search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழு கூட்டம்"

    • தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • கிராமத்தை நிராகரிக்கப்பதாக குற்றச்சாட்டு

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ரவிச்சந்திரன், சுரேஷ் சௌந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அன்வதிர்க்காண் பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் குமார்:-

    என்னுடைய ஊராட்சியில் எந்த ஒரு பணிகளையும் சரிவர நிறைவேற்றுவதில்லை. மேலும் அன்வதிர்க்கான் பேட்டை ஊராட்சியை நிராகரிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

    கூட்டத்தில் தாராதகேஸ்வரி, பாலன், நாராயணசாமி, கருணாநிதி, குமார், நரேஷ், கோமதி, ஆஷா, வளர்மதி, சுந்தரமூர்த்தி, ரேவதி உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கவுன்சிலர் கோமதி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். மற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோமதி வெளிநடப்பு செய்தார்.

    • மன்றபொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • “பள்ளியில் இடைவிலகல் மாணவர்களை இல்லம் தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

    அவினாசி:

    அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மன்றபொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேசியதாவது:-

    கார்த்திகேயன்:-எந்த வேலை வந்தாலும் அந்தந்த வார்டு உறுப்பினர்களுக்கு எப்போதும் தகவல் தெரிவிப்பதே இல்லை. அரசுத்துறை வேலைகள் எதுவும் தெரிவதில்லை. ஊருக்குள் வேலை நடப்பதை பார்த்து தான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். இது மிகவும் வருந்தத்தக்கது. அவினாசி ராஜன் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி கிடையாது. கழிவறை சுத்தம் செய்வது கிடையாது. கழிவறைக்குள் தண்ணீர் சேமிப்பு டேங்க் இல்லை. இதனால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றார்.

    சீனிவாசன்:- உப்பிலிபாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காமல் இருக்கிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது என்றார்.

    சேது மாதவன்:- பழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தில் மயானத்திற்கு சுற்றுச்சூழல் அமைத்து தர வேண்டும் என்றார். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், "பள்ளியில் இடைவிலகல் மாணவர்களை இல்லம் தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த கல்வியாண்டில் 256 மாணவர்கள் பள்ளி இடைவிலகலாக இருந்ததை கலவித் துறையின் முயற்சியால் 108 ஆக அது குறைந்துள்ளது. எனவேவார்டு கவுன்சிலர் ஆகிய நீங்கள் அனைவரும் இதுபோல் பள்ளி விலகலை கண்டறிந்து எங்களுக்கு தகவல் கொடுத்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    • 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி தலைமையில் நடந்தது.

    துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, வனத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னிலையில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் தீர்மானங்களின் மீது ஒன்றிய கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    • தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு-2.0 திட்ட செயலாக்கம் குறித்த மாவட்ட அளவிலான வழிநடத்துதல் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது.

    நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு என்பது இந்திய - ஜெர்மன் இருதரப்பு திட்டம் ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் (GIZ) இந்திய அரசாங்கத்தின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MORD) மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (MOJS) ஆகியவற்றுடன் இணைந்து நியமிக்கப்பட்ட ஒரு இருதரப்பு திட்டமாகும்.

    இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புவியியல் தகவல் அமைப்பு (GIS) மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கான நீர்வள மேலாண்மை மற்றும் செறிவூட்டல் திட்டத்தினை தயாரித்து, இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2019-2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது.

    இப்போது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் (வாஸ்கா-2) 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இது 17 மாநிலங்களை உள்ளடக்கிய 15 வேளாண் காலநிலை மண்டலங்களில் நிலையான இயற்கை வள மேலாண்மை மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

    அவற்றில் கிழக்கு கடற்கரை சமவெளி மற்றும் மலை மண்டலத்தின் கீழ் வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

    தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் மற்றும் இதர ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு வாஸ்கா திட்டச் சான்றுகள் அடிப்படையிலான அறிவியல் அணுகுமுறை (புவியியல் தகவல் அமைப்பு) முன்மொழியப்படும்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, வன அலுவலர் அப்பல நாயுடு, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சக தொழிற்நுட்ப ஆலோசகர் ராதா பிரியா, சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ரங்கலட்சுமி மற்றும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது.
    • 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு வரவேற்றார். உதவி அலுவலர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்தல், கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 23 தீா்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
    • காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் தலைமை வகித்தாா்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா் முன்னிலை வகித்தாா். இதில் குடிநீா்க் குழாய்களை மேம்படுத்தல், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு இடம் பெயா்ந்த பின்னா் தற்போது உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை ஊராட்சி ஒன்றியத்துக்கு வருவாய் ஏற்படும் வகையில் பயன்படுத்துதல் என்பன உள்ளிட்ட 23 தீா்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலாதேவி, ராகவேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

    • மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வக்கீல் எஸ்.குமார் தலைமையில் துணைத்தலைவர் அபிராமி அசோகன் முன்னிலையில் கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் லோகுபிரசாத் (திமுக) பேசுகையில்: கள்ளகிணறு கருப்பராயன் கோயில் முதல் லட்சுமி நகர் வரை தார் சாலை அமைத்தல் பணி முடிந்து அதனை தொடர்ச்சியாக உள்ள மண் சாலை வழியாக, ஒரு பாலம் அமைத்து கொடுத்து மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.

    ஜோதி பாசு(இ.கம்யூ) : கடகம்திருடியபாளையத்திலிருந்து டி. ஆண்டிபாளையம் வரையிலும், வேலம்பட்டியில் இருந்து மசநல்லாம் பாளையம் வரையிலும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை. இதில் மொத்தம் 1400 பயனாளிகளில் 400 பயனாளிகளின் ஆதார் கார்டு இணைப்பு ஆகவில்லை என வேலைக்கு அனுமதிக்காத நிலை உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். டி. ஆண்டிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடைக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக செய்து தர வேண்டும்.

    சுப்பிரமணி(தி.மு.க) : பொல்லிக்காளிபாளையம் செல்லும் பள்ளி மாணவர்களின் வசதிக்காக நல்ல காளிபாளையம் வழியாக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். .ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் பேசுகையில்: பொங்கலூர் ஒன்றியத்தில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எடுத்த முயற்சியால் ஒன்றிய பகுதியில் அரசால் நிர்ணயக்கப்பட்ட அளவில் 75 சதம் குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெற்று வருகிறது. அதற்காக குடிநீர் வடிகால் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 15வது நிதிக்குழு மானியம் நிதியில் அனைத்து ஒன்றிய குழு வார்டு பகுதிகளிலும் 7 பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராமப்புற அடிப்படை மேம்பாட்டு வேலைகள் நடைபெறவுள்ளது. முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 19.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்ட முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) மீனாட்சி நன்றி கூறினார்.

    • போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு
    • குழந்தை திருமண பாதிப்புகள் குறித்து விளக்கம்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி ஒன்றியத்துக்கு உட் பட்ட கீழ்வெங்கடாபுரம் கிரா மத்தில் நேற்று சமூக பாதுகாப் புத்துறையின் மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரி யர் சாந்தி, துணைத்தலைவர் கண்ணகி தனசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராகநெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு பங்கேற்று பேசுகையில், குழந்தைகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி ஆசிரியர்களும், பெற்றோரும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

    போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா ஆகியவைக்கு அடிமையாகா மல் இருக்க குழந்தைகளை தின மும் கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணத்தின் பாதிப்புகள் பற்றி பெற்றோருக்கு விவரமாக எடுத்துக் கூறினார்.

    இதில் செவிலியர் மீகாள்கு மாரி, அங் கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பள்ளிகளில் குடிநீர் கட்டமைப்பு கட்டிடங்களை பழுது நீக்கி பராமரிப்பு செய்யவேண்டும்.
    • போதை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் உற்பத்தி குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது இதில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் மோகனா, மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதில் விவசாயிகளுக்கான திட்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்விக் குழு கூட்டம், 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஆணையாளர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதில், கல்வி வளர்ச்சி, பள்ளி கட்டிட பராமரிப்பு, உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மங்கையர்க்கரசி கனகராஜ் பேசுகையில். கோடங்கிபாளையம் மற்றும் பருவாய் கிராமங்களில் உள்ள துவக்கப்பள்ளி, அங்கன்வாடி பள்ளிகளில் குடிநீர் கட்டமைப்பு கட்டிடங்களை பழுது நீக்கி பராமரிப்பு செய்யவேண்டும்.மேலும் பள்ளிகளின் அருகாமையில் அரசு தடை செய்துள்ள பாக்கு உள்ளிட்ட போதை சம்பந்தப்பட்ட பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதை காவல்துறை மூலம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து பொது நோக்கங்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், அருள்புரம், புளியம்பட்டி ஆகிய சுகாதார நிலையங்களுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், நாய்கள் உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படுவதால், சுற்றுச்சுவர்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல நோய்கள் பரவுவதை தடுக்க குடிநீரில் குளோரின் மருந்து கலப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில், பல்லடம் துணை தாசில்தார் பானுமதி, மின்வாரிய உதவிப் பொறியாளர் தங்கராஜ், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் பாபு,ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
    • தனிமையில் விட வேண்டாம் மற்றும் மாதவிடாய் வேலையில் தாய்மார்கள் கண்காணிக்க வேண்டும்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறையின் மூலமாக வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு பற்றிய விவரத்தை அலுவலர்கள் விளக்கினார்.

    அரசு வீதிமுறைகளை கடைபிடித்து சிறுமிகளை கண்காணித்து விழிப்புடன் செயல்பட்டு நல்வழிபடுத்த வேண்டும். எந்த குழந்தைகளும் தவறான பாதையில் செல்லகூடாது. குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தனிமையில் விட வேண்டாம் மற்றும் மாதவிடாயாய் வேலையில் தாய்மார்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறினர்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாமி, வினோத்குமார், வட்டாரகல்வி அலுவலர்கள் வெங்கட்குமார், ஜார்ஜ், இளநிலை உதவியாளர் விமல்ராம்,வட்டார மருத்துவ ர் வெண்ணிலா, அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு உமாசங்கர், சையில் லிங் ஸ்ரீதர், சுமதி, மற்றும் உதவி தொடக்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.
    • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 14-ந் தேதி வரையில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் புவனேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினர்.
    • அனைத்து பெற்றோர்களும் செய்தித்தாள்கள் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 6-ம் முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விஜய் தலைமை தாங்கி பள்ளியின் எதிர்கால திட்டம், மாணவர்களின் முன்னேற்றம், பள்ளியின் தேவைகள் குறித்து விளக்கி பேசினார். அத்துடன், அனைத்து மாணவர்களையும் அரசு பள்ளியில் சேர்க்கவும், இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு அனுப்பவும் கேட்டுக் கொண்டார்.

    பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினர். இக்கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த அனைத்து மாணவ, மாணவியரையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார வளமைய மேற் ார்வையாளர்(பொறுப்பு) அசோக், குழந்தைகளின் நலனில் பெற்றோர்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து பெற்றோர்களும் செய்தித்தாள்கள் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    இக்கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சென்னம்மாள், துணைத் தலைவர் முருகன், உறுப்பினர்கள் மற்றும் 176 மாணவர்களின் பெற்றோர்கள், அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் ராம்பிரசாத் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.

    ×