என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டத்தில்"

    • பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் நடந்தை ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த வசந்தா உள்ளார். உப தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்வரி செயல்பட்டு வருகிறார். ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா தலைமையில் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நடந்தை வி.ஏ.ஓ. ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான 100 நாள் வேலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியசூரம்பாளை யத்தில் கடந்த 40 ஆண்டு

    களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக கூறி பலமுறை கிராமசபா கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2-ல் நடந்த கிராம சபை கூட்டங்களும் குவாரி எதிர்ப்பால் புறக்கணிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது நடந்த கிராம சபை கூட்டத்தில், குவாரிக்கு ஆதரவாக கிராம சபை கூட்டம் நடைபெறு வதாகவும், தீர்மானங்களை படிக்காமலேயே கையெ ழுத்து வாங்குவதா கவும், தலைவர், உபதலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டு கேள்விகள் எழுப்பினர்.

    தொடர்ந்து, வார்டு உறுப்பினர்கள் கையெழுத்து வாங்குவதிலேயே தீவிரமாக இருக்க, தீர்மானத்தை படிக்க வேண்டும் என ஒரு தரப்பு வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய பி.டி.ஓ

    நடராஜன் கிராமசபை கூட்டத்தில் போடப்பட்டுள்ள தீர்மா னங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டது என அறி வித்தார். அசம்பா விதத்தை தடுக்க நல்லூர் போலீ சார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து ஊர்ப்பொது மக்கள் சிலர் கூறும்போது, இங்குள்ள குவாரிகளால் நாங்கள் நிம்மதி இழந்து தவிக்கிறோம். ஆனால் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கூறி குவாரி பிரச்சனையை அப்படியே விட்டு விட்டனர் என்றனர்.

    • 422 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்
    • புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 422 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர்செய்யது முகம்மது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
    • அருள்பிரபின் நன்றி கூறினார்.

    இரணியல்:

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோசேம் முன்னிலை வகித்தார். இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராஜா வரவேற்றார்.

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். குமரி மாவட்டம் வருகை தரும் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்குவது. அழகியமண்டபத்தில் வைத்து நாளை (28-ந்தேதி) நடைபெறும் மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் வெள்ளை சீருடையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணை செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா, குளச்சல் சபீன், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அருள்பிரபின் நன்றி கூறினார்.

    • வாழப்பாடி வட்டார தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம், வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி வட்டார தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம், வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, வாழப்பாடி வட்டத் தலைவர் விஜயராஜ் தலைமை வகித்தார்.

    வட்டக் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழுதடைந்துள்ள விஏஓ அலுவலக கட்டடங்களை சீரமைக்க வேண்டும். அனைத்து விஏஓ அலுவலகங்களுக்கும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். 2018 ல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்காத 2 அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • 3 இயந்திரங்களில் ஒன்று இயங்கவில்லை

    கரூர்:

    கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர். அப்போது கூனம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துசாமி பேசும் போது, நில உரிமை சான்றிதழ் தற்போது வழங்கப்படுவதில்லை. வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் நில உரிமைச்சான்று கேட் கின்றனர். எனவே விஏஓக்கள் நில உரிமை சான்று வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    இதற்கு கலெக்டர், நில உரிமை சான்று அங்கீகாரம் இல்லாத ஒன்று. இதனை ஒரு வழக்கமாக ஏற்படுத்தி விட்டனர். அடங்கல் இருந்தால் போதுமானது. இனி நில உரிமை சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. வேறு அலுவலகங்ளில் நில உரிமை சான்று கேட்கமாட்டார்கள் என்றார்.

    பணிக்கம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜா கூறும்போது, குளித்தலை வேளாண்மை பொறியியல் துறையில் 3 உழவு இயந்திரங்கள் உள்ளன. நான் பணம் கட்டி ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. நான் இரு தனியார் இயந்திரங்களை பயன்படுத்திய நிலையில் மேலும் ஒரு இயந்திரத்திற்காக பணம் கட்டி இன்னும் நேரம் வழங்காமல் உள்ளனர் என்றார்.

    இதற்கு கலெக்டர், குளித்தலை வேளாண் பொறியியல் அலுவலரை பதில் அளிக்க அழைக்க, அவர் விடுப்பு என கரூர் அலுவலர் ஒருவர் பதிலளித்தார். மேலும் 3 இயந்திரங்களில் ஒன்று இயங்கவில்லை. மற்றொன்று பணிமனையில் உள்ளது. ஒரு இயந்திரம் தான் பயன்பாட்டில் உள்ளது என்றார்.

    யாரிடம் விடுப்பு தெரிவித்தார். விவசாயிக்கு தேவைப்படும் போது வழங்குவதற்குதான் இயந்திரம் அதனை ஏன் தயாராக வைக்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்காத அலுவலர் மற்றும் இயந் திரத்தை தயாராக வைக்காத அலுவலர் ஆகிய இரு வேளாண் அலுவலர்களுக்கு 17பி விளக்கம் கேட்டு சார்ஜ் மெமோ அனுப்ப உத்தரவிட்டார்.

    • குறைதீா்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • 317 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

    கரூா் :

    கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 317 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

    பின்னா், மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா். தொடா்ந்து முகாமில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,194 மதிப்பிலான பிரைலி கடிகாரம், கருப்புக் கண்ணாடி, மடக்கு குச்சியையும், இரண்டு மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.12,500 மதிப்பில் கைப்பேசிகளையும், ஒரு பயனாளிக்கு ரூ.2,820 மதிப்பில் காதொலி கருவியும், கண் பாா்வையற்ற ஒருவருக்கு சுயதொழில் தொடங்க மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.10ஆயிரம் வழங்கப்பட்டதற்கான ஆணையும், பாலம் திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு தனியாா் வேலைக்கான உத்தரவுக்கான ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.

    • எடப்பாடி நகராட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு-மோதலில் அ.தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் குடிநீர், கழிவு நீர் கழிவுநீர் வெளியேற்றம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

    எடப்பாடி:

    எடப்பாடி நகராட்சி கூட்டம் இன்று காலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் குடிநீர், கழிவு நீர் கழிவுநீர் வெளியேற்றம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

    நகரமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து விவரம் வாசிக்கப்பட்ட பொழுது, பூலாம்பட்டி குடிநீர் உந்து நிலையத்தில், மின்மோட்டார் பராமரிப்பதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை வாசித்த நகராட்சி வருவாய் ஆய்வாளரிடம் அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய முற்பட்டனர். அப்போது அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இதனையடுத்து தி.மு.க. வினர் எடப்பாடி நகராட்சியில் பல்வேறு நிதி ஈடுபடுவதாகவும் ,அதுகுறித்த விவரங்களை கோரும் தங்களை தாக்க வருவதாகவும் இதற்கு தி.மு.க.வினர் மன்னிப்பு கேட்கும் வரை நகர மன்ற கூட்ட அரங்கிலிருந்து வெளியேறப் போவதில்லை என அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×