என் மலர்
நீங்கள் தேடியது "வருவாய்த்துறை"
- சிறப்பாக பணி புரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான நவம்பர் மாதத்திற்கான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை நடந்தது.
இதில் சிறப்பாக பணி யாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு முதல் பரிசும், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் லோகநாதனுக்கு 2-ம் பரிசும், முன்னாள் ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் சீனிவாசனுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.
தனி வட்டாட்சியர்களில் (ச.பா.தி)சாத்தூர் தனி வட்டாட்சியர்நா.சீதா லட்சுமிக்கு முதல் பரிசும், சிவகாசி தனி வட்டாட்சியர் சாந்திக்கு 2-ம் பரிசும், அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியர் சிவக்குமாருக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.
முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவண க்குமாருக்கு முதல்பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி க்கு 2-ம் பரிசும், காரியா பட்டி மண்டல துணை வட்டாட்சியர் கருப்பசாமி க்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.
உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை வட்ட த்துணை ஆய்வாளர் மாரிமுத்துக்கு முதல் பரிசும், காரியாபட்டி வட்டத்துணை ஆய்வாளர் கார்த்தி கேயனுக்கு 2-ம் பரிசும், சிவகாசி வட்டத்துணை ஆய்வாளர் சுப்புராஜாவுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.
அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்ட சார் ஆய்வாளர் சுரேசுக்கு முதல் பரிசும், காரியாபட்டி வட்ட சார் ஆய்வாளர் கணேசன், ராஜபாளையம் வட்ட குறுவட்ட அளவர் ராஜீவ்காந்தி ஆகியோருக்கு 2-ம் பரிசும், விருதுநகர் வட்ட குறுவட்ட அளவர் பாண்டிசெல்வி, சாத்தூர் வட்ட குறுவட்ட அளவர் ராதா ருக்குமணி ஆகியோருக்கு 3-ம் பரிசும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திண்டிவனத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
விழுப்புரம்:
திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும்.
- வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
திருப்பூர் :
வருவாய்த்துறையில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும் , உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பதவி இறக்கம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர்களின் பதவி உயர்வு ஆணை களை விரைந்து வழங்கிட வேண்டும், வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வருவாய் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய் துறை ஊழியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூரிலும் வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக திருப்பூரில் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் இல்லாமல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
- மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சங்க மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ்முனியன் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- வருவாய்த்துறையை முறைப்படி, சரியாக இயக்காத தமிழக அரசு தான்.
- தமிழக அரசு, வருவாய்த்துறையில் பணியாளர்கள் விடுத்துள்ள பணி அழுத்தம் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு வருவாய்த்துறைக்கு பட்டா சம்பந்தமாக 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் வருடக்கணக்கில் பட்டா சம்பந்தமாக வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு சென்று வந்த, மனதளவில், பொருளாதார அளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களை இன்றைக்கும் நம்மால் பார்க்க முடிகிறது.
இதற்கெல்லாம் காரணம் வருவாய்த்துறையை முறைப்படி, சரியாக இயக்காத தமிழக அரசு தான். இந்நிலையில் வருவாய்த்துறையினர் விதிப்படி வேலை என்ற போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதாவது வருவாய்த்துறை அலுவலகங்களில் உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை பணிபுரியும் 14 ஆயிரம் பணியாளர்கள் அலுவலக நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும், விடுமுறை நாட்களிலும் பணியாற்ற போவதில்லை எனத்தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழக அரசு, வருவாய்த்துறையில் பணியாளர்கள் விடுத்துள்ள பணி அழுத்தம் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் தமிழக அரசு, வருவாய்த்துறை அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் அளிக்கும் நியாயமான கோரிக்கைகளுக்கும், மனுக்களுக்கும் காலத்தே விசாரணை நடைபெறவும், காலம் தாழ்த்தாமல் உரிய தீர்வு ஏற்படவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 2023-2024 நிதி ஆண்டின் 31.01.2024 வரையிலான வருவாய் ரூ. 1,01,234 கோடி.
- 2024-2025 நிதி ஆண்டின் 31.01.2025 வரையில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடி.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தலைமையில் இன்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், வணிகவரித் துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் 31.01.2024 வரையிலான வருவாய் ரூ. 1,01,234 கோடி. நிகழும் 2024-2025 நிதி ஆண்டின் 31.01.2025 வரையில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் 31.01.2025 வரை கூடுதலாக ரூ.12,001 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மேலும் ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவு 73ன் கீழ் 2017-2018, 2018-2019 (ம) 2019-2020 ஆகிய நிதி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட வரிவிதிப்பாணைகளில் எழுப்பப்பட்ட கேட்புகளில் நிலுவையிலுள்ள வரித்தொகையை 31.03.2025-க்குள் செலுத்தும் பட்சத்தில் நிலுவையிலுள்ள வட்டி மற்றும் தண்டத்தொகை தள்ளுபடி செய்யப்படுவதற்கான திட்டம் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தலின்படி நடைமுறையில் உள்ளது.
எனவே மேற்கண்ட வருடங்களுக்கு வரி நிலுவை பாக்கி வைத்துள்ள சம்பந்தப்பட்ட வணிகர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி, வரியை செலுத்தி, ஜிஎஸ்டி சட்டம் 2017-ன் பிரிவு 128A-இல் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வட்டி மற்றும் தண்டத்தொகை செலுத்துவதிலிருந்து தள்ளுபடி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் தங்களது கோட்ட இணை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
- வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சி யர்களில் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் ராஜகுமார் முதல் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டா ட்சியர் வெங்கடேஷ், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரங்கநாதன், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு 2-ம் பரிசும், திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார் 3-ம் பரிசும் பெற்றனர்.
சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர்களில் (ச.பா.தி) சிவகாசி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ஆனந்தராஜ் முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சீதாலட்சுமி 2-ம் பரிசும், ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ராம்தாஸ், திருச்சுழி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சிவக்குமார், விருதுநகர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ரமணன் ஆகியோருக்கு 3-ம் பரிசும் பெற்றனர்.
முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவ ணக்குமார் முதல் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கருப்பசாமி 3-ம் பரிசும் பெற்றனர்.
உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் விருதுநகர் வட்ட துணை ஆய்வாளர் சங்கரக்குமார் முதல்பரிசும், காரியாபட்டி வட்ட துணை ஆய்வாளர் ரைகான் 2-ம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் தங்கபாண்டியன் 3-ம் பரிசும் பெற்றனர்.
அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் விருதுநகர் நில அளவர் வாசிமலை முதல் பரிசும், சாத்தூர் சார் ஆய்வாளர் நாகவித்யா 2-ம் பரிசும், வெம்பக்கோட்டை சார் ஆய்வாளர் முனியராஜ் 3-ம் பரிசும் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராம சுப்ரம ணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவ லர்கள் மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.