search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ள சாராயம்"

    • 5 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை,

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை யிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சின்னமூக்கனூர் அருகே உள்ள சாமியார் கொட்டை பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த பாக்கியராஜ் (வயது 35) என்பவரை பிடித்து 30 மது பாட்டில்களையும் 5 லிட்டர் கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    அச்சமங்கலம் கீழ் தெரு பகுதியில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ரவி (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களையும் 5 லிட்டர் கள்ளசாரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ள சாராயம், மது விற்ற இதே போன்று பழைய ஜோலார்பேட்டை, கடை தெரு பகுதியில் திலீப் குமார் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 58 லிட்டர் கள்ள சாராயத்தையும் 30 மது பாட்டில்கள் என மொத்தம் 100 மது பாட்டில்களையும் 68 லிட்டர் கள்ளசாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கள்ள சாராயத்தை ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • 91500 11000 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

    விருதுநகர்

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    இதைத்தொடர்ந்து கள்ள சாராயத்தை ஒழிக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து ஏராளமா னோரை கைது செய்துள்ளது.

    வடமாவட்டங்களில் தற்போது கள்ள சாராய விற்பனை இருக்கும் நிலையில் தென் மாவட்டங் களில் கள்ள சாராயம் 90 சதவீதம் ஒழிக்கப்பட்டு ள்ளது. இதற்கு கடந்த காலத்தில் நடந்த கள்ள சாராய சாவுகளே காரணம்.

    கடந்த 1995-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கள்ள சாராயம் குடித்து 27 பேர் பலியாகியுள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கள்ள சாராய சாவு நிகழ்ந்த பின் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க போலீசார் அப்போது தீவிர நடவ டிக்கை எடுத்தனர். விருது நகர் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போலீசார் கள்ள சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கள்ள சாராய தீமை குறித்து பொதுமக்களிடம் விழிப் பணர்வு ஏற்படுத்தப் பட்டது.

    தென் மாவட்டங்களில் கள்ள சாராயம் தலை தூக்காமல் இருக்க மாவட்ட போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்பவர்களையும், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பவர்க ளையும் போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற தொடர் நடவடிக்கை காரணமாக தென் மாவட்டங்களில் வெகுவாக கள்ள சாராய விற்பனை தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்டத்தில் எங்கேனும் கள்ள சாராயம் தயாரித்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ள சாராயம் தொடர்பாக 91500 11000 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 2 மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.
    • காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஒக்கூர் வடக்குத்தெருவை சேர்ந்த செல்லையன் மகன் சதீஷ்குமார் (வயது 26) ஒக்கூர் தெற்குத்தெருவை சேர்ந்த செல்லையன் மகன் பிரபு (வயது 28) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    திட்டச்சேரியில் சாராயம் கடத்தி கைது செய்யப்பட்ட–வர்களையும் சாராயம் மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் படத்தில் காணலாம்.

    • மாரிமுத்து 5 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் கள்ளச்சாராயத்தை தொண்டமாந்துறை கிராமத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்.
    • ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் மாரிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா காரியானூர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது 26). இவர் 5 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் கள்ளச்சாராயத்தை தொண்டமாந்துறை கிராமத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்.

    அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் மாரிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த கள்ளச்சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். பின்னர் மாரிமுத்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • விழிப்புணர்வு பேரணி கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது.
    • பேரணியில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள், உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுகள் கலைக்குழுவினர் மூலம் ஆடல், பாடல் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டையில் வருவாய்த்துறை சார்பில் கள்ளச் சாராயத்திற்க்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    விழிப்புணர்வு பேரணிக்கு புதுக்கோட்டை கோட்ட கலால் ஆணையர் கண்ணகருப்பையா தலைமை தாங்கினார்.கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன் முன்னிலை வகித்தார்.

    விழிப்புணர்வு பேரணி கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது.

    விழிப்புணர்வு பேரணியில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள், உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுகள் கலைக்குழுவினர் மூலம் ஆடல், பாடல் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு பேரணியில் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடியில் கல்லச்சாரயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கள்ளச்சாரயத்தை ஒழிப்போம் என்ற வாசகத்துடன், கள்ளச்சாராயம் காய்ச்சி குடிப்பது பெரு அவமானம் என பேனர்கள் கையில் ஏந்தியபடிக்பேரணி நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு ஆணைக்கிணங்க கள்ளசாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. பேரணிக்கு ஆலங்குடி தாசில்ல்தார் செந்தில்நாயகி தலைமை வகித்தார்.

    விழிப்புணர்வு பேரணி தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கி அரசமரம்,வடகாடுமுக்கம், காமராஜர்சிலை, பழைய நீதிமன்ற வளாகம் ஆகிய வழியாக மீண்டும் தாலுகா அலுவலகம் வந்தடைந்தது.

    புதுக்கோட்டை கலால் தனி வட்டாட்சியர் கண்ணாகருப்பையா ஆலங்குடி சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் ஆலங்குடி தாசில்தார் பஸ் ஸ்டாண்டில் நின்ற பேருந்துகளிடம் ஏறி கள்ளச்சாரயத்திற்கு எதிரான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

    கள்ளச்சாராயத்துக்கு எதிரான தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழக்கத்தோடு ஒழிப்போம் ஒழிப்போம் கள்ளச்சாரயத்தை ஒழிப்போம் என்ற வாசகத்துடன், கள்ளச்சாராயம் காய்ச்சி குடிப்பது பெரு அவமானம் என பேனர்கள் கையில் ஏந்தியபடிக்பேரணி நடைபெற்றது.

    பேரணியில் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×