search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவிச்சந்திரன் அஸ்வின்"

    • அஸ்வின் போலவே பந்து வீசக்கூடிய மகேஷ் பித்தியாவை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
    • நாக்பூர் ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்று நினைக்கிறேன்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற் பந்து வீச்சை எதிர் கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அஸ்வின் சுழலை சமாளிக்க வியூகங்களை வகுத்துள்ளனர். அஸ்வின் போலவே பந்து வீசக்கூடிய மகேஷ் பித்தியாவை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சை எதிர் கொள்ள தயார் என்று ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாங்கள் பல ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறோம். அஸ்வின் போன்று மகேஷ் பித்தியா பந்து வீசுகிறார். நாங்கள் அதிகமாக சிந்திக்கவில்லை. அஸ்வின் ஒரு தரமான பந்து வீச்சாளர். ஆனால் அவரது பந்து வீச்சை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கு வியூகங்கள் எங்களிடம் உள்ளது.

    நாக்பூர் ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்று நினைக்கிறேன் என்றார்.

    • இந்தியா பாகிஸ்தானுக்கு வராவிட்டால் உலகக்கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    • ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம்.

    சென்னை:

    6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.

    இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

    போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்.

    ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பவுன்சர் பந்து வீச கட்டுப்பாடுகள் உண்டு.
    • பேட்ஸ்மேன்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்க முயற்சிப்பது உண்டு. வலது கை பேட்ஸ்மேன் இடது கை பேட்ஸ்மேன் போன்றோ, இடக்கை வீரர் வலதுகை வீரர் போன்றோ திடீரென திரும்பி நின்று பந்தை அடித்து விரட்டுவார்கள். இன்னும் சிலர் உடலை திருப்பாமல் பேட்டை பிடிக்கும் ஸ்டைலை மட்டும் மாற்றிக்கொண்டு ஆடுவார்கள். பேட்டர்கள் இது போன்று ஆடுவது சகஜமாகி விட்டதால் எல்.பி.டபிள்யூ. விதிமுறைகளில் திருத்தம் தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

    யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கிட்டத்தட்ட 10 முறை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ஆடினார். அதில் ஒன்று மட்டுமே பேட்டில் பட்டது. ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவதால் ஒரு பேட்ஸ்மேன் எந்த அறிவிப்பும் இன்றி தனது பேட்டை பிடிக்கும் ஸ்டைலை மாற்றும் நிலை உள்ளது. இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

    ஒரு பந்து வீச்சாளர் எந்த முறையில் பந்து வீசுகிறார் என்பதை நடுவரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதே போல் பவுன்சர் பந்து வீச கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. எப்படி வேண்டுமானாலும் அவர்கள் பேட்டிங் செய்யலாம். அதனால் பாதிப்பு பவுலர்களுக்கு தான்.

    எனவே ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் வகையில் பேட்ஸ்மேன் அடிக்கும் போது, பந்து லெக்-ஸ்டம்பு வெளியே 'பிட்ச்'சாகி பேட்டில் படாமல் அது காலுறையில் பட்டால் அதற்கும் எல்.பி.டபிள்யூ. வழங்கும் வகையில் விதிமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அது தான் இந்த விஷயத்தில் நியாயமானதாக இருக்கும். இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    • அஸ்வின் கொரோனா பாதிப்பால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
    • கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அஸ்வின், இங்கிலாந்தில் இந்திய அணியுடன் இணைந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

    ஒத்திவைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

    இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.அஸ்வின் இந்திய அணியோடு இங்கிலாந்து செல்லவில்லை. அவர் கொரோனா பாதிப்பால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அஸ்வின், இங்கிலாந்தில் இந்திய அணியுடன் இணைந்தார்.

    லீசெஸ்டர்னாஷர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதையடுத்து லீசெஸ்டருக்கு சென்று இந்திய அணியுடன் இணைந்து கொண்டார்.

    இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 1-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு சரியான நேரத்தில் குணமடைவார் என்று அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    ×