என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துணிகர கொள்ளை"
- லாக்கர் அறையில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது
- காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி ;
இரணியல் அருகே நெய்யூர் தபால் அலுவலகம் உள்ளது. இதனை நேற்று மாலை பணி முடிந்து ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இங்கு போஸ்ட் மாஸ்டராக கனகபாய் பணி புரிகிறார்.
இன்று காலை தபால் அலுவலகம் திறக்க வந்த போது முன் பக்கத்தில் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது லாக்கர் அறையில் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு உயர் அதிகாரிகளுக்கும் இரணியல் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அலுவலக செல்போன் திருட்டு போனது தெரிய வந்தது. தபால் அலுவலகத்தில் சி.சி.டி.வி.காமிரா பொருத்தபட வில்லை. மேலும் அப்பகுதி யில் உள்ள காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- சுமார் ரூ.23 ஆயிரம் மற்றும் இணையதள மோடம் காணாமல் போனது
- பலசரக்கு கடை பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது
கன்னியாகுமரி :
இரணியல்அருகே தலக்குளம் சாலையில் பூங்கா எதிரில் உரக்கடை மற்றும் மாடித்தோட்டம் கடை நடத்தி வருபவர் ஶ்ரீதர் (வயது 48). இவர் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு இன்று காலை சுமார் 8 மணிக்கு கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.23 ஆயிரம் மற்றும் இணையதள மோடம் காணாமல் போனது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சுந்தர்ராஜ் என்பவர் பலசரக்கு கடை பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
- கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ெஜனரேட்டர், பேண்ட் சட்டைகள், செண்டு பாட்டில்கள், பர்ஸ் உள்பட பல்வேறு பொருட்கள் திருடு போயிருந்தன.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் போடி பிரிவு அருகே தனியார் ஜவுளிக்கடை உள்ளது. ஆண்டிபட்டியை சேர்ந்த அஜித் (வயது26) என்பவர் நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ெஜனரேட்டர், பேண்ட் சட்டைகள், செண்டு பாட்டில்கள், பர்ஸ் உள்பட பல்வேறு பொருட்கள் திருடு போயிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் தனது மோட்டார் சைக்கிளை பழைய பஸ் நிலையம் எதிேர நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் அதை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து தேனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில்போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே கோண்டூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்புறம் கதவு உடைந்து இருந்தது. இதனை பார்த்து வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்க ப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது இதனை தொடர்ந்து வீட்டின் அருகாமையில் டீக்கடை ஒன்று உள்ளது. டீக்கடையில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 15 ஆயிரம் பணம் மற்றும் மிக்சியை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இதன் அருகாமையில் மளிகை கடை ஒன்று உள்ளது. மளிகை கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் அங்கு இருந்த 10 ஆயிரம் ரொக்க பணம் திருடி சென்றனர். மேலும் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று இருந்தது.
அந்த ஜெராக்ஸ் கடையின் ஒருபுறம் பூட்டை உடைத்து, மற்றொருபுறம் இருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்தபோது உடைக்க முடியவில்லை. இதன் காரணமாக மர்ம நபர்கள் அங்கு திருட முடியாமல் தப்பித்து ஓடினர். இந்த நிலையில் இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு, பீதியில் காணப்பட்டனர் இத் தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருடு நடந்த வீடு மற்றும் கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நள்ளிரவில் 3 கடைகள் மற்றும் வீட்டில் பணம் மற்றும் சைக்கிள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு கோண்டூர் மெயின் ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- விஜயகுமார் விற்பனை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார்.
- 15 மாட்டுத்தீவன மூட்டைகள் மற்றும் சிமெண்ட் கடையில் இருந்து 6500 ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் திருச்சிற்றம்பலம் அருகே நாவல்குளம் மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 39) என்பவர் கால்நடைகளுக்கான மாட்டு தீவன கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அடுத்து உதயா சிமெண்ட் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு விஜயகுமார் விற்பனை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் காலையில் சென்று பார்த்தபோது தீவன கடை மற்றும் சிமெண்ட் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீவன கடை உரிமையாளர் விஜயகுமார் கடை உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 16,000 மதிப்பிலான 15 மாட்டுத்தீவன மூட்டைகள் மற்றும் சிமெண்ட் கடையில் இருந்து 6500 ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து விஜயகுமார் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த கடைகளை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கடைகளில் கைவரிசை காட்டிய நபர்களை தேடி வருகின்றனர்.
- ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களையும் திருடி சென்றார்.
- சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் செல்லும் சாலையில் காணை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 39). இவர் தனது வீட்டின் முன்பாக சிறிய பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் வியா பாரம் முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார். அப்போது நள்ளிரவு சமயம் அங்கு வந்த மர்ம நபர் கடையின் மேற்கூரையை பிரித்து கடைக்குள் புகுந்தார்.
இதனை அடுத்து கடையில் இருந்த ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களையும் திருடி சென்றார். இன்று காலை வழக்கம் போல் புவனேஸ்வரி கடையை திறக்கும் போது கடையில் திருடு போயிருப்பது தெரி யவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி இது குறித்து காணை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகேஸ்வரி நேற்று காலை சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேங்கில் பணம் எடுக்க சென்றார்.
- 62,000 ரொக்கம் பணம், செல்போன் இருந்ததாக முதியவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 62) இவரது கணவர் அருணாச்சலம் (73). இவர்களுக்கு பிரசாந்த், கவாஸ்கர், என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரி நேற்று காலை சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேங்கில் பணம் எடுக்க சென்றார். பின்னர் பேங்கில் பணம் எடுத்துவிட்டு வீட்டிற்கு சாலையில் நடந்து வந்துள்ளார்.
அப்போது மகேஸ்வரி மூதாட்டியின் பின்னால் பதிவெண் இல்லா மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டியிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதனையடுத்து மூதாட்டி சத்தம் ேபாட்டுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பணத்தை திருடிச் சென்றவர்களை பிடிக்க முயன்றனர் ஆனால் மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர். 62,000 ரொக்கம் பணம், செல்போன் இருந்ததாக முதியவர் கூறினார். இதுகுறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தனது மகளுடன் ரெட்டியார் பகுதியில் வசித்து வருகிறார்.
- பீரோ உடைக்கப்பட்டு பதில் இருந்த 5 பவுன் நகை வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் காரை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தன.
கடலூர்:
நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியில் ராமமூர்த்தி ரெட்டியார் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 68) இவர் சப்-இன்ஸ்பெக்டர் ஆக வேலை பார்த்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தனது மகளுடன் ரெட்டியார் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று கடலூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் திருமண விழா முடிந்து வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்த ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பதில் இருந்த 5 பவுன் நகை வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் காரை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தன. இது குறித்து ராதாகிருஷ்ணன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் தெரிவித்தார். புகார் என்பதில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, காரை திருடி சென்ற மர்மகும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
- கோவிலில் 3 கலசங்கள், ஒரு செம்பு குடம் தாம்பாள தட்டு உள்ளிட்ட பொருள்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
- ஆலயத்தில் உள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஒயர்களை துண்டித்து விட்டு சென்றுள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்துர் கிராமத்தில் ஏரிக்கரையில் தச்சூர் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 கலசங்கள், ஒரு செம்பு குடம் தாம்பாள தட்டு உள்ளிட்ட பொருள்கள் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் இதேபோல் எழுத்தூர் கிராமஊர் அருகே உள்ள அய்யனார் கோயிலில் ஆலயத்தின் முன்பு உள்ள 2 சூலங்கள் பிடுங்கி உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து சுமார் 10,000 பணத்தை திருடி சென்றுள்ளனர்.
அந்த சூலங்களை கோயில் வளாகத்தில் வீசி சென்றுள்ளனர். முன்னதாக ஆலயத்தில் உள்ள பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஒயர்களை துண்டித்து விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து எழுத்தூர் பகுதியில் உள்ள கோயல்களை திருடர்கள் குறி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தப்பிய கொள்ளையர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.
- வீட்டில் இருநத ரூ.36 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே தப்பிச்சென்றனர்.
சூலூர்:
சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி வசந்தம் நகரில் வசிப்பவர் ராதா (59). இவர் தனது மகள் நிர்மலா மற்றும் பேத்தியுடன் வசித்து வருகிறார்.
நேற்று நிர்மலா வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பேத்தியும் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் ராதா மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் மர்ம நபர்கள் ராதாவின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ராதாவை கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து அடைத்தனர். பின்னர் வீட்டில் இருநத ரூ.36 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே தப்பிச்சென்றனர்.
மதியம் பள்ளி முடித்து விட்டு வந்த ராதாவின் பேத்தி வீடு வெளியே பூட்டி இருப்பதையும், ஜன்னல் திறந்து உள்ளதையும் பார்த்தார். ஜன்னல் வழியாக பார்த்தபோது தனது பாட்டி ராதா கைகள் கட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
அவர்கள் விரைந்து வந்து முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு வீடு முழுவதும் சமையல் கியாஸ் பரவி இருந்தது. கொள்ளையடித்த நபர்கள் ராதாவை கட்டிப்போட்டதுடன், சமையல் கியாஸ் சிலிண்டரையும் திறந்து விட்டுச் சென்றது தெரியவந்தது. உடனடியாக ராதாவை மீட்ட பொதுமக்கள், வீட்டுக்குள் பரவி இருந்த சமையல் கியாசையும் வெளியேற்றினர். சிறு தீப்பொறி பறந்திருந்தால் கூட பெரும் சேதம் நிகழ்ந்து இருக்கும்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்