என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொடக்க விழா"
- இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.
- ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா பெண்கள் சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர். ஒலிம்பிக் அணித்தலைவராக மேரி கோம் பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு ஆண்டும் சத்திய ஞான சபை தொடக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம்
- ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. ராமலிங்க அடிகளார் 23.5.1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ந் தேதியன்று சத்திய ஞானசபையை நிறுவினார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சத்திய ஞான சபை தொடக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி 158-ம் ஆண்டு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 7 நாட்களாக அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் மற்றும் திரு அருட்பா முற்றோதல் நடந்தது. தொடர்ந்து தருமச்சாலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. தொடர்ந்து 7.30 மணியளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தரும சாலையின் சிறப்புகள் குறித்து வில்லுப்பாட்டு, இசை நிகழ்ச்சி, ஜீவகாருண்ய ஒழுக்கம் சத் விசாரம், சொற்பொழிவு, திரு அருட்பா இன்னிசை, திரு அருட்பா 6-ஆம் திருமுறை சத் விசாரம், சன்மார்க்க நெறி சத் விசாரம், நான்கு வகை ஒழுக்கம், வள்ளலார் அருளிய ஞானசரியை ஆகியவை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் மற்றும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
வள்ளலாரின் திருக்கரத்தால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா அடுப்பு இன்று வரை தொடர்ந்து எரிந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஜீவகாருண்யத்தை பறைசாற்றும் வகையில் ஏற்படுத்தப்பட்ட சத்திய தரும சாலையானது பலரது சகாயத்தாலேயே நடைபெற்று நிலைபெற வேண்டும் என்பதால், ஜீவதயவுடைய புண்ணியர்கள் பொருள் முதலியன உதவி செய்து அதனால் வரும் லாபத்தை பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது வள்ளலாரின் கூற்று.
அன்று முதல் சத்திய தரும சாலையில் தினசரி 3 வேளையும் சாதி, மதம், இனம், தேசம், நிறம் என எவ்வித பேதமும் இன்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழை, வெள்ளம், புயல் என இயற்கை பேரிடர்கள் மற்றும் கொரோனா தொற்று நேரத்திலும் கூட தொடர்ந்து தினசரி மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.
- இதில் சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இதற்காக ஆர்சிபி அணியினர் இன்று சென்னை வந்தடைந்தனர். ஏற்கனவே சிஎஸ்கே அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருப்பதால் அதற்கான வேலைகள் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் இதுவரை இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளனர். இதில் ஒரு முறை ஆர்சிபியும் 7 முறை சிஎஸ்கே அணியும் வெற்றி பெற்றுள்ளது.
- 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. கூட்டணியில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கி கொடுப்பது என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒரு தொகுதி கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கூட்டணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களை குறைந்தது, 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் இன்று இரவு சென்னை திரும்புகிறார். வருகிற 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. அன்று கட்சி அலுவலகத்துக்கு சென்று கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.
கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்' என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21.
வரும் பிப்ரவரி 21-ந் தேதி நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.
அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகி கள், உறுப்பினர்கள், நம்ம வர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும்!!
வாருங்கள்! ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம். நாடாளுமன்றத்தில் நம்மவர்
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச்' லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளில் ஒன்றே கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கமல்ஹாசன் கை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் நோயில் இருந்து காத்துக் கொள்ளலாம்
- கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு
திருவட்டார் :
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சமுதாய அளவி லான புற்று நோய் கண்டறி யும் திட்ட தொடக்க விழா குமரி மாவட்டம் பொன்மனை பேருராட்சி யில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-
சமூக அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் முதன் முறையாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படு கிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்றாகும்.
தமிழ்நாடு புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் 2017-ம் ஆண்டு நடத்திய மாநில அளவிலான ஆய்வில் 69,517 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் 12-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களில் 14.6 சதவீதம் பேர் வாய் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்படுவதும், பெண்களின் 33.6 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
18 வயது நிரம்பிய ஆண்களும் பெண்களும் வாய் பகுதி புற்று நோய்க்கான கண்டறியும் பரிசோதனையையும்,30 வயது நிறைவு பெற்ற பெண்கள் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை, வாய் புற்று நோய்க்கான கண்டறியும் பரிசோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும்.
இந்த பரிசோதனை எளிதில் வலியின்றி விரை வாக செய்து முடிக்கப்படும். எனவே நமது மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டமானது செயல் படுத்தப்படுகிறது.
மாவட்டந்தோறும் இல்லங்கள் தேடி பணியாளர்கள் வந்து ஒரு அழைப்பிதழ் வழங்கு வார்கள். இந்த அழைப்பிதழில் உங்களுக்கு அருகாமையில் உள்ள புற்று நோய் கண்டறியும் மையத்தில் உள்ள விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அழைப்பி தழை அந்த மையங்க ளுக்கு எடுத்துச் சென்றால் உங்களுக்கு புற்றுநோய் அறிகுறி உள்ளதா என்று பணியாளர்கள் பரிசோதனை செய் வார்கள். தொற்று நோய் அதிக ரித்து வரும் கால கட்டங்களில் நம்மை காத்துக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.
எனவே இந்த நோய் தொற்று ஏற்படாமல் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் விஜய்வசந்த் எம்.பி., பொன்மனை பேருராட்சி தலைவர் அகஸ்டின், செயல் அலுவலர் ஜெயமாலினி, ஊராட்சி மன்ற தலை வர்கள் விமலா சுரேஷ் (சுருளோடு), லில்லி பாய் சாந்தப்பன் (பாலமோர்), பொன்.ரவி (திற்பரப்பு), துணைத் தலைவர் ஸ்டா லின் தாஸ், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக் டர் .மீனாட்சி, இணை இயக்குநர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் சந்தோஷ், மருத்துவ அலுவலர் டாக்டர் கிஷோர், சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், ஆய்வாளர் சுரேஷ்குமார், மருத்துவ பணி யாளர்கள், சுகா தார ஆய்வாளர்கள் செவிலி யர்கள், மற்றும் பொது மக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
- விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
- அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா
கன்னியாகுமரி :
கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அய்யா வுக்கு விளக்கு நிய மித்து பணிவிடை நடந்தது.
பின்னர் அய்யா வைகுண்டசாமி நிழல் தாங்கல் திருப்பணி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பணி குழு தலைவரும் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான சந்தையடி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருப்பணிக்குழு பொருளாளர் சிவராஜன், செயலாளர் ராமதாஸ், ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம், துணை தலைவர்கள் மனோகரன், குமார் என்ற ராஜா, பால் ராஜ், துணை செயலாளர்கள் சிங்காரவேல், செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணியை தொடங்கி வைத்தார். சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., சாமிதோப்பு பையன்ராஜா, அய்யா வைகுண்டசாமி கோவில் தர்மகர்த்தாக்கள் பாலசுந்தரம், மனோகர செல்வன், வெள்ளையன் தோப்பு ஊர் தலைவர் ரத்தின சிகாமணி, கவுரவ தலைவர் ராமச்சந்திரன், துணை தலைவர் கிருஷ்ண சாமி, ஈச்சன்விளை ஊர் கவுரவ தலைவர் கணேச மார்த்தாண்டன், கவர்குளம் தேரிவிளை ஊர் தலைவர் ராஜபாண்டியன் முன்னாள் ஊர் தலைவர் தாமோதரன் மற்றும் தங்கநடார், நம்பி நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா தஞ்சையில் 4-ந்தேதி நடக்கிறது.
- பொதுக்கூட்டத்தில் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.
தஞ்சாவூர்:
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழக அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், கழகத்தின் சார்பில் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், வருகிற 4.11.2023 - சனிக்கிழமை மாலை 5 மணியளவில், தஞ்சை மாநகரில் நடை பெற உள்ள, அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழாவில் முதலாம் ஆண்டு எம்.சி.ஏ. மாணவி பவித்ரா வரவேற்று பேசினார்
- தற்போதுள்ள பதவிக்காலத்தில் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்.
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எம்.சி.ஏ. சங்க தொடக்க விழா நடை பெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். விழாவில் என்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த மகா கிருஷ்ணன், விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
விழாவில் முதலாம் ஆண்டு எம்.சி.ஏ. மாணவி பவித்ரா வரவேற்று பேசினார். முதல்வர் டாக்டர் ஆர்.ராஜேஷ் சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜாபர் "கணினி பயன்பாடுகளில் தொழில் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் தொழில்நுட்ப விளக்கத்தை வழங்கினார். சங்கத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தற்போதுள்ள பதவிக்காலத்தில் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்.
குழுவில் துணை தலைவர், பொதுச்செயலர், இணை செயலர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் ஆகியோர் சங்கத்தின் இணை ஒருங்கிணைப்பா ளரால் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர். எம்.சி.ஏ. துறை தலைவர் பேராசிரியர் வஹிதா.கே.தங்கம் சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் முடிவில் தீபக் நன்றி கூறினார்.
- அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
- மாவட்ட செயலாளர் கலந்து கொண்டார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அ.தி.மு.க. வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி யினர், கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கி விமரி சையாக கொண்டாடினர்.
குன்றக்குடியில் பேருந்து நிலையம் அருகில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் சிவகங்கை மாவட்டச் செய லாளரும், சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் கட்சி கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.வி.நாகராஜன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி செயலாளர் பார்த்திபன், பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகி கள் ஏராளமானோர் கலந்து கொண்டாடினர்.
- உருப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா கலந்து கொண்டார்
குளச்சல் :
குளச்சல் நகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா அண்ணா சிலை அருகே நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமையில் எம். ஜி.ஆர்., ஜெயலலிதா உருப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரவீந்திர வர்சன், ஆனக்குழி சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் சந்துரு, மாவட்ட பொருளாளர் திலக், எஸ்.எம்.பிள்ளை, விஜயகுமார், பஷீர் கோயா, தாசின், மேரி ஜெசிக்கலா, செர்பா, சிட்டி ஷாகுல், வினோத், ஜெகன், அம்பிளிகலா, சிசிலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடுமலை:
.தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52 -ஆம் ஆண்டு தொடக்க விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்துக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
நாகர்கோவில் ::
அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செய லாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப ட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் சேவியர் மனோகரன், துணைச் செயலாளர் சுகுமாரன், மாணவரணி செயலாளர் மனோகரன், மாநில நிர்வாகிகள் சந்துரு, ராணி, இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன், இளை ஞர் அணி செயலாளர் ஜெயசீலன், வர்த்தக அணி செயலாளர் சந்திரன், வடிவை மகாதேவன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், ஜெஸீம், பொன் சுந்தரநாத், தினேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ், மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, முரு கேஸ்வரன், ஜெய கோபால், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆறு முகராஜா, மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்சன், ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் ஐயப்பன், டாஸ்மார்க் தொழிற்சங்க செயலாளர் மணிகண்டன், குருந்தன் கோடு ஒன்றிய செயலாளர் ராதாகிரு ஷ்ணன், அண்ணா தொழி ற்சங்க செயலாளர் வைகுண்ட மணி, போக்கு வரத்து மண்டல செயலாளர் விஜயகுமார், முன்னாள் இளைஞர் அணி செயலாளர் தங்கப்பன், ரயிலடி மாத வன், தொழிலதிபர் தேவ ராஜ், முன்னாள் நகர பாசறை செயலாளர் பகவத்சிங், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரபீக், ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்