஷினி, பரமேஸ்வரி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான்அருள் நன்றி கூறினார்.

    • 3 ½ பவுன் தங்க செயினை பறித்து கொன்டு மின்னல் வேகத்தில் ஓட்டம்
    • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே உண்ணீர்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜானகி அம்மாள். இவர் திருமணமான மகளுடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது பின் பக்கம் வாசல் வழியாக ஒரு வாலிபர் வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

    அவர், ஜானகி அம்மாளின் கழுத்தில் இருந்த 3 ½ பவுன் தங்க செயினை பறித்து கொன்டு மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார். ஜானகி அம்மாள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நகை பறித்த வாலிபர் தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

    ×