என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்.பி."
- ஆக்ஷன் ஹீரோவாக பல வெற்றி படங்களில் நடித்தவர் சுரேஷ் கோபி
- பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சரும் பங்கேற்கலாம் என தெரிகிறது
மலையாள திரையுலக முன்னணி நடிகர்களாக பல தசாப்தங்களாக இருப்பவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால்.
ஆனால், 90களில் அவர்கள் இருவருக்கும் இணையாக பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்ற முன்னணி ஹீரோ சுரேஷ் கோபி. ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களிலும், குணசித்திர வேடங்களில் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சுரேஷ் கோபி.
65 வயதாகும் அவர், சில வருடங்களாக நடிப்பதை குறைத்து கொண்டு அரசியலில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
2016ல் ராஜ்ய சபா நியமன எம்.பி.யாக பாராளுமன்றம் சென்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேரளாவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சுரேஷ் கோபி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்.
சுரேஷ் கோபியின் மகளான பாக்யாவிற்கும் தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் கேரளாவின் புகழ் பெற்ற இந்து கோயிலான குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் வரும் 17 அன்று திருமணம் நடைபெற உள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரம் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் (Greenfield Stadium) ஜனவரி 20 அன்று நடைபெறும்.
இந்நிலையில், தங்கள் இல்ல திருமண விழாவில் பங்கேற்குமாறு சுரேஷ் கோபி தனது குடும்பத்தினருடன் சென்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் வைத்தார்.
இதையடுத்து, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
முன்னதாக மோடி, காலை 08:00 மணியளவில் குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பிறகு, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கொச்சி செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திருமணத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.
திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகர் சுரேஷ் கோபி களமிறக்கப்படலாம் என சில நாட்களாக செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடித்த "தீனா", சரத்குமார் நடித்த "சமஸ்தானம்", விக்ரம் நடித்த "ஐ" உட்பட பல தமிழ் படங்களிலும் நடித்தவர் சுரேஷ் கோபி.
- கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை பாஜக., அரசு செய்துள்ளது.
- எழுத்துக்கள் இணையதளத்தில் பதிவேற்றி அனைவரும் அறிய ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பூர் :
கடந்த மக்களவை தோ்தல்களைப் போல் 2024 ம் ஆண்டு தோ்தலிலும் பிரதமா் நரேந்திர மோடி வெற்றி பெறுவாா் என்று முன்னாள் பாஜக., மக்களவை உறுப்பினா் காா்வேந்தன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக திருப்பூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:- மத்திய பாஜக அரசு, தமிழகத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் சா்வதேச யோகா தினத்தை அறிவித்தது. அம்பேத்கா் பிறந்த, வாழ்ந்த, படித்த, காலமான இடம் என ஐந்து இடங்களை ஒருங்கிணைத்து பஞ்ச திருத்தலங்கள் உருவாக்கி, உலக நாடுகள் அனைத்திலும் உள்ள இந்திய தூதரகங்களில் அம்பேத்கரின் பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றி அனைவரும் அறிய ஏற்பாடு செய்துள்ளது.
இதுபோல கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை பாஜக., அரசு செய்துள்ளது. எனவே, எதிா்க்கட்சிகள் எத்தனை கூட்டங்கள் போட்டாலும் 2024 மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மீண்டும் வெற்றி பெறுவாா் என்றாா்.
- மாநில அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை 2ம் இடத்தை பெற்றுள்ளது.
- பழமையான கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகப்பேறு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாமல் அருகிலுள்ள பிற மாவட்டத்தில் இருந்தும் பெண்கள் வந்து செல்கின்றனர். மாநில அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
பழமையான இந்த மருத்துவமனையில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது பொது மக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யலாம், பழமையான கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர். மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், மருத்துவமனை நிலைய அலுவலர் செல்வம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார்.
- திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவிநாசி :
அவிநாசி அடுத்த அம்மாபாளையத்தில், கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார். அவரிடம், கண்டக்டர் அவிநாசி, தெக்கலுாருக்குள் பஸ் செல்லாது என கூறி இறங்க சொன்னார். செல்வி இறங்குவதற்குள் அஜாக்கிரதையாக டிரைவர் பஸ்ஸை நகர்த்தியுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த செல்வி பலியானார். பல்வேறு சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள், அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் பஸ்ஸை இயக்கிய கண்டக்டர் மற்றும் டிரைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் படி கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவிநாசி வந்த நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவிடம், பொதுமக்கள் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் கோவையிலிருந்து செல்லும் பஸ்களும், சேலம், ஈரோடு, திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் பயணிகளை இறக்கி, ஏற்றி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.பி. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
- தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான். .
- மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் :
கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆர்.நடராஜன் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீராணம்பாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை பாா்வையிட்டு,பெண் தொழிலாளா்களிடம் பணிகள், ஊதியம் மற்றும் அவா்களது குறைகள் குறித்து கேட்டறிந்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:-
மத்திய, மாநில அரசுகளிடம் மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறாா்கள் என்பதை அறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகவே மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் தொடக்கியுள்ளேன்.
இடுவாய் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் மறுக்கப்படாமல் வழங்குவதுடன், நிா்ணயிக்கப்பட்ட ஊதியமும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான்.
அதே வேளையில் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.அதேபோல மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியையும் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.ஆகவே வரும் மக்களவை கூட்டத்தொடரில் 100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை, மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்படும் என்றாா்.
- அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது.
- ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே கேத்தனூரில் கோவை எம்.பி. நடராஜன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கேத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கேத்தனூர் ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் மருத்துவ படிப்பு படிக்க தனி இட ஒதுக்கீடு மற்றும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு கல்லூரி மேல்படிப்புக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பால் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர் அப்பள்ளிகளில் இருந்து தங்களது குழந்தைகளை விடுவித்து அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அதனால் அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது. இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். அதே போல் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது. அத்தொகையை உயர்த்தி வழங்கிட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார், ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால், ஒன்றிய கவுன்சிலர்கள் ஸ்ரீ பிரியா புருஷோத்தமன்,லோகு பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரன் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர்கலந்துகொண்டனர்.
- ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.
- சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீரங்ககவுண்டம்பாளையம் பகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பணித்தளத்தில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுடன் கோரிக்கைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.பின்னர் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள சமுதாயகூடத்தில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இந்த நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.மேலும் இதில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன்,திருப்பூர் தெற்கு தாசில்தார்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபு பாலசுப்பிரமணியம்,இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம்,இடுவாய் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
இதனைத் தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சி மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.இதில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி,மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி,மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளிக்கு இடவசதி, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடவசதி, ஆய்வுகூடம் பற்றாக்குறை போன்ற கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
- பள்ளி தலைமையாசிரியர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது
வீரபாண்டி :
திருப்பூர் மாநாகராட்சி 54வது வார்டு மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கு இடவசதி, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடவசதி, ஆய்வுகூடம் பற்றாக்குறை போன்ற கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. பின்பு பள்ளி தலைமையாசிரியர் சார்பில் ஒரு மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி1927ம் ஆண்டு தொடக்கபள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. 1984ல் நடுநிலைப்பள்ளியாகவும் 2002ல் நடுநிலைப்பள்ளியாகவும் 2010ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. தற்பொழுது 1932 மாணவ மாணவிகள் உள்ளார்கள். கல்வி கற்பதற்கு 42 வகுப்பாறைகள் தேவைப்படுகிறது.ஆனால் 20 வகுப்பறைகள் மட்டுமே இருக்கிறது. மேலும் அறிவியல் ஆய்வு கூடமும் தேவைப்படுகிறது. மேலும் 22 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் மாணவ மாணவிகள் வகுப்பறையின்றி வராண்டாவில் அமர்ந்து கல்வி கற்று வருகிறார்கள்.
மேலும் கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் வருவாய் துறை மூலம் பெறப்பட்ட தகவலின்டி சுமார் 10ஏக்கர் நிலம் உள்ளது.இந்த இடம் பல்லடம் தாலுக்கா அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது.இந்த இடங்கள் பள்ளியிலிருந்து 1கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் அதன் அருகில் சுமார் 5 ஏக்கர் நிலம் பலவஞ்சிபாளையம் காளிகுமாரசுவாமி கோவிலின் டிரஸ்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தினை மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுவில் சொல்லப்பட்ட இடத்திற்கான ஆதாரங்களை கேட்டார். ஆதாரம் இருந்தால் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் பேசுவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி மண்டல தலைவர் பத்மநாபன்மற்றும் 54 -வது உறுப்பினர் சி. அருணாச்சலம், மற்றும் 53-வது உறுப்பினர் மணிமேகலை ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
- “அக்னிபத்” திட்டத்திற்று எதிர்ப்பு மதுரை ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எம்.பி. உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பாதுகாப்பு ேபாலீசார் அவர்களை தடுத்தனர். ஆனாலும் பலர் தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் புகுந்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மதுரை
இந்திய ராணுவத்தில் அக்னிபத் வீரர்கள் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்துறையை தனியார் மயமாக்கலை கண்டித்தும் மதுரை ெரயில் நிலையம் முன்பு இன்று மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று காலை முதல் பெரியார் பஸ் நிலையம் மருதுபாண்டியர் சிலை அருகில் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனைத்தொடர்ந்து வெங்கடேசன் எம்.பி. தலைமையில் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் அங்கு திரண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சியினர் வெங்கடேசன் எம்.பி. தலைமையில் பேரணியாக மதுரை ெரயில் நிலைய கிழக்கு நுழைவுவாயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களை போலீசார் நடுவழியில் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாத கம்யூனிஸ் கட்சியினர் தொடர்ந்து ரெயில் நிலையத்திற்குள் செல்ல முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு ேபாலீசார் அவர்களை தடுத்தனர். ஆனாலும் பலர் தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் புகுந்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நிலைமை மோசமாகவே ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற வெங்கடேசன் எம்.பி. உள்பட 350-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்