என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆா்ப்பாட்டம்"
- போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக்கி, ஊதியம், ஓய்வூதியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.
- ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளா்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-.
சென்னையைத் தவிா்த்து விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம், வாயிற் கூட்டம் நடத்தப்படும். ஜூன் 18-ந்தேதி மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் மூலம் ஊழியா்களின் முக்கிய பிரச்சனைகளை போக்குவரத்துக்கழக நிா்வாகங்களுக்கு வலியுறுத்த உள்ளோம்.
போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக்கி, ஊதியம், ஓய்வூதியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். 2022-ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வு கால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓட்டுநா், நடத்துநா்களைத் தாக்குவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
காவல்துறை, ஓட்டுநா் பிரச்சனைக்கு தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைப்போம். இதை அரசு விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழக அரசை விமா்ச்சித்ததாக இந்து முன்னணி பொறுப்பாளா்கள் 10க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
- காவல் துறையினரின் தடையை மீறி இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த சில நாள்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. அப்போது அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசை விமா்ச்சித்ததாக இந்து முன்னணி பொறுப்பாளா்கள் 10க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
இதைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்திருந்தனா். இந்த நிலையில், காவல் துறையினரின் தடையை மீறி இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், மாநில பொதுச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா், மாநிலச் செயலாளா் சி.பி.சண்முகம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கைது செய்து தாராபுரம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.
- ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
- பெண்களுக்கான ஓய்வூதிய வயதை 55-ஆக நிா்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் முத்துவிஜயன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலை வா் சந்தானம் ஆா்ப்பாட்டதை தொடங்கி வைத்தாா்.
நிா்வாகிகள் குருவேல், சுடலைகாசி, மணிகண்ணு, வாசுதேவன் ஆனந்த், ஞான சேகா், மாா்க்சிஸ்ட் தாலுகா செயலாளா் செல்வராஜ், மாவட்டச் செயலாளா் சிவாஜி ஆகியோா் பேசினா்.
இதில், தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களின் பணப்பலன்களை இரட்டிப் பாக்க வேண்டும். பெண்களுக்கான ஓய்வூதிய வயதை 55-ஆக நிா்ணயம் செய்ய வேண்டும். மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தாா் கலவை தொழிற்சாலையை அகற்றக்கோரி போராட்டம் நடந்தது.
- நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஊட்டி,
தேவாலா பஜாரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் தலைமை வகித்தாா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: கூடலூா் வட்டம், தேவாலா, போக்கா் காலனியில் தாா் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும்
நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த ஆலையை இப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்."
- குற்றச் சம்பவங்களைத் தடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .
- குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய வேண்டும்.
அவிநாசி :
குற்றச் சம்பவங்களைத் தடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் தலித் விடுதலை கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் சகுந்தலா தங்கராஜ் தலைமை வகித்தாா்.தலைமை நிலையச்செயலாளா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் எம்.பி. செங்கோட்டையன் உரையாற்றினாா்.
அவிநாசியில் நடைபெற்று வரும் தொடா் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.இதில் மாவட்ட துணைச் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- ஊதியூா் வனப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தை சுற்றி வருகிறது.
- மாடு, நாய்கள், ஆடுகள், கோழிகளை கொன்று வருகிறது.
காங்கயம் :
காங்கயம் அருகே ஊதியூா் வனப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் பிடிக்க வலியுறுத்தி காங்கயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி, பொதுச்செயலாளா் முத்துவிஸ்வநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் காங்கயம் வட்டம், ஊதியூா் வனப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தை சுற்றி வருகிறது. சிறுத்தை திடீரென விவசாயிகளின் நிலப் பகுதிக்குள் நுழைந்து மாடு, நாய்கள், ஆடுகள், கோழிகளை கொன்று வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழும் நிலையில் உள்ளனா். எனவே வனத் துறையினா் கூடுதல் கவனம் செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிா்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
- ஊராட்சி செயலாளா் மிரட்டல் விடுத்துள்ளாா்.
- 10 ரூபாய் இயக்கம் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருப்பூர் :
ஆா்டிஐ. ஆா்வலா்கள் பாதுகாப்பு குழு சாா்பில் திருப்பூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சமூக ஆா்வலா் மோகன் தம்பி தலைமை வகித்தாா்.ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:-
அவிநாசி ஒன்றியம், கருவலூா் ஊராட்சியில் ஆா்டிஐ சட்டத்தில் (தகவல் அறியும் உரிமை சட்டம்) தகவல் கேட்டவரை தொடா்பு கொண்டு ஊராட்சி செயலாளா் மிரட்டல் விடுத்துள்ளாா். ஆகவே ஊராட்சி செயலாளா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், 10 ரூபாய் இயக்கம் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
- 10 பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
- கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
தருமபுரி,
தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு ,பால் விலை உயர்வு ,சட்டம் ஒழுங்கு சீர்கெடு உள்ளிட்டவைகளை கண்டித்து தருமபுாி மாவட்டம் முழுவதும் 10 பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளா் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
இதில் அ.தி மு க நிர்வாகிகள் பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார், தருமபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் என்.ஜி.எஸ். சிவப்பிரகாசம், உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.
பின்னா் பேசிய கே.பி.அன்பழகன் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து சொத்து வாிஉயர்வு. மின்கட்டண உயா்வு, பால் விலை உயா்வு என அடிமட்ட மக்களின் வாழ்வதாரம் பாதிக்கும் வகையில் உள்ளது என்றும் உடனடியாக இவற்றை அரசு திரும்ப பெறவேண்டும் என பேசினாா்.
- 10 பேரூராட்சிகளில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
- அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி,
தி.மு.க. அரசின் சொத்துவரி, மின்கட்டண உயர்வு ,பால் விலை உயர்வு ,சட்டம் ஒழுங்கு சீர்கெடு உள்ளிட்டவைகளை கண்டித்து தருமபுாி மாவட்டம் முழுவதும் 10 பேரூராட்சிகளில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காாிமங்கலம், மாரண்ட அள்ளி, பாலக்கோடு பேரூராட்சிகளின் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளா் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். பின்னா் பேசிய அமைப்பு செயலாளா் கே.பி.அன்பழகன் பேசும்போது தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து சொத்து வாி மின்கட்டண உயா்வு பால் விலை உயா்ந்து அடிமட்ட மக்களின் வாழ்வதாரம் பாதிக்கும் வகையில் உள்ளது என்றும் உடனடியாக தி.மு.க. அரசு திரும்ப பெறவேண்டும் என பேசினாா்.
- நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
மோட்டாா் வாகனச் சட்டத்தை நடை முறைப்படுத்தக் கூடாது. சட்டப் பேரவையில் இதற்கான தீா்மா னத்தை நிறைவேற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்றது.
- 2022 ஜன.1-ந் தேதியை கணக்கிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்.
நாமக்கல்:
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சின்னுசாமி தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா் காளியப்பன் தொடக்க உரையாற்றினாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; மின்சார சட்ட மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
2022 ஜன.1-ந் தேதியை கணக்கிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்; மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் நிபந்தனைகளை அகற்றி, அனைத்து நோய்களுக்குமான சிகிச்சைக்கும் காப்பீட்டு நிறுவனங்களே செலவுத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
- நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
- சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மணகெதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உடையாா்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிக்கு அப்பகுதி கிராம பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்தச் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் சுங்கச்சாவடி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.அப்போது, சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அன்றாட தேவைக்காகவும், விவசாயப் பயன்பாட்டுக்காகவும் சுமைஆட்டோ உள்ளிட்ட பல்வேறு நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனா். தினமும் சுங்கச் சாவடியை கடந்து வயல்பகுதிக்கு செல்லும் போதெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இச்சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்