என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுப்பள்ளி"

    • பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் பிளஸ்-1 மாணவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
    • படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.

    அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவர்களிடம் பெயிண்ட்டை கொடுத்து சுவரில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தனர்.

    மேலும் சாதி பாகுபாட்டுக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

    • சிங்கிலிபட்டி நடுநிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் யூனியன் சிங்கிலிபட்டி நடுநிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கிலிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை விஜயராணி முன்னிலை வகித்தார். தேவராட்டம், கரகாட்டம், கும்மி, இயற்கை விழிப்புணர்வு நாடகம், களிமண் உருவ பொம்மை செய்தல், பாட்டுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, நாட்டுப்புறப் பாடல் என பல்வேறு பிரிவுகளில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி அளவில் நடந்த இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ள வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் கனகராஜ், ஆசிரியர்கள் பிரியா, புனிதா, லீலா, சீதாலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • தொண்டி அருகே அரசுப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • யூனியன் சேர்மன் முகமது முக்தார், ஒன்றிய செயலாளர் சரவணன், கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட தினையத்தூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டு விழா திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கரு.மாணிக்கம் தலைமையில் நடந்தது.

    யூனியன் சேர்மன் முகமது முக்தார், ஒன்றிய செயலாளர் சரவணன், கவுன்சிலர் கணேசன் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் சிங்கத்துரை வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் புதிய கற்றல் அனுபவத்தைத் தருவது ஸ்மார்ட் வகுப்பறைகளாகும்.
    • படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கற்கும் போது மாணவர்கள் மனதில் காட்சிகளாக பதிவாகி விடுகிறது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படம் கற்பதில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் புதிய கற்றல் அனுபவத்தைத் தருவது ஸ்மா ர்ட் வகுப்பறை களாகும். எழுத்துக்கள் மூலம் கற்பதை விடவும் படங்கள் மற்றும் வீடியோ க்கள் மூலம் கற்கும் போது மாணவர்கள் மனதில் காட்சிகளாக பதிவாகி விடுகிறது. இது மாணவ ர்களின் கற்றல் அனுபவ த்தை எளிதாக்கு கிறது.மேலும் ஸ்மார்ட் வகுப்ப றைகள், கணினி, ப்ரொ ஜெக்டர் உள்ளிட்ட வசதி களு டன் இணையதள இணைப்பும் கொண்டி ருப்பது மாணவ ர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரி யர்களுக்கும் மிகப் பெரிய வரமாகும். மாணவ ர்க ளுக்கு தேவையான எல்லா விதமான தகவல்களையும் சில நொடிகளில் திரையில் கொண்டு வர இணையம் உதவுகிறது. ஆனால் இத்தகைய ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் ஒருசில தனியார் பள்ளிகள் மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறைகளைப் பயன்படுத்தி கற்பிக்கின்றன.

    இந்தநிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் அரசின் திட்டத்தில் ஒரு மைல் கல்லாக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரம் நகராட்சி ஆரம்ப மற்றும் நடுநிலை ப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் உடுமலை நகராட்சி 26 வது வார்டு டி.வி பட்டினம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொட ங்கப்ப ட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த வகுப்பறையை தி.மு.க. நகர செயலாளர் வேலுச்சாமி, நகர்மன்றத் தலைவர் மத்தீன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும் ஸ்மார்ட் வகுப்ப றைகள் இயக்கம் மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் கலைராஜன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் யுஎன்பி.குமார்,நகர் மன்ற உறுப்பினர் அஸ்வதி விக்ரம்,நகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே நடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை பேரணியை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.
    • விலையில்லாப் பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை நாலு கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ''நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் நம் எதிர்காலத்தை திட்டமிடுவோம்'' என்ற தலைப்பில் மாணவ-மாணவிகள் ஊர் முழுவதும் விழிப்புணர்வு பேரணியாக சென்று கோஷமிட்டனர்.

    சிவகங்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நாலுகோட்டையில் மாணவர் சேர்க்கை பேரணி ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் தலைமை யில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆனந்தி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் கனிமொழி, தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஆசிரியர்கள் பாப்பா வெள்ளத்தாய், பஞ்சுராஜ், லட்சுமி, ஜெகதாம்பிகை முன்னிலை வகித்தனர்.

    இதில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் கூறியதாவது:-

    இந்த பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காற்றோட்டமான கட்டிடம், சுகாதாரமான கழிவறை, தொழில் நுட்ப உதவியுடன் கல்வி கற்க கணினி வசதி, மின் வசதி, கியூ.ஆர். கோடு மற்றும் படவிளக்க தொலைக்காட்சியுடன் கல்வி சேனலில் கற்றல்- கற்பித்தல் வசதி உள்ளது.

    ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி, சரளமாக வாசிப்புத் திறனை வளர்க்க செய்தித்தாள், தேன்சிட்டு, நூலகம் வாசிக்கும் வசதி, ஆரோக்கியமாக கல்வி கற்க காலை உணவு, மதிய சத்துணவுத் திட்டம், பல்கலைத் திறன் வளர்க்க இலக்கிய மன்றங்கள், சிறார் திரைப்படம், வானவில் மன்றங்கள், கலைத் திருவிழா போட்டிகள், வென்றவர்களுக்கு வெளிநாடு கல்விச் சுற்றுலா செல்ல வாய்ப்பு, மாலை நேர கல்வி கற்க இல்லம் தேடிக் கல்வி, எதிர்கால கல்வி வழிகாட்டுக்கு நான் முதல்வன் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர வருவாய் மற்றும் சிறப்பு கல்வி திட்டம் விலையில்லா சீருடைகள், விலையில்லா காலணிகள், விலையில்லாப் பாடப் புத்தகம் விலையில்லா புத்தகப்பை வழங்கப்படுகிறது.

    வண்ணம் தீட்ட கலர் பென்சில் கிரையான்சுகள், நோட்டுகள், கணித உபகரண பெட்டிகள், நில வரைபடங்கள் பயிற்சி ஏடுகள், கணித செயல் பாடுகளை புதுப்பிக்க மகிழ் கணிதம்நிகழ்வு, கல்வி இணைச் செயல்பாடுகள் மூலம் பெண் குழந்தை களுக்கு யோகா, விளை யாட்டு, ஓவியம் மூலம் பன்முகத்திறன் வளர்க்கும் பயிற்சி, ஆடல், பாடல் விளையாட்டின் மூலம் 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி, 4.5 வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி வழியில் கற்பித்தல், 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்க ளுக்கு படைப்பாற்றல் கல்வி முறையில் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    ஆரம்பக் கல்வி முதல் அரசு பள்ளியின் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் உள் ஒதுக்கீடு, மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு, பல்கலைக் கழகங்களில் மாதம் ரூ.ஆயிரம் ஊக்க ஊதியம் என எல்லா வசதிகளும் நிறைந்த அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்திடுவோம் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி இந்த பேரணி சிறப்பாக நடந்தது.

    இதையடுத்து 15 பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நமது பள்ளி யில் சேர்ந்து படிக்க உறுதி அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிளஸ்- 1 முடித்து தற்போது பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வழங்கப்படவில்லை.
    • பஸ் வசதியில்லாத பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர்.

    திருப்பூர் :

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்களில் ஒன்றாக சைக்கிள் வழங்கப்படுகிறது.கிராமப்பகுதியில் இருந்தும் பஸ் வசதி இல்லாத இடங்களிலிருந்தும் வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு கல்வி கற்பதற்கான வழி ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு பின் இத்திட்டம் மாணவர்களுக்கு பயனில்லாத வகையில் பெயரளவில் மாறியுள்ளது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் பிளஸ்- 2 வகுப்புக்கு வந்த பின்தான் சைக்கிள் வினியோகிக்கப்பட்டது.தொடர் கோரிக்கைக்கு பின் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பு படிக்கும்போதே சைக்கிள் பெற்றுக்கொள்ளும் வகையில் திட்டம் விரைவுபடுத்தப்பட்டது.தற்போது சைக்கிள்கள் வினியோகிக்க தாமதமாவதோடு மேல்நிலை வகுப்பு முடிக்கும் நிலையில் தான் மாணவர்களுக்கு இத்திட்டம் சென்றடைகிறது. இதனால் எந்த பயனும் இல்லை என பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.கடந்த கல்வியாண்டில் பிளஸ்- 1 முடித்து தற்போது பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வழங்கப்படவில்லை.

    இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது :- மேல்நிலை வகுப்புகளுக்கு தடையாக இருப்பதில் முக்கியமானது போக்குவரத்து வசதிதான். அரசின் சார்பில் சைக்கிள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்தான், பஸ் வசதியில்லாத பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர்.இதுதவிர அவர்கள் சிறப்பு வகுப்புகள் செல்வதற்கும் தேர்வு நேரம் என பல்வேறு வழிகளில் சைக்கிள் பயணம் உதவுகிறது.ஆனால், அதையும் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு படித்து முடித்த பின் வழங்குவதில் எந்த பலனும் இல்லை.மாணவர்களை 100 சதவீதம் பள்ளிக்கு வர அறிவுறுத்தும் அரசு அவர்கள் வருவதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிர்ஆர். நாகராஜ் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என். விஜயகுமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
    • தற்போது12 வகுப்பறை மட்டுமே உள்ளதால் கூடுதலாக 6 வகுப்பறை நபார்டு திட்டத்தின் மூலம் கட்டித் தர ஆவணம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும் 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர். நாகராஜ் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என். விஜயகுமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சாமுண்டிபுரம் ஈ.பி.காலனி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 700-க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஆனால் தற்போது12 வகுப்பறை மட்டுமே உள்ளதால் கூடுதலாக 6 வகுப்பறை நபார்டு திட்டத்தின் மூலம் கட்டித் தர ஆவணம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அத்துடன், தற்போது நடுநிலைப்பள்ளியாக உள்ளது. இதனை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர பரிந்துரை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்கிறது.
    • தலைமை ஆசிரியர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    தாராபுரம்:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்தின், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக மையம் (என்.ஐ.இ.பி.ஏ.,) ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்கிறது. 2017 முதல் ஆண்டுதோறும் மதிப்பீட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒவ்வொரு பள்ளி நிர்வாகங்களும், அடிப்படை வசதி குறித்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பாக இது அமைகிறது. நடப்பாண்டுக்கான சுயமதிப்பீட்டு பணிகளை ஒவ்வொரு பள்ளிகளும் துவங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாநில திட்ட இயக்குனரிடம் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    அதில் பள்ளியில் உள்ள வகுப்பறை, நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கம்ப்யூட்டர், மின்சார வசதி, மதிய உணவு பொருட்கள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்டவை குறித்து இம்மாதம் 30-ந் தேதிக்குள் சுயமதிப்பீடு செய்ய வேண்டும். மேலாண்மை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து வட்டார அளவிலான கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் குழு மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    அதற்கேற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளை தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • குஜராத் அரசுத் தொடக்கப்பள்ளியில் பாவனா பட்டேல் ஆசிரியராக உள்ளார்.
    • வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் புகார் அளித்துள்ளார்.

    குஜராத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தபடி கடந்த 8 ஆண்டுகளாக மாதந்தோறும் அரசு சம்பளம் வாங்கி வந்தது அம்பலமாகியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பஞ்சா என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசுத் தொடக்கப்பள்ளியில், பாவனா பட்டேல் ஆசிரியராக உள்ளார்.  

    ஆனால் பாவனா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிவிட்டதாகவும் வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பருல் மெஹ்தா மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார்.

     

    அந்த புகாரில், அமெரிக்காவில் குடியேறிய பாவனா பட்டேல், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாத சம்பளத்தை பெற்று வருவதாகவும், அவர் முறையாக பள்ளிக்கு வராததால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிரபுல் பன்சேரியா உறுதியளித்துள்ளார்.   

    • மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் அரசுப்பள்ளியில் நிகழ்ச்சி நடந்துள்ளது.
    • மூடநம்பிக்கையை விதைக்கும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை எப்படி அனுமதி அளித்தது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறது.

    இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அந்நிகழ்ச்சியில் பேசுபவர், "போன ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவத்தின் அடிப்படையில் இந்த ஜென்மத்தில் பிறவி எடுத்துள்ளீர்கள். அதனால் தான் ஒருவர் கோடீஸ்வரனாகவும் ஒருவர் ஏழையாகவும் பிறக்கிறார். நம் நாட்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குருகுலங்கள் இருந்தன. அவை அனைத்தும் அழிக்கப்பட்டன.

    ஒரு மந்திரத்தை படித்தால் நெருப்பு மழை பொழியும். ஒரு மந்திரத்தை படித்தால் நோய்கள் குணமாகும். ஒரு மந்திரத்தை படித்தால் பறந்து போகலாம். அத்தனை மந்திரங்களும் பனையோலையில் எழுதப்பட்டிருந்தது. பிரிட்டிஷார் இதை அனைத்தையும் அழித்து விட்டனர்" என்று தெரிவித்தார்.

    இத்தகைய மூட நம்பிக்கை பேச்சிற்கு அங்குள்ள ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க "பாவம் புண்ணியங்களை போதிக்காமல் ஒருவருக்கு எப்படி வாழ்வியலை போதிக்க முடியும்" என்று அவர் பதில் அளிக்கிறார்.

    பள்ளிகளில் அறிவியலையும், பகுத்தறிவையும் போதிப்பதற்கு மாறாக, மூடநம்பிக்கையை விதைக்கும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை எப்படி அனுமதி அளித்தது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • கடந்த கால பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது.
    • மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது.

    சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மகாவிஷ்ணு என்பவர் 2 அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினார் . கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியிருக்கிறார்.

    யாருடைய அனுமதியில் இதுபோன்ற சொற்பொழிவாளரை அரசு பள்ளிகளுக்குள் அனுமதித்தார்கள் என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு என்ற நபர் மூலம் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது.
    • பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாணவர் அமைப்பினர் கோரிக்கை.

    சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மகாவிஷ்ணு என்பவர் அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார்.

    இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்ற அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    மகாவிஷ்ணு என்பவர் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை விதைத்தாக கூறி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அரசு பள்ளியில் மகாவிஷ்ணுவை பேச அனுமதித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாணவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    பள்ளியில் மகாவிஷ்ணு பேசுவதை தட்டிக்கேட்ட ஆசிரியரை மகாவிஷ்ணு அவமதிக்கும் வகையில் பேசியதாக மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பள்ளி மாணவர்களிடையே மூட நம்பிக்கை விதைக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    ×