என் மலர்
நீங்கள் தேடியது "போதைப் பழக்கம்"
- இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்
- 5வது நாள் அமன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கோவிலில் சென்று அமர்ந்துள்ளான்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் வசித்து வந்தவர் ஆர்த்தி தேவி. இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். மூத்த மகள் வேறு ஒரு நகரில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வருகிறார். எனவே தனது 17 வயது மகன் அமன் உடன் ஆர்த்தி தேவி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி செல்ல நேரமாகிறது என தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை எழுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த மகன் தாயை கீழே தள்ளி விட்டதில் அவரது தலையில் பலமாக அடிபட்டுள்ளது. காயம் காரணமாக தாய் ஆர்த்தி தேவி அங்கேயே உயிரிழந்தார். இதனால் பதற்றம் அடைந்த மகன் அமன் தாயின் உயிரிழப்பை மறைக்க முயன்றுள்ளான்.
தொடர்ந்து வீட்டில் சிசிடிவி இணைப்பை துண்டித்து வீட்டை வெளியில் இருந்து பூட்டிவிட்டு தாயின் சடலத்துடன் 4 நாட்கள் உள்ளேயே இருந்துள்ளான். சென்னையில் உள்ள ராம் மிலன் பலமுறை அழைத்தும் ஆர்த்தி தேவி செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது.
இடைப்பட்ட நேரத்தில் ஆர்த்தி தேவியின் உடல் அழுகி துர்நாற்றம் வரத் தொடங்கிய நிலையில் ஊதுபத்திகளை ஏற்றி அந்த வாடை வெளியே செல்லாமல் அமன் தடுத்துள்ளான். இருப்பினும் 5வது நாள் அமன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கோவிலில் சென்று அமர்ந்துள்ளான். தந்தை ராம் மிலன் தனது அண்ணியை அழைத்து வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார்.
அதன்படி அவர் வந்து பார்த்த போது வீடு உள்ளே இருந்து போடப்பட்டிருந்தது. மேலும் துர்நாற்றம் வந்துகொண்டிருந்தது. சென்னையில் இருந்து உடனே கிளம்பி வந்த ராம் மிலன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவரது மனைவியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் பக்கத்தில் இருந்த கோவிலில் இருந்த அமனும் கண்டுபிடிக்கப்பட்டான்.தனது தாய் கீழே விழுந்ததில் இறந்ததாகவும் பயத்தில் தான் 4 நாட்களாக வெளியே சுற்றித் திரிந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் வீட்டில் ரத்தக் கரை இரண்டு இடங்களில் இருந்த நிலையில் ஆர்த்தி தேவி உடல் இழுத்துச் செல்லப்பட்டதை போலீஸ் உணர்ந்தது. மேலும் அமன் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவன் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். பள்ளியிலும் அமன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது.
தொடர்ந்து அமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாய் பள்ளிக்கு செல்லுமாறு கூறியதாகவும் இதற்கு அமன் மறுத்ததால், அமன் அதிக பணத்தை வாங்கி செலவழிப்பதாக வாக்குவாதம் ஏற்பட்டு, தாய் விரக்தியில் பணத்தை தன் மீது தூக்கியெறிந்தார் எறிந்தார், எனவே அவரை தான் கீழே தள்ளி விட்டதாக அமன் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அம சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அமனை அனுப்பி வைத்தனர்.
- நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகமாக உருவாக வேண்டும். அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
- மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மற்றும் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகளிர் கலைக்கல்லூரி இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி மணிகூண்டு பகுதியில் தொடங்கிய பேரணிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அனிதாராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன்வசந்த்ஜாபேஸ், டி.எஸ்.பி லாமெக், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், கல்லூரி முதல்வர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். 2000 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட பேரணி போதை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் முக்கிய வீதிகள் வழியே பள்ளியை வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் நிஷை, நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகமாக உருவாக வேண்டும் அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் எனவும், தங்கள் வீடுகளை சேர்ந்தவர்களையும் சுற்றத்தாரையும் போதைப்பொருளிருந்து விடுவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.இதில் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள், கல்லூரி பேராசிரியைகள் பங்கேற்றனர்.