search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்ணாவிரத"

    • 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை அபகரித்துக் கொண்டதாக கூறி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • அபகரித்த வீட்டை தன்னால் மீட்க முடியாமல் மாரிமுத்து குடும்பத்தினர் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 7-வது வார்டு அத்தாணி நாகப்ப முதலி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (50) இவர் தனது மனைவி பெரியநாயகம் (45) என்பவரின் பெயரில் உள்ள வீட்டை அதே பகுதியை சேர்ந்த சிலர் வீடு தனக்கு சொந்தம் என்று கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை அபகரித்துக் கொண்டதாக கூறி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அபகரித்த வீட்டை தன்னால் மீட்க முடியாமல் மாரிமுத்து குடும்பத்தினர் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது வீட்டை மீட்டெடுக்க முடியாத விரக்தியில் மாரிமுத்து மனைவி பெரியநாயகம்(45) தாயார் கனகாம்பாள்(75) சித்தப்பா அங்கப்பன்(65) உறவினர் குமார்(50) ஆகியோர் தனது வீட்டிற்கு வெளியே கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கீர்த்தி. மற்றும் தாரமங்கலம் போலீசார் மாரிமுத்து குடும்பத்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • பந்தல் அகற்றப்பட்டதால் பரபரப்பு
    • நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும். இந்த சந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு புதிதாக 250-க்கு மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டது.

    தற்போது சந்தையில் உள்ள 125-க்கும் மேற்பட்ட கடைகளில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். 120-க்கும் மேற்பட்ட கடைகள் காலியாகவே இருந்து வருகிறது. டெபாசிட் உயர்வு மற்றும் வாடகை அதிகமாக உள்ளதால் கடைகள் முழுமையாக செல்ல வில்லை என்று வியாபாரி கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. காலியாக கிடக்கும் கடைகளை மாநகராட்சி சார்பில் ஏலம் இடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் பலமுறை நடவடிக்கை மேற்கொண்டும் ஏலம் செல்லவில்லை. இந்த நிலையில் வடசேரியில் ரூ.55 கோடி செலவில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மூன்று மாடியில் வணிக வளாகமும் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து வடசேரி கனகமூலம் சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். மாநகராட்சி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதால் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மாநகராட்சி மேயர் மகேசை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு பஸ் நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ததால் தற்போது எதுவும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வியா பாரிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து வடசேரி அண்ணா சிலையையொட்டியுள்ள சந்தையின் ஓரத்தில் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    பந்தல் போடப்பட்ட நிலையில் போலீசார் உண்ணா விரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பந்தல் அமைக்க கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து போடப்பட்ட பந்தல் அகற்றப்பட்டது. இந்த நிலையில் வியாபாரிகள் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மொத்த சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சந்திரன், குமரி கனகமூலம் சந்தை வியாபாரிகள் சங்கத் தின் தலைவர் கண்ணன், குமரி மாவட்ட வணிகர் சங்கத்தின் தலைவர் நாகராஜன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கி னர்.

    ஆர்ப்பாட்டத்தில் காய்கறி வியாபாரிகள் ஏராள மானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்தை மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் சந்தையில் உள்புறத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வடசேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • புதிய சுண்ணாம்பு சூலை தெரு வில் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
    • அடிப்படை வசதியும் செய்து கொடுக்க கோரி, அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு சாகும் வரை உண்ணாவிர போராட்டம் நடந்தது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 44-வது டிவிசன், புதிய சுண்ணாம்பு சூலை தெரு வில் 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.

    இவர்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் அளித்த உத்தரவின்படி, உடனடியாக சாலை, சாக்கடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதியும் செய்து கொடுக்க கோரி, அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சேலம் மாநகராட்சி நுழைவு வாயில் முன்பு சாகும் வரை உண்ணாவிர போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செய லாளர் செல்வக் கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் சூரிய மூர்த்தி, மாவட்டத் தலைவர் வெங்கட்ராமன், துணைத் தலைவர்கள் பழனி, பெரியசாமி, மண்டல தலைவர் பால கஜேந்திரன், செயலாளர் சம்பத்குமார் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்மா பேட்டை போலீசார், அவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இத னால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பின்சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    நாமக்கல்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம்பள முரன்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பின்சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • புறம்போக்கு பகுதியில் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.
    • சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் காமராஜ் நகர் மற்றும் சரளைமேடு பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலையின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டாக வீடுகள் கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவர், மாவட்ட நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள‌ வீடுகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    நீதிமன்ற உத்திரவின்படி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அவர்களுக்கு திடுமல் கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புறம்போக்கில் இடம் ஒதுக்குப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள புறம்போக்கு பகுதியில் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் பாதுகாப்பு

    இதையடுத்து, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச் செல்வி, ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • 2-வது நாளாக இன்றும்அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சபரி ராஜன் (வயது 28), இவர் சென்னையில் உள்ள ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை கையாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் அவருக்கு படிப்பதற்காக வரும் புத்தகங்களை சமீப காலமாக அதிகாரிகள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த சபரி ராஜன் நேற்று உண்ணாவிரத்தை தொடங்கினார். 2-வது நாளாக இன்றும்அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் .சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது
    • தி,மு.க.அரசை கண்டித்து நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் புறநகர் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், நகர தலைவர் ஜெயக்குமார், நிர்வாகிகள் மகிழ்அசோக், பாலாஜிதேவேந்திரன் மற்றும் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்."

    • பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தி.மு.க.அரசை கண்டித்து நடைபெற்றது

    கரூர்:

    தி.மு.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, பா.ஜ.க.வினர் தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையா உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி கரூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியன், மாநில இணை பொருளாளர் மற்றொரு சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மாற்றுத்திறனாளிகள் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அலுவலகங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரைதளத்தில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் வழியில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள அலுவலகத்திற்கு, உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அலுவலகங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதிகள், போக்குவரத்து வசதிகள், மனு கொடுப்பதற்கு தேவையான நகலெடுக்கும் கடைகள் உள்ளிட்டவை அப்பகுதியில் இல்லாததால் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் புதிதாக மாற்றப்பட்ட இடத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முன்பிருந்த இடத்திற்கே மாற்ற கோரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்களுக்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காத்திருப்புப் போராட்டம் மனுக் கொடுக்கும் போராட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து பரமத்திவேலூர் வட்டார மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பில் பரமத்திவேலூர் தாலுகா அலுவலகம் முன்பு சுமார் 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேசிய பரமத்திவேலூர் தாலுகா மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயலாளர் சதீஷ்குமார் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ மீட்டருக்கு அப்பால் புதிதாக மாற்றப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்ற வேண்டும. அதுவரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    ×