search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள் ஏலம்"

    • கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,310 வாகனங்கள் அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
    • தென் சென்னையில் 395, வட சென்னையில் 271, மத்திய பகுதியில் 644 வாகனங்கள் கேட்பாரற்று உள்ளது.

    சென்னை:

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் கேட்பாரற்று நீண்ட காலமாக வாகனங்கள் கிடக்கின்றன. சாலைகள், முக்கிய தெருக்களில் கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் யாரும் சொந்தம் கொண்டாடாமல் கேட்பாரற்று கிடக்கின்றன.

    இது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. மழையிலும், வெயிலிலும் அந்த வாகனங்கள் சேதமாகி ஒன்றுக்கும் பயன்படாத வகையில் வீணாகி பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.

    சாலையோரங்களில் துருப்பிடித்து வீணாக கிடக்கும் அந்த வாகனங்களை அகற்றி ஏலம் விட மாநகராட்சி திட்டமிட்டு

    உள்ளது.

    கேட்பாரற்று கிடக்கும் இந்த வாகனங்களில் ஏதேனும் குற்றச்செயல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க போலீசாரின் அனுமதி கேட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில் இந்த வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அகற்றப்படும். ஒவ்வொரு வாகனத்தையும் அகற்ற ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்தப்படும். அகற்றப்படும் வாகனங்கள் ஏலம் விடுவதற்கான கொள்கை வகுக்கப்படுகிறது.

    கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,310 வாகனங்கள் அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் 327 வாகனங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்வு வரை இந்த பணி நடந்தது. அதன் பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை இழுத்து செல்ல நகரம் முழுவதும் பணியாளர்களை பயன்படுத்தும் ஒப்பந்ததாரரை பணியமர்த்துவதற்கு டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களில் 80 சதவீதம் 4 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் 10 சதவீதம், மீதமுள்ளவை இரு சக்கர வாகனங்கள் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. நம்பர் பிளேட் இல்லாத 10 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    தென் சென்னையில் 395, வட சென்னையில் 271, மத்திய பகுதியில் 644 வாகனங்கள் கேட்பாரற்று உள்ளது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பெருங்குடி குப்பை கிடங்கு, மணலியில் சாத்தாங்காடு லாரி ஷெட், முல்லை நகர் மயானம், ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கம் உள்ளிட்ட 10 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • வருகிற 12-ந்தேதி நடக்கிறது
    • முன் பணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் துறையால் சாராய வழக்குகளில் பலவகையான 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் வருகிற 12-ந் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

    பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்ப முள்ளவர்கள் டிசம்பர் 10 மற்றும் 11-ந் தேதிகளில் நுழைவு கட்டணமாக ரூ.100, முன் பணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

    ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்திற்கு அதற்கான ரசீதே வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.

    பொது ஏலம் குறித்து கூடுதல் விபரங்களை அறிய திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04175 233920 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • நுழைவுக் கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் குற்ற வழக்குகளில் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளன.

    இதில் பைக், கார் உள்ளிட்ட 115 வாகனங்கள் இன்று வேலூர் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. வாகனத்தை ஏலம் எடுக்க வந்தவர்களிடம் ரூ.100 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மதுவிலக்கு வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங்க ளுக்கு ஏலத்தொகையுடன் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து வசூலித்தனர்.

    மேலும் வழக்குகளில் சம்மந்தப் பட்டுள்ள வாகனங்கள் அனைத்திற்கும் ரசீது வழங்கினர்.

    ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணம் என போலீசார் தெரிவித்தனர். இதனை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பார்வையிட்டார்.

    • வருகிற 13-ந் தேதி நடக்கிறது
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    வேலுார்:

    வேலுார் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் மற்றும் 4 சக்கர வாகனங்கள், வருகிற 13-ந் தேதி காலை 9 மணி முதல் வேலுார் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.

    இவற்றின் உரிமையா ளர்கள் உரிமை கோரிய வாகனங்களை தவிர்த்து, மீதமுள்ளவை பொது ஏலம் விடப்படும். ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100 நுழைவுக்கட்டணம் செலுத்திய பின்னரே ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.

    ஏலத்தொகையுடன் பைக்குகளுக்கு 12 சதவீத விற்பனை வரியும், 4 சக்கர வாகனங்களுக்கு 18 சதவீத விற்பனை வரியும் சேர்த்து செலுத்தவேண்டும்.மேலும் இதற்கான ரசீது வழங்கப்படும். அதுவே அந்த வாகனத்தின் உரிமை ஆவணம் ஆகும்.

    இவ்வாறு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

    • ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் வருகிற 11-ந் தேதி தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7-ம் அணி வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.
    • ஏலம் எடுத்தவுடன் முழு தொகை மற்றும் அதற்கு உண்டான ஜி.எஸ்.டி. முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ள வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி 7-ம் அணி போலீஸ் படை ஐ.பி.எஸ். (தளவாய்) ஜெயந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    போச்சம்பள்ளியில் 7ம் அணி காவலர் படை செயல்பட்டு வருகிறது இங்கு பயன் படுத்தப்பட்ட கழிவு செய்யப்பட்ட 8 காவல் வாகனங்களை எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 12-ந் தேதி காலை 12 மணியளவில் 7-ம் அணி காவல் படை தலைமை அலுவலகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.

    மேலும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் வருகிற 11-ந் தேதி தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7-ம் அணி வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள். அன்றே 6 சக்கர வாகனத்திற்கு ரூ.3 ஆயிரமும், 4 சக்கர வாகனத்திறகு ரூ.2 ஆயிரமும் முன் பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    ஏலம் எடுத்தவுடன் முழு தொகை மற்றும் அதற்கு உண்டான ஜி.எஸ்.டி. முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறிஉள்ளார்


    • வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து துரு பிடித்து கிடக்கின்றன.
    • காவல் துறை நடவடிக்கை எடுத்து வாகனங்களை பொது ஏலத்தில் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குள் பலவித குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை வைப்பதற்கு இடமில்லாமல் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் குவித்து வைத்துள்ளனர். இவ்வாறு வைத்துள்ள இந்த வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து துரு பிடித்து கிடக்கின்றன.

    இவற்றை பொது ஏலத்தில் விட்டால் அரசுக்கு ஓரளவிற்கு வருமானம் கிடைக்கும் என்றும் இந்த வாகனங்களும் நல்ல முறையில் இருக்கும் போது பொதுமக்கள் உபயோகப்படுத்த முடியும் என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்து வாகனங்களை பொது ஏலத்தில் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த 363 வாகனங்கள் இன்று நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எடி. எஸ்.பி. மனோகரன் ஆகியோர் தலைமையில் ஏலம் நடந்தது. ஏலத்தில் பங்கேற்க ஏராளமானவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஏலத்தில் பங்கேற்க வந்தவர்களை ஒழுங்கு படுத்தினர்.

    வாகன ஏலத்தில் கலந்து கொள்ள ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த ஏலத்தில் மொத்தம் 359 பைக், ஒரு ஆட்டோ ஏலம் விடப்பட்டது.

    இதன் மொத்த மதிப்பு ரூ.14 லட்சத்து 45,160 என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.

    • வருகிற 9-ந் தேதி நடக்கிறது
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட95 வாகனங்கள் பொது ஏலம் மூலம் அகற்றுதல் குறித்து விரிவான அறிக்கையில் வாகன உரிமையாளர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் 95 வாகனங்களையும் யாரும் உரிமை கோராததால் அரசுடைமையா க்கப்பட்டது.

    மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 9-ந் தேதி காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வாகனங்களை 6,7ஆகிய தேதிகளில் பார்வையிடவும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 8-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.15 ஆயிரம் முன் வைப்புத் தொகையை ராணிப்பேட்டை ஆயுதப்படையில் செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    9-ந்தேதி காலை 10 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். மேலும் ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி.தொகையும் சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

    • 9 இரண்டு சக்கர வாகனங்களும் (கழிவு செய்யப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.
    • அந்த ஏலமானது வருகின்ற 17.8.2023 அன்று காலை தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல் துறையில் காவல் பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு காலாவதியான அரசு காவல் வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு, அதனை ஏலம் முறையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஏற்கனவே ஏலத்தில் விற்பனை செய்யப்படாமல் உள்ள 5 வாகனங்களுடன், தற்போது கழிவு செய்யப்பட்டுள்ள 14 வாகனங்களையும் சேர்த்து, 19 வாகனங்களான 2 ஈச்சர், 3 பொலேரோ, 1 டாடா சுமோ கிரான்டே, 1 டாடா ஸ்பேசியோ, 1 அம்பாஸ்டர், 2 எம்.எம் 540 ஜீப் மற்றும் 9 இரண்டு சக்கர வாகனங்களும் (கழிவு செய்யப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.

    அந்த ஏலமானது வருகின்ற 17.8.2023 அன்று காலை தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏலம் விடப்படும் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வாகனத்தை பார்வையிட அனுமதிக்கப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலம் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆயுதப்படை வாகனப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி முன்பணத் தொகையை வைப்புத் தொகையாக செலுத்தி, ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.

    அவ்வாறு வைப்புத் தொகையை செலுத்த தவறியவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏலம் எடுத்து 30 நிமிடத்தில் பணம் செலுத்தாதவர்களின் ஏலம் ரத்து செய்யப்பட்டு, அந்த வாகனத்தை மறு ஏலம் விடுப்படும்.

    மேலும், பணம் கட்டத் தவறியவரின் வைப்பீட்டுத் தொகையை திருப்பி தர இயலாது. ஏலம் முடிந்து 30 நிமிடங்களில் பணம் செலுத்தி வாகனத்தை பெற்றுச் செல்ல வேண்டும்.

    • ஏலம் விடப்படவுள்ள வாகனங்களைத் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் நாளை காலை 8 மணிக்கு நேரில் பார்வையிடலாம்.
    • இருசக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு 12 விழுக்காடு (GST) யும் சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 48 இருசக்கர வாகனங்கள் மொத்தம்-54 வாகனங்கள் நாளை 27-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.

    நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் முன் வைப்பு தொகையாக ரூபாய் 10,000 -ம், நாளை 27-ந் ேதி காலை 8 மணிக்குள் ஏலம் நடைபெறவுள்ள இடத்தில் செலுத்த வேண்டும்.

    முன் வைப்புத்தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏலம் விடப்படவுள்ள வாகனங்களைத் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் நாளை காலை 8 மணிக்கு நேரில் பார்வையிடலாம்.

    இருசக்கர வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு 18 விழுக்காடு (GST) யும், இருசக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு 12 விழுக்காடு (GST) யும் சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, தருமபுரி அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 04342-230759, 262581 என்கிற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 113 வாகனங்கள் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். போலீசாரால் கைப்பற்றப் பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.

    பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 113 வாகனங்களை 31 மற்றும் 1-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இருசக்கர வாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10ஆயிரமும் செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகை யை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காத வர்களின் முன்பணம் திருப்பி தரப்பட மாட்டாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலத்தில் எடுக்கப் படும் வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும்.

    இந்த தகவல் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 4 நான்கு சக்கர வாகனங்கள், 69 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாக னங்கள்.
    • 31 வாகனங்களை வாகன உரிமையாளர்களே ஏலம் மூலம் பெற்றுக்கொண்டனர்.

    மொடக்குறிச்சி, மே.1-

    ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள், 69 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாக னங்களுக்கான பொது ஏலம் விட தயார் செய்ய ப்பட்டது.

    இதில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வாகனங்களின் உரிமை யாளர்களே ஏலத்தொ கையை செலுத்தி பெற்று க்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 31 வாகனங்களை வாகன உரிமையாளர்களே ஏலம் மூலம் பெற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து மீதமுள்ள 42 வாகனங்கள் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது.

    இந்த ஏலத்தில் வாகனங்களை எடுப்பதற்காக முன்பணம் செலுத்தியிருந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர்.

    ஏலத்தினை ஈரோடு மது விலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஒரு நான்கு சக்கர வாகனம், 26 இரண்டு சக்கர வாகனங்கள் ரூ.4லட்சத்து 66ஆயிரத்து 336க்கு ஏலம் போனது. அதேபோல், வாகன உரிமையாளர்கள் பெற்று சென்றதுடன் சேர்த்து மொத்தம் 57 வாகனங்கள் ரூ.15 லட்சத்து 64 ஆயிரத்து 960க்கு ஏலம் போனது.

    ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 14 இரண்டு சக்கர வாகனங்கள் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×