என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு துறையினர்"

    • மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.
    • விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.

    கேரளாவில் சிக்கலான அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடிய சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த மார்ச் 25 ஆம் தேதி கேரளாவின் காஞ்சங்காடு உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள், 46 வயதுடைய ஒருவரின் பிறப்புறுப்புகளில் சிக்கிய இரும்பு வாஷரை (iron washer) அகற்ற போராடியுள்ளனர். ஆனால் அவரின் நிலை மோசமடைந்தால் மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.

    தீயணைப்பு வீரர்கள் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு, ரிங் கட்டரைப் பயன்படுத்தி வாஷரை பாதிப்பு இல்லாமல் வெற்றிகரமாக அகற்றினர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சங்காடு தீயணைப்புத்துறை அதிகாரி பி.வி. பவித்ரன்,

    "இது ஒரு சவாலான, இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையாக இருந்தது. விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.

    இது மிகவும் பயமுறுத்தும் காட்சியாக இருந்தது. இரும்புத் வாஷர் அந்தரங்கப் பகுதியைச் சுற்றி இறுக்கமாகப் பொருந்தியிருந்தது, இதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை" என்றார்.

    கடந்த மூன்று வாரமாக பிறப்புறுப்பில் சிக்கிய இரும்பு வாசருடன் அந்த நபர் சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதிக வலி இருந்துள்ளது.

    வாசர் எப்படி பிறப்புறுப்பில் சிக்கியது என்பது குறித்து கேட்டபோது, தான் குடிபோதையில் இருந்தபோது யாரோ ஒருவர் அதை தன் மீது மாட்டியாக தெரிவித்துள்ளார். தற்போது வாசர் நீக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • நோயாளிகள் வசதிக்காக 24 மணி நேரமும் ‘லிப்ட்’ இயக்கப்படுகிறது.
    • லிப்ட்டில் இருந்த நோயாளிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்துார் அரசு ஆஸ்பத்திரி 4 மாடி கொண்ட புது கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு நோயாளிகள் வசதிக்காக 24 மணி நேரமும் 'லிப்ட்' இயக்கப்ப டுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் 3 நோயாளிகள் ஆஸ்பத்திரியின் லிப்டை பயன்படுத்தி உள்ளனர்.

    அப்போது லிப்ட் எந்த தளத்திலும் நிற்காமல் மேலும், கீழும் சென்று வந்தது. இதனால் லிப்ட்டில் இருந்த நோயாளிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    இதுகுறித்து அறிந்த மருத்துவ பணியாளர்கள், ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லிப்ட்டில் சிக்கியிருந்த 3 பேரையும் அரை மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்டனர்.

    இதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் ஜெய லட்சுமி கூறுகையில், லிப்ட்டிற்குள் சென்ற நோயாளிகள் லாக் பட்டனை தவறுதலாக அழுத்தியுள்ளனர். இதனால் மேலும், கீழும் சென்றது. அவர்கள் உடனே மீட்கப்பட்டனர். லிப்ட் பழுது எதுவும் இல்லை என்றார்.

    • தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்
    • பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகைக்கு ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை முன்னிலை வகித்தார். மீட்பு பணி குழுவினர் வீடுகளில் தீப்பிடித்தால் அதனை எவ்வாறு அணைப்பது, தீயில் சிக்கிக் கொள்பவர்களை மாடி வீடுகளிலிருந்து கீழே இறக்குவது, அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது மற்றும் எண்ணெயினால் ஏற்படும் தீயை தண்ணீரை ஊற்றி அணைப்பது, சமையல் எரிவாயு சிலிண்டர்களில் தீப்பிடித்தால் தீயை அணைப்பது எவ்வாறு என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றுவது என்பது குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்து நடந்து வருகிறது.

    இதையொட்டி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    இதை தொடர்ந்து பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின்போது வெள்ளத்தில் சிக்கிய வர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் கயிறு கள் பயன்படுத்தி எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும், நீரில் மூழ்கி மயக்க நிலை அடைந்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×