search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோஷம்"

    • விளைநிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்திற்கு மேல்மா விவசாயிகளின் விளைநிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்.

    சிப்காட் வளாகத்தில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயிலடியில் சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பழனிராஜன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகளை விளக்கி உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம்.

    முருகேசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சி. பி. எம். எல் மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் விடுதலைகுமரன், மாவட்ட செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஜனநாயக விவசாய சங்க மாநில தலைவர் ராமர் , தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி தமிழ்ச்செல்வி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் இடதுசாரிகள் பொதுமேடை பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.

    • சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 14-அம்ச கோரிக்கையை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டத்தலைவர் இளம்வழுதி தலைமையில் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கி வந்ததை ரத்து செய்ய ப்பட்டுள்ளது, எரிபொருள் படி மாதம் ரூ.2500 வழங்கியது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ் பிடித்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 14அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    • கும்மி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக 100 நாள் வேலைத்திட்ட பணியில் ஈடுபடும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மூன்று மாத காலமாக நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கும்மி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செல்வம் மற்றும் நீலமேகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களை எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    • டி.பி.சி ஊழியர்கள் மற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் டி.பி.சி ஊழியர்கள் மற்றும் சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தஞ்சை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயபால்,

    சுமைப்பணி சம்மேளன தலைவர் தலைவர் வெங்கடபதி , மாவட்ட பொருளாளர் பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணை செயலாளர்கள் அன்பு, சாய் சித்ரா, ஆட்டோ சங்கம் மாநில செயலாளர் ராஜா, நகர துணை தலைவர் செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • காரைக்காலில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மற்றும் தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்து, காரைக்காலில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்க அமைப்பா ளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1000 கொடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மன்னார்குடி:

    கூத்தாநல்லூர் அடுத்த லெட்சுமாங்குடி பாலத்தில் இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி வளரும் தமிழக கட்சி சார்பில் பட்டியல் வெளியேற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    லெட்சுமாங்குடி நகர செயலாளர் முருகபா ண்டியன் அனைவரையும் வரவேற்றார்.

    திருவாரூர் மாவட்ட செயலாளர் (தெற்கு) சந்திரகுமார் முன்னிலை வகித்தார். மன்னார்குடி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

    இதில் சிங்கை சரவண சோழன், ஆரோக்கிய செல்வன், ராஜா, கிட்டு ராஜசேகர், முகிலன், வினேஷ் பாவா ரமேஷ் குமார், கவிதா பழனிவேல், சதாசதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு ேபசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 என அறிவித்து அனைத்து குடும்ப தலைவிக்கும் கொடுக்காததை கண்டித்தும், சம்பா சாகுபடிக்கு கர்நாடகா அரசிடம் தண்ணீரை பெற்று தராத தி.மு.க அரசை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

    முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி நாகை மாவட்டத்தில் 2 வது நாளாக திருக்குவளை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருக்குவளை கடைத்தெருவில் இருந்து மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் பேரணியாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து திருக்குவளை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், இந்தியாவில் அதிகரிக்கும் வேலை தட்டுப்பாட்டை கண்டித்தும், இந்தி திணிப்புக்கு எதிராகவும், சொந்த லாபங்களுக்கு நாட்டை தனியார்மயமாக்கும் செயலுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    • கோஷம் எழுப்பி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
    • உமாபதி,குப்புராஜ் தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    தமிழக விளையாட்டுதுறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்த பரம ஹம்ச ஆச்சார்யா சாமியாரை கண்டித்து கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமையில் கடலூரில் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . பின்னர் கோஷம் எழுப்பி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ இள. புகழேந்தி முன்னிலை வகித்தார். இதில் மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் , பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகரத் துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி செந்தில் முருகன், கவுன்சிலர்கள்ஆராமுது, சுபாஷிணி ராஜா, கவிதா ரகுராமன், பகுதி துணை செயலாளர்கள் லெனின், கார் வெங்கடேசன், ஜெயசீலன்,இளைஞரணி ஜெயச்சந்திரன்,கோபி, உமாபதி,குப்புராஜ் தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தது.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாசில்தார் பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கள்ளக்குறிச்சி வட்டாட்சியரை இடைக்கால பணி நீக்கத்தை கண்டித்தும், அதை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் காத்திருப்பு போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்ட சேர்ந்தவர்கள் அந்த அந்த மாவட்டத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தி வருவதாகவும் அதனுடைய தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் காத்துருப்பு போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தனர். 

    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முடிவில் மண்டல பொருளாளர் பக்கிசாமி நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் தொழிற்சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் நக்கீரன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வள்ளுவன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மண்டல சங்க செயலாளர் தம்பிதுரை, கவுன்சிலர் செயலாளர் வீரமணி, சிறப்பு தலைவர் முத்தையன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மண்டல பொருளாளர் பக்கிசாமி நன்றி கூறினார்.

    • மணிப்பூா் கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    மணிப்பூா் மற்றும் ஹரியாணாவில் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்டச் செயலா் ஜெயினுல் ஆபிதீன் தலைமை வகித்தாா்.

    இதில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, ம.தி.மு.க தெற்கு மாவட்டச் செயலா் தமிழ்ச்செல்வன், தஞ்சாவூா் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை ஹாஜாமைதீன் மிஸ்பாகி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை, பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேவையா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் ஜெய்சங்கா், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மக்கள் ஒற்றுமை மேடை தலைவா் ஜீவக்குமாா் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலா் அகமது கபீா், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவா் அப்துல் நசீா், கிறிஸ்துவ நல்லிணக்க இயக்க மாவட்டச் செயலா் மோசஸ் ஜான் கென்னடி, அறநெறி மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலா் சாா்லஸ் உள்பட பல்வேறு கட்சி, இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கருகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    நீடாமங்கலம்:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கான தண்ணீரை விடுவிக்க வேண்டும், தண்ணீரின்றி கருகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் தலைமையில் வலங்கைமானில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட நிர்வாகக்குழு ராஜா கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலியபெருமாள், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய பொருளாளர் மருதையன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தேவிகா மற்றும் உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×