என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்"
- ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
- டிகாக் 18 ரன்னில் வெளியேறினார்.
வாஷிங்டன்:
டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் மோதுகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டெப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்னில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி வருகின்றனர். வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரு அணி வீரர்கள் விவரம்:
தென் ஆப்பிரிக்கா:
ரிசா ஹெண்ட்ரிக்ஸ், குயின்டன் டிகாக், மார்க்ரம் (கேப்டன்), ஸ்டப்ஸ், ஹெண்ட்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மெக்ரோ ஜென்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அண்ட்ரிச் நோர்ட்ச், பார்ட்மென்
வங்காளதேசம்:
தச்டித் ஹசன், லிண்டன் தாஸ், நஜிமுல் ஹசன் (கேப்டன்), தவுகித் ஹிரிடே, ஷகிப் அல் ஹசன், ஜகர் அலி, முகமதுல்லா, ரஷித் ஹசன், தஷ்கின் அகமது, தம்சிம் அகமது ஷேக், முஸ்தபிசூர் ரகுமான்
- அமெரிக்காவும், பாகிஸ்தானும் மோதிய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா வீழ்த்தியது.
- மனமுடைந்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிராண்ட் பிரேரி ஸ்டேடியத்தில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் மோதிய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா வீழ்த்தியது.
இதனால் மனமுடைந்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்தனர். இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர் தோனியைப் போல காட்சியளித்த ஒரு ரசிகர் இந்த ஆட்டத்தை நீளமான தாடி, வெள்ளை குர்தாவுடன் கண்டுகளித்தார். அவரது இந்த தோற்றத்தை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் தோனிதான் மாறுவேடத்தில் அமெரிக்கா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்ததாக சமூகவலைதளங்களில் வைரலாக்கினர்.
Ms Dhoni spotted in stadium!!? Pak Vs USA!!
— Error??? (@Breakin07971929) June 6, 2024
Follow Cricket live#PakvsUSA pic.twitter.com/A1Z8BYIVTU
- இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற நாடுகளில் நாங்களும் உள்ளோம்.
- டி20 உலகக்கோப்பையை நடத்திய நாடுகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ரோஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இம்முறை எங்களிடம் மிக மிக நல்ல அணி உள்ளது. நாங்கள் பேசும்போது, அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் ஆன்டிகுவாவில் உள்ள ஒரு முகாமில் டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக தங்கள் பயிற்சிகளை தொடங்கவுள்ளனர். இத்தொடரில் எங்கள் அணி வீரர்கள் சீரான மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தவாரான கிரிக்கெட்டை விளையாடியனால் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்.
இது எளிதானது அல்ல என்று தெரியும். ஆனால் இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற நாடுகளில் நாங்களும் உள்ளோம். எனவே இம்முறை அதனை நாங்கள் 3-வது கோப்பையாக மாற்ற முயற்சிப்போம். மேலும் டி20 உலகக்கோப்பையை நடத்திய நாடுகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை. ஏனவே நாங்கள் சிறப்பாக செயப்பட்டு அதனை மாற்ற முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு ஆம்ரோஸ் கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ரோவ்மன் பாவெல் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.
- பாகிஸ்தான் அரை இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் முதலில் வங்கதேசம், தென்னாபிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளில் வெல்வது கட்டாயமாகியுள்ளது.
- மிராக்கள் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிற்கு செல்லும் வாய்ப்புள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்காள தேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது.
6 அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளனர். இந்தியா 4 புள்ளிகள், தென் ஆப்பிரிக்கா 3, ஜிம்பாப்வே 3, வங்காளதேசம் 2, பாகிஸ்தான் நெதர்லாந்து அணிகள் புள்ளிகள் எதும் எடுக்காமல் கடைசி இரண்டு இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு மங்கி உள்ளது.
பாகிஸ்தான் அரை இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் முதலில் வங்கதேசம், தென்னாபிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளில் வெல்வது கட்டாயமாகியுள்ளது. அதே சமயம் -0.050 என்ற மோசமான நிலையில் இருக்கும் அந்த அணியின் ரன்ரேட்டை உயர்த்துவதற்கு அந்த 3 வெற்றிகளும் பெரிதாக இருந்தால் இன்னும் உதவிகரமாக இருக்கும்.
மேலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா தன்னுடைய எஞ்சிய 3 போட்டிகளில் நிச்சயம் வென்றாக வேண்டும். இந்தியா 1 போட்டியில் தோற்றால் கூட தன்னுடைய 3 போட்டிகளில் பாகிஸ்தான் வென்றால் பயனளிக்காது. 3. அத்துடன் தன்னுடைய 2 போட்டிகளில் முடிவில் 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா தன்னுடைய கடைசி 3 போட்டிகளில் குறைந்தது 2 தோல்விகளை சந்திக்க வேண்டும். அதே போல் 3வது இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே தன்னுடைய கடைசி 3 போட்டிகளில் 2 போட்டிகளில் கண்டிப்பாக தோற்க வேண்டும்.
இவை அனைத்தும் மிராக்கள் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிற்கு செல்லும் வாய்ப்புள்ளது. ஆனால் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை ஒட்டுமொத்தமாக பங்கேற்ற 6 டி20 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் 1 வெற்றியை கூட பதிவு செய்ததில்லை என்பது இந்த உலகக் கோப்பையில் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்காது என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்துகிறது.
- நியூசிலாந்துக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
- இலங்கைக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா மோதல் போன்றது. தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும்.
சிட்னி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதுகிறது. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து தனது தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. தற்போது 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்துக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது. இலங்கைக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா மோதல் போன்றது. தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே டாஸ் போடப்பட்டத்தில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
- நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம்.
- சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு குறை இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
இந்த இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது என்று கபில்தேவ் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து கபில்தேவ் கூறியதாவது:-
இந்தியாவின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. பேட்டிங்கில் நாம் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும். ஆனால் கடைசி பத்து ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்து சமாளித்து விடுகிறார்கள். ஆஸ்திரேலியாலில் மைதானங்கள் அனைத்தும் பெரியது. இதனால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.
இந்திய அணியின் பந்துவீச்சு ஆங்காங்கே குறைகள் இருக்கிறது. நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம். அது போன்ற ஆட்டத்தை நீங்கள் ஒரு பயிற்சியாக நினைக்க வேண்டும். அதற்காக வெற்றி நான் முக்கியம் இல்லை என சொல்லவில்லை. அந்த ஆட்டங்களில் நீங்கள் நோபால், வைடு வீசக்கூடாது.
சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ரன்களை வேகமாக அடிக்கிறார். இதனால் அவரை அதிகமாக புகழ வேண்டும்.
இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாகும். வெற்றிகரமாக எட்டுவார்கள் அதேபோன்று ராகுலும் முக்கிய போட்டிகளுக்கு முன்பு ரன்களை அடிக்க வேண்டும்.விராட் கோலியை பொருத்தவரை அவர் 20 ஓவரும் நின்று விளையாட வேண்டும். ஏனெனில் அவர் எப்போது வேண்டுமானாலும் வேகமாக அடித்து ரன் குவிக்கலாம்.
என்று கபில்தேவ் கூறினார்.
- ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.
- ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
மெல்போர்ன்:
டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி இந்திய நேரப்படி 1 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மழை நின்ற பிறகு டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி இரண்டு போட்டியில் மொத்தம் 144 ரன்கள் அடித்திருக்கிறார்.
- விராட் கோலி இன்னும் 11 ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
சிட்னி :
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன்கள் விளாசினார். தொடர்ந்து இரண்டு அரைசதம் மற்றும் ஒரு முறை கூட ஆட்டம் இழக்காமல் விராட் கோலி பட்டையை கிளப்பி வருகிறார்.
நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி இரண்டு போட்டியில் மொத்தம் 144 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி புதிய சாதனையை படைத்திருக்கிறார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் விராட் கோலி 23 போட்டிகளில் விளையாடி தற்போது 989 ரன்கள் விளாசி இருக்கிறார்.
இதன் மூலம் இந்த பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். விராட் கோலி இன்னும் 11 ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். மேலும் ஒட்டு மொத்தமாக டி20 உலகக்கோப்பையில் ஆயிரம் ரன்கள் எடுத்த 2 வீரர் என்ற சாதனையையும் அவர் படைப்பார். முதல் இடத்தில் இலங்கை வீரர் ஜெயவர்தனே உள்ளார். இன்னும் 27 ரன்கள் கூடுதலாக அடித்தால் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்து விடுவார்.
இந்த பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான ரோகித் சர்மா 904 ரன்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பை முடிவில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் டாப் 2 இடத்தை பிடிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று டி20 உலகக்கோப்பையில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் பட்டியலில் விராட் கோலி 89.9 சராசரியை வைத்து முதலிடத்தில் இருக்கிறார்.
இரண்டாவது இடத்தில் 44.6 சராசரியுடன் பீட்டர்சனும், மூன்றாவது இடத்தில் 40.6 சராசரி உடன் டுமினியும், நான்காவது இடத்தில் 39.1 சராசரி உடன் ஜெயவர்த்தனைவும் , ரோகித் சர்மா 37.7 சராசரியுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
- தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.
- இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
மெல்போர்ன்:
20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 'சூப்பர்-12' சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை மெல்போர்ன் நகரில் தொடங்க இருந்தது.
அயர்லாந்து அணி 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. அந்த அணி இலங்கையிடம் தோற்றது. இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்துடன் மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் இன்று தனது 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை சந்திக்க இருக்கிறது.
மெல்போர்ன் நகரில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஏற்றார் போல் டாஸ் போடுவதற்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆடுகளம் மற்றும் மைதானத்தின் மற்ற பகுதிகள் மூடப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்து உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மாலை 3 மணியளவில் மழை குறைந்த நிலையில் அரை மணி நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
மெல்போர்னில் தொடர்ந்து மழை பெய்ததால் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்படு வதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதன் மூலம் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (குரூப்-1) மெல்போர்னில் மோத உள்ளன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
- ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
- டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு இது 2-வது வெற்றி ஆகும்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்தது.
ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதனை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நெதர்லாந்து அணி திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு இது 2-வது வெற்றி ஆகும்.
- சூர்ய குமார் யாதவ் 25 பந்தில் அரை சதம் அடித்தார்.
- விராட் கோலி 44 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.
சிட்னி:
20 ஓவர் உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை இன்று எதிர்கொண்டது. இந்த ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மாவும் லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
கேஎல் ராகுல் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலி-சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
சிறப்பாக விளையாடிய விராட் கோலி இந்த போட்டியிலும் அரை சதம் அடித்தார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அரை சதம் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்தனர்.
- பாகிஸ்தான் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சை வைத்திருக்கிறார்கள்.
- அர்ஷ்தீப் சிங், ஜாகீர்கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
புதுடெல்லி:
20 ஓவர் உலகக்கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி பாகிஸ்தான் தான் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், இந்திய அணி முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சை வைத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியா போல் அவர்களிடம் ஆல்ரவுண்டர்கள் இல்லை. ஆஸ்திரேலிய அணியிலும் சிறந்த வேகப்பந்து வீரர்கள் உள்ளனர்.
சுழற்பந்து வீச்சில் இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது. இதே போல வேகப்பந்து வீச்சு என்று என்னிடம் கேட்டால் பாகிஸ்தானை தான் சொல்வேன்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஜாகீர்கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சினால் மிகவும் கவரப்பட்டேன். நான் அவருடன் 3 ஆண்டுகள் ஒன்றாக பணியாற்றி இருக்கிறேன். 20 ஓவர் போட்டிகளில் அவர் வளர்ந்து வந்த விதத்தை கண்கூடாக பார்த்து இருக்கிறேன். கடந்த ஐ.பி.எல். அவரது வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பதற்றம் இல்லாமல் வீசுவது என்பது கனவு தான். ஆனால் அதிலும் அர்ஷ்தீப்சிங் தேறி விட்டார். அவர் முதிர்ச்சி அடைந்து விட்டார். அவர் இது மாதிரியே முன்னேறி செல்ல வேண்டும். அதாவது ஜாகீர்கான் போல் இவரும் ஒரு பெரிய பவுலராக வரவேண்டும்.
இவ்வாறு கும்ப்ளே கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்