search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகம்"

    • வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.
    • இது கலாச்சார தீண்டாமை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்டுகின்றன.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேட்டி கட்டிக்கொண்டு வந்ததால் முதியவர் ஒருவர் ஷாப்பிங் மாலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள GT மாலில் நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.

    வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார். மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டியையே உள்ளே அனுமதிக்காத மால் நிர்வாகத்தை கிழித்தெடுத்து வருகின்றனர். மேலும் இது கலாச்சார தீண்டாமை என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்கிடையில் இந்த வீடியோ சர்ச்சையான நிலையில் மால் நிர்வாகம் முதியவருக்கு சால்வை அணிவித்து சமாதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தினமும் 2 லட்சம் முதல் 2.45 லட்சம் பேர் வரை பயணம் செய்கிறார்கள்.
    • விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தை விரைவில் வெளியிடப்படும்

    சென்னை:

    சென்னையில் தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    விரைவான மற்றும் சொகுசு பயணம் என்பதால் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 2 லட்சம் முதல் 2.45 லட்சம் பேர் வரை பயணம் செய்கிறார்கள்.

    இந்த 2 ரெயில் வழித்தடங்களும் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் ரெயில் நிலையங்களை சந்திக்கும் இடங்களாக உள்ளது. சென்ட்ரலில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் பயணிகள் அதிக அளவு வருவதால் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும்.

    இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை மெட்ரோ நிறுவனம் கூறியிருப்பதாவது,

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நிலையான தன்மை மற்றும் மாற்று வருவாய் ஈட்டுதல் (மெட்ரோ இரயில் சேவை வருவாய் கட்டணம் அல்லாத) செயல்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனம்பாக்கம் மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் சின்னமலை மெட்ரோ மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ முதல் கோயம்பேடு மெட்ரோ வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையை சேர்ந்த Mudra Ventures நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

    இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முக்கிய மாற்று வருவாய்களான விளம்பரம், சில்லறை வணிகம் மற்றும் அலுவலக பணி இடங்கள் வழங்குவதன் மூலமாகவும் இயக்க செலவுகளை ஈடு செய்ய மேலும்உதவுகிறது.

    மேலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் விம்கோநகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.

    • தர்கா குழுந்த மண்டபம் அருகே சென்ற போது தனது செல்போனை தவறவிட்டார்
    • காவலாளி அதை கண்டெடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்காவிற்க்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த வர்கள் வந்து தொழுகை செய்து வருகின்றனர். இதனால் நாகூர் தர்கா எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்நிலையில் வேலுர் மாவட்டத்தை சேர்ந்த நாகூர் ஆண்டகையின் பக்தர்களுள் ஒருவரான ஜனாப் கரீம் பாசா தனது குடும்பத்துடன் நாகூர் தர்காவிற்கு வந்திருந்தார்.

    பின்னர் தர்கா குழுந்த மண்டபம் அருகே சென்ற போது தனது செல்போனை

    தவற விட்டுவிட்டார்.

    அங்கு பணியில் இருந்த தர்கா காவலாளி லாரண்ஸ் தவறவிட்ட தொலைப்பே சியை கண்டெடுத்து அடுத்த ஷிப்ட் தர்கா காவலாளி களான ஷாகுல் மற்றும் அய்யப்பன் ஒப்படைத்தார்.

    இதைத் தொடர்ந்து செல்போனை தவற விட்ட ஜனாப் கரீம் பாசாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாகூர் தர்கா உள்துறை துணை நிர்வாகி சேக் தாவுத் முன்னிலையில் அவரிடம் செல்போன் ஒப்படைக்க ப்பட்டது.

    சுமார் காலை 7 மணிக்கு தர்காவில் கண்டெடுக்க ப்பட்ட மொபைல் போன் இரவு 10 மணியளவில் உரிய நபரிடம் அன்னாரின் பொருளை பெற்று கொண்ட மைக்கான ரெஜிஸ்டரில் கையொப்பம் வாங்கி கொண்டு ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஜனாப் கரீம் பாசா செல்போனை கண்டு பிடித்து கொடுத்த காவலாளிகளுக்கும் நாகூர் தர்கா நிர்வாகத்தி னருக்கும் நன்றி தெரிவித்தார்.

    • சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பழைய குப்பைகள் தேங்கிய நிலையில் இருந்தது
    • இதில் அடிக்கடி சமூக விரோதிகள் தீவைப்பதால் அந்தபகுதி முழுவதும் புகைமயமாக காட்சியளிக்கும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பழைய குப்பைகள் தேங்கிய நிலையில் இருந்தது. இதில் அடிக்கடி சமூக விரோதிகள் தீவைப்பதால் அந்த முழுவதும் பகுதி புகைமாக காட்சியளிக்கும்.இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதை உணர்ந்த பேரூராட்சி நிர்வாகம் இந்த தேங்கிய குப்பை கழிவு களை அகற்ற பேரூராட்சி துறையிடம் அனுமதி கேட்டப்பட்டது. இந்நிலையில் அந்த தேங்கி கிடக்கும் பழைய குப்பை கழிவுகளைஉயிரி அகழ்வு முறையில் இயந்திரம் மூலம் அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்திடம் ரூ.32.32 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்த குப்பைகளை அகற்றும் பணி செயல் அலுவலர் உஷா, தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் ஆகியோர் மேற்பார்வையில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த இயந்திரத்தில் கல், மண் தனியாகவும், பிளாஸ்டிக்ல் பொருட்கள் தனியாகவும், மக்கிய குப்பைகள் தனியாகவும் வெளியேறும்.

    இந்நிலையில் உயிரி அகழ்வு முறையில் குப்பைகளை அகற்றும் பணியை நேற்று ' காலை கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாள ருமான சிவதாஸ்மீனா, கலெக்டர் ஷ்ரவன்குமார் மற்றும் அதிகாரிகளுடன் வந்து ஆய்வு செய்தார். மேலும் ஒப்பந்ததாரரிடம்இந்த பணியை காலதாமதம் இல்லாமல் விரைவாக நேர்த்தியாக செய்து முடிக்கும்படி துறை செயலாளர் உத்தரவிட்டார். இந்தநிலையில் பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் பேரூராட்சி துணை சேர்மன் ராகேஷ், வார்டு உறுப்பினர்கள் , சாரங்கன் ,உமா ஜெயவேல், காந்தி,பேபிகுமார், பத்மாவதி சிவகுமார், சுகாதார ஆய்வாளர் முத்துகுமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்களை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம்.
    • விவசாயிகளின் பிரச்சனைகளை உடனே அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை முழுவதையும் வட்டியுடன் சேர்த்து உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்களை கண்டித்தும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பழனி, துணைத் தலைவர் ஞானமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மேலும் அந்த ஆலையின் விவசாயிகளின் பிரச்சனைகளை உடனே அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதில் தஞ்சை ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், திருவையாறு ஒன்றிய செயலாளர் ராம், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கருப்பையன், நிர்வாகிகள் குருசாமி, வடிவேலன், அன்பு, ஏ.ஐ.டி.யூ.சி துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த புத்தக திருவிழா வானது அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அனைத்து வகையான புத்தகங்கள், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்னையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இனைந்து நடத்தும் புத்தக திருவிழாவை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீனவளர்ச்சி கழகத்தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவர் மதிவாணன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த புத்தக திருவிழா வானது அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து 110 பதிப்பாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். அனைத்து வகையான புத்தகங்கள், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. தினந்தோறும் மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்சிகளும், தமிழ் அறிஞர்களின் கருத்தர ங்ககளும், சிந்தனையரங்கம் போன்ற நிகழ்சிகள் நடை பெற உள்ளன.இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்ட அலுவலர்கள் முருகேசன் (நாகை), ஜெயராஜ்பௌலின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், நாகை நகரமன்ற தலைவர் மாரிமுத்து, தென்இந்திய புத்தக விற்பனையாளர் சங்க தலைவர் வைரவன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×