என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அடிப்படை"
- பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
- பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் துணை தலைவி ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர்கள் சுபாஷ், மகேஷ், சுஜா அன் பழகன், நித்யா, ராயப்பன், சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா, சகாய சர்ஜினாள் பிரைட்டன், பூலோகராஜா, ஆட்லின் சேகர், டெல்பின் ஜேக்கப், சுகாதார அதிகாரி முருகன், இளநிலை உதவியா ளர் சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கன்னியா குமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை அய்யப்பன் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை 3 மாத காலம் அமலில் இருக்கும்.
இந்த சீசன் காலத்தை யொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணி களுக்கு குடிநீர், சாலை, மின்விளக்கு சுகாதாரம், கழிப்பிடம் மற்றும் வாகன பார்க்கிங் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதி களையும் செய்து கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த சீசன் காலங்களில் கன்னியா குமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை சிலுவைநகர் வழியாக கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதியில் உள்ள பயோ மைனிங் பகுதியில் நிறுத்து வதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளி லும் ரூ.5 கோடி செலவில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்ப ணிகளை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது.
- தங்களது பெயர்களை செதுக்குவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மலைக்கோட்டை அதன் பொலிவை இழந்து வருகிறது.
நாமக்கல்:Namakkal District News,
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. இக்கோட்டையின் ஒருபுறம் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அதுபோல, கோட்டையின் மற்றொரு புறம் ரங்கநாதர் சந்நிதி உள்ளது.
மலைக்கோட்டையின் கீழ்ப் பகுதியில் குளம் மற்றும் பூங்கா உள்ளது. புராதன சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கோயில், குளம் ஆகியவற்றின் அழகைக் கண்டு ரசிக்க தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் மலைக்கோட்டைக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகம் இருக்கும்.
அவ்வாறு வரும் மக்கள் மலைக்கோட்டைக்கு சென்று பழமை வாய்ந்த திப்புசுல்தான் கோட்டை, ஆயுதக் கிடங்கு, குளம், தானியக் கிடங்கு உள்ளிட்ட இடங்களைக் கண்டு மகிழ்வர். இந்நிலையில், மலைக்கோட்டைக்கு மக்கள் அதிகளவில் வந்தாலும் அங்கு பாதுகாப்பு வசதி குறைவாக உள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதவது:-
மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலத்தில் அத்துறை சார்பில் காவலர் ஒருவரை நியமித்து கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வந்தனர். சில ஆண்டுகளாக அங்கு காவலர் யாரும் இல்லை.இங்கு வருவோர் மலைக்கோட்டை சுவர் மீது எழுதுவது மற்றும் கற்களைக் கொண்டு தங்களது பெயர்களை செதுக்குவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மலைக்கோட்டை அதன் பொலிவை இழந்து வருகிறது. இதைத் தடுக்க தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அங்குக் காவல் பணிக்கு ஊழியரை நியமிக்க வேண்டும். அதுபோல குற்றச்செயல்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு ,கேமரா வைக்க வேண்டும் என்றனர்.
- சேலம் 29-வது வார்டு பகுதியில் மேயர், ஆணையாளர் ஆய்வு செய்தனர்.
- பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் வார்டு எண்.29-ல் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ரத்தினசாமிபுரம், நாராயணசாமிபுரம், அரிசிப்பாளையம், தம்மண்ணன் ரோடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பழுது ஏற்பட்டு உள்ளதையும், போர்வெல் பழுது ஏற்பட்டு இருப்பதையும் ஆய்வு செய்த மேயர் உடனடியாக பழுதுகளை நிவர்த்தி செய்து அந்த பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கிடவும், பழைய குடிநீர் குழாய்களை அகற்றி புதிதாக அமைக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் சாலையில் இருபுறமும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைத்திடவும், ஏற்கனவே உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரி கழிவுநீர் முறையாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறுவுறுத்தினார்.
சிலபகுதிகளில் குப்பை தொட்டிகளை வைத்திடவும், மாநகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்திட வேண்டும்
- சேலம் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.
- சென்னை வருவாய் நிர்வாக ஆணையரான கூடுதல் தலைமை செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் அரசு கலை கல்லூரி 1857-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் இந்த கல்லூரி சேலத்தின் அடையாள சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த கல்லூரியில் கழிப்பிட வசதிகள், குடிநீர், சாக்கடை வசதி , பழுதடைந்த மின் விளக்குகள், மற்றும் கட்டிடங்கள் குறித்தும், புதிய பாடப்பிரிவுகள், கட்டிடங்கள், பேராசிரியர்கள் பணியமைப்பு ஆகியவைகள் குறித்து சேலம் மாவட்ட கலெக்டரின் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் குழு அமைத்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் புவனேஸ்வரி என்பவர் தமிழக ஆளுநரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அதன் அடிப்படையில் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலகம் சேலம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தொடர்புடைய அலுவலர்களை ஒருங்கிணைத்து கூட்டாய்வு மேற்கொள்வதுடன் அந்தந்த துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன் அறிக்கையினை சமர்பிக்குமாறு சேலம் மாவட்ட கலெக்டருக்கு சென்னை வருவாய் நிர்வாக ஆணையரான கூடுதல் தலைமை செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்