என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓட்டுநர்கள்"
- பொதுமக்கள் எச்சரித்தும், ஓட்டுநர் சென்றதால் தேங்கிய மழைநீரில் அரசு பேருந்து சிக்கியது.
- பணிமனை மழைநீர் வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
நெல்லை:
நெல்லை வள்ளியூரில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்து நாகர்கோவில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின்ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் எச்சரித்தும், ஓட்டுநர் சென்றதால் தேங்கிய மழைநீரில் அரசு பேருந்து சிக்கியது. மிகுந்த சிரமத்திற்கு இடையே பேருந்தில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தை தொடர்ந்து ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தி இருப்பதாவது:
* சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கி இருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்.
* சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்துடன் இயக்க வேண்டும்.
* பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என சரிபார்க்க வேண்டும்.
* பணிமனை மழைநீர் வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
* பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகளில் பழுது போன்ற புகார்கள் வந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும்
- பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் இந்த 3 மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். இந்த 3 சட்ட மசோதாக்களுக்கும் கடந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
அதே சமயம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஒட்டி விபத்து நடந்து யாரேனும் மரணமடைந்தால், உடனடியாக ஓட்டுநர் காவல்துறைக்கோ அல்லது நீதிபதியையோ சந்தித்து புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டப் பிரிவு வழிவகுக்கிறது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர், ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலூர்
மேலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் மற்றும் மேலூர் பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் மேலூர் நகரில் இயக்கப்படும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு விழிப்புணர் கூட்டம் நடந்தது.
இதில் தனியார் கழிவுநீர் ஊர்தி உரிமையாளர்களின் வாகன போக்குவரத்து சட்டப்படியும், மனித கழிவுகளை மனிதன் அகற்றுதல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் படியும் உரிய ஆவணங்களுடன் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வாகனத்தை இயக்க வேண்டும். விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் போக்குவரத்து துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினரால் பறிமுதல் செய்யப்படுவதுடன் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்குகளை எந்திரம் மூலம் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் எனவும், மனிதர்களை வைத்து சுத்தம் செய்யக்கூடாது எனவும் மீறினால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
- பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக்கூடாது.
- அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும்.
சென்னை:
போக்குவரத்துத்துறை அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
* பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக்கூடாது.
* பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது.
* அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்