என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்திய ஜனநாயக கட்சி"
- உங்களை தேடி வாக்குகளை கோரி வந்துள்ளேன்.
- 1200 மாணவர்களை இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆக்கியுள்ளதாக தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது அய்யர்மலை என்ற இடத்தில், டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க, அ.ம.மு.க, பா.ம.க, த.மா.கா, ஓ.பி.எஸ் அணி, தமிழர் தேசம் கட்சி, மக்கள் ராஜ்ஜியம் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் பேசிய டாக்டர் பாரிவேந்தர், உங்களை தேடி வாக்குகளை கோரி வந்துள்ளேன் - தவறாமல் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார். முந்தைய தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி ஆயிரத்து 200 மாணவர்களை இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆக்கியுள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் எம்பியாக தேர்வான பின்னர் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என்று டாக்டர் பாரிவேந்தர் பேசினார். வரும் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கு இடமளிக்காமல், நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டார்.
- தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது, குறும்பர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று பாரிவேந்தர் உறுதியளித்தார்.
- அனைவரும் டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் எம்.பியாக வெற்றிபெறச் செய்வோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில், தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு, பொதுமக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. மேலும், டாக்டர் பாரிவேந்தருக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திருச்சி SRM ஹோட்டல் வளாகத்தில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மத்திய மண்டல தலைவர் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட தலைவர் நித்யா நடராஜன், செயலாளர் உமாபதி மற்றும் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் தொகுதியில் செய்த நற்பணிகள் அடங்கிய புத்தகத்தை, டாக்டர் பாரிவேந்தர், விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
குறும்பர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து S.T. பிரிவுக்கு மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று, பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்துள்ளார்.
இந்திய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் தொகுதியில் IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு திரட்டி வருகிறார். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் குல தெய்வமாக விளங்கும் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலுக்கு வருகை தந்தபோது, அவருக்கு, தமிழ்நாடு குறும்பர் முன்னேற்ற சங்கத்தின் செயல் தலைவர் உதகை செங்குட்டுவன் மற்றும் கோயில் நிர்வாக தலைவர் தர்மராஜ் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, கோயிலில் மகாலெட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகாலெட்சுமி அம்மனை டாக்டர் பாரிவேந்தர் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தார். டாக்டர் பாரிவேந்தருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் விருப்பத்தின் பேரில் அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். மிகவும் தொன்மையான இக்கோயிலில், பல பேருக்கு இலவசமாக திருமணம், அன்னதானம் வழங்கப்பட்டு வருவதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். குறும்பர் சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான MBC யிலிருந்து ST பழங்குடியினர் வகுப்புக்கு மாற்றுவதற்கான கோப்புகள், மத்திய அரசிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது, குறும்பர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று பாரிவேந்தர் உறுதியளித்தார்.
டாக்டர் பாரிவேந்தரின் இலவச உயர் கல்வி திட்டத்தால் தன்னை போன்ற ஏழை எளிய மக்களின் கனவு நனவாகியதாக தெரிவித்துள்ள SRM பல்கலைக்கழகத்தில் பயிலும் துறையூரை சேர்ந்த மாணவி அகல்யா, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் எம்.பியாக வெற்றிபெறச் செய்வோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
2019 தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் பாரிவேந்தர், மகாலெட்சுமி திருக்கோயிலில் அஷ்டலட்சுமி பிரதிஷ்டை செய்தபோது நன்கொடை வழங்கியதாகவும், தங்கள் வாக்குகள் அனைத்தும் டாக்டர் பாரிவேந்தருக்குதான் என்றும் கலைச்செல்வி என்பவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ராகவி என்பவர், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் சமுதாய மக்கள் டாக்டர் பாரிவேந்தரின் வெற்றிக்கு பாடுபடுவதாகவும், தங்களுடைய ஆதரவு அவருக்குதான் எனவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், I J K முதன்மை அமைப்புச் செயலாளர் S.S.வெங்கடேசன், முதன்மைச் செயலாளர் சத்தியநாதன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்து டெல்லிக்கு அனுப்புனீர்கள்.
- நீங்கள் அனுப்பிய உணர்வும், நியாயமும் வீண்போகவில்லை.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், நேற்று பொரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட கல்பாடி, சிறுவாச்சூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-
வருகிற 19ம் தேதி பாராளுமன்ற தேர்தலில் உங்களின் பொண்ணான வாக்கை தாமரை சின்னத்திற்கு வாக்கு அளித்து வெற்றிப் பெற செய்ய வேண்டும்.
கல்பாடி என்பது நெகிழ்ச்சி தரக்கூடிய கிராமமாக உள்ளது. அதேபோல, இங்கு கூடியிருக்கும் மக்களின் முகத்தில் உள்ள சிரிப்பை பார்க்கின்றபோது நம்பிக்கை பிறக்கிறது.
நீங்கள் வேறு யாருக்கு வாக்குத்தர முடியும் என்று யோசித்து பாருங்கள். 2019ம் தேர்தலின்போது, பல ஊருக்கு சென்றிருக்கிறேன். உங்களை சந்தித்திருக்கிறேன். வாக்கு கேட்டிருக்கிறேன்.
அப்போது, மக்கள் எனக்கு கொடுத்த வாக்கு என்ன தெரியுமா? 6,83,000 வாக்குகள். 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்து டெல்லிக்கு அனுப்புனீர்கள். டெல்லிக்கு சென்று எங்கள் ஊரின் நிலைமையை சொல்லி நிதி கொண்டு வர அனுப்புனீர்கள்.
நீங்கள் அனுப்பிய உணர்வும், நியாயமும் வீண்போகவில்லை. மீண்டும் வந்திருக்கிறேன் என்றால் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் கேட்டதை செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.
அனைவரின் வீட்டிலும் புத்தகம் வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தில், எத்தனை முறை, எதற்காக எந்த அமைச்சரை சந்தித்து, பிரதமர் மோடியை சந்தித்து முதல் கொண்டு இதில் இடம்பெற்றிருக்கிறது.
அதை படித்தால், பாராளுமன்ற உறுப்பினர் சரியாகதான் செய்துக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.
அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் இந்த நகரங்களை இணைக்கும் ரெயில் பாதை தேவை என 50 ஆண்டு காலமாக முயற்சி செய்துக் கொண்டீர்கள்.
அதற்கான கோப்புகளை கொண்டு பிரதமரிடம் சென்றேன். உடனே ரெயில்வே அமைச்சரை அழைத்து விசாரித்தார். அதற்கு 1000 கோடி ஆகும் எனவும் அதில் முதலீடு செய்தால் லாபம் வராது என ரெயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
மோடியின் உத்தரவை அடுத்து, 2024 முழு பட்ஜெட்டில் 1000 கோடி நிதி ஒதுக்கப்பட இருக்கிறார்கள். இது எனக்கும் மன நிறைவு.
இதுபோன்று, மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேவகோட்டை ரூசோ நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
- மதுரை மாநகர மாவட்ட இணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
சிவகங்கை மாவட்ட முன்னாள் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ரூசோ 25-வது நினைவு தினத்தையொட்டி தேவகோட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் தலைவர், ஐ.ஜே.கே. முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கட்சியினர் ஊர்வலமாக சென்று ரூசோ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் வரதராஜன், இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் செயலாளர் லீமாரோஸ் மார்ட்டீன், துணைத் தலைவர் இளவரசி ஜெரோம், மாநில போராட்ட குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ், மகளிரணி துணைச் செயலாளர் சகிலா புரோஸ், இளைஞரணி துணை செயலாளர் செந்தூர் பாண்டி, மதுரை மாநகர மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான் பெனடிக்ட், மதுரை மாநகர மாவட்ட இணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேர்தல் நேரத்தில் நடைபெறும் இந்தக் கூட்டம் ‘ஐஜேகே' வின் ஒரு சிறிய முன்னோட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கலந்து கொண்டார்.
சென்னை:
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் தலைமை வகித்தார். அ.தி.மு.க. சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலு மணி, கட்சியின் பொருளாளர் ஜி.ராஜன், மாநில பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன், துணைத்தலைவர் ஆனந்த முருகன், துணை பொதுச்செயலாளர் நெல்லை ஜி.ஜீவா, மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின், அ.தி.மு.க. அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன், முன்னாள் தலைவர் கோவை தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பாரிவேந்தர் எம்.பி. பேசியதாவது:-
"தேர்தல் நேரத்தில் நடைபெறும் இந்தக் கூட்டம் 'ஐஜேகே' வின் ஒரு சிறிய முன்னோட்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகஸ்ட் 24-ந் தேதி சேலத்தில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இதே வளாகத்தில்தான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரவிபச்சமுத்து கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 'மகன் தந்தைக்கு ஆற்றும் கடமை' என்பது போல் என் மகனால் எனக்கு எப்போதுமே பெருமை வந்து சேரும்" என்றார்.
சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
"மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் கூட்டணி வருமா, வராதா என்கிற நிலையை மாற்ற தான் இந்த கூட்டம்.
பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஒருசேர அழைத்து வந்து எதிர்க்கட்சிக்கு தற்போது செய்தியாக அறிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு தமிழகத்தில் அசைக்க முடியாத கூட்டணி வரும். பாரிவேந்தர் அதனை தற்போது முன்னெடுத்து உள்ளார்" என்றார்.
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து பேசியதாவது:-
"இளைஞர்களுக்காக பல சேவைகளையும் தொண்டுகளையும் பாரிவேந்தர் கல்வியாளராக செய்துள்ளார். அவருக்கு என்றுமே பணத்தின் மீது ஆசை இருந்ததே இல்லை. எந்தவொரு தொழில் தொடங்கும்போதும் அவர் பணம் குறித்து கவலைப்பட்டதும் இல்லை. சுயநலம் இல்லாத அவரிடம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் அன்பு செலுத்தி வருகின்றனர். அவர் அரசியலுக்கு வந்ததன் முக்கிய நோக்கமே, ஒரு கோட்பாட்டை உருவாக்கி, ஓர் அடையாளமாக இருக்க வேண்டும் என்றுதான்.
நடுத்தர மக்களுக்கும் அரசியல் தேவை. அரசியல் என்றால் அடுத்தவரை திட்ட வேண்டும் என்பது கிடையாது. இது எங்கள் கட்சியின் கொள்கையாகும். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்களை ஒருங்கிணைத்து இந்த பிரமாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கான விளம்பரங்களை முன்னெடுத்து சிறப்பாக ஒருங்கிணைத்த விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ் அவர்களுக்கு நன்றி " என்றார்.
- குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும்
- சொத்து வரி உயர்வை உடனடியாக குறைத்திட வேண்டும்
குனியமுத்தூர் :
மின்கட்டண உயர்வை கண்டித்தும், கட்டிட பொருட்கள் விலை உயர்வை எதிர்த்தும், உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை எதிர்த்தும், கோவை மேட்டுப்பாளையம் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் தலைமை வகித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும், சொத்து வரி உயர்வை உடனடியாக குறைத்திட வேண்டும் என்றார். இதில் கோவை மாவட்ட மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் குளோரி ஜான்பிரிட்டோ, கோவை மாவட்ட மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நூர் பாத்திமா, கோவை மாநகர மாவட்டத் தலைவர் வடக்கு மண்டலம் பி.கே.அந்தோணிசாமி, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எர்னஸ்ட் ராபின், கோவை மாநகர மாவட்ட தலைவர் முத்துச்செல்வம், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் முருகேசன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்களும், தொழில்களும் பாதிப்படையும்
- மத்திய, மாநில அரசுகளின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் :
தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் மத்திய அரசு பால், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்தை கண்டித்தும்,உடனடியாக உயர்த்தப்பட்ட வரி மற்றும் மின் கட்டணத்தை திரும்ப பெறக் கோரி திருப்பூர் ரயில்நிலையம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்களும், தொழில்களும் பாதிப்படையும்.இதே போல் மத்திய அரசு அரிசி பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.மத்திய மாநில அரசுகளின் இச்செயலை கண்டித்து திருப்பூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பாரி கணபதி தலைமையில்,திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சோனை முத்து,மாவட்டத்துணைத் தலைவர் முருகேசன், பொருளாளர் சக்திவேல், இளைஞரணி முருகன், மாணவரணி வேலுச்சாமி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
- பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும்
- ஆன்லைன் ரம்மி, லாட்டரியை தடை செய்ய வேண்டும்
நாகர்கோவில்:
பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும், ஆன்லைன் ரம்மி, லாட்டரியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் லீலா பாய் தலைமை தாங்கினார். தென் மாநில இணைச்செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட தலைவர் பாபா காசிம் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்