என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிப்பெண்கள்"

    • சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
    • 11-ம் வகுப்பு மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்.

    வேதாரண்யம்:

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    அதில், நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் தென்னம்புலம் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

    இதனை, யாதவர் ஆலோசனை மையம் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாணவிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி திருவள்ளுவர் உருவம் பொறித்த கேடயம், திருக்குறள் புத்தகம் மற்றும் ரொக்க பரிசு வழங்கினர்.

    இதில் யாதவர் ஆலோசனை மைய மாநில தலைவர் ஜம்புலிங்கம், மகளிர் பிரிவு ஜெயமீனாகுமாரி, சித்ரா, மாநில பொது செயலாளர் ராகவன், நாகை மாவட்ட அமைப்பாளர் வீரையன், மாவட்ட பொருளாளர் ராமநாதன், உறுப்பினர்கள் ராமமூர்த்தி துரை, ரவி, ஒன்றிய கவுன்சிலர் உஷாராணி, கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமரன், அஞ்சலக பணியாளர் சௌந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரகண்டநல்லூரில் ஸ்ரீ லக்ஷ்மி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 157 மாணவர்களில் 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் இப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • முதல்வர் பரணி மற்றும் நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் பள்ளியின் சக ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூரில் ஸ்ரீ லக்ஷ்மி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 157 மாணவர்களில் 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் இப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு பயின்ற விஷ்வா 600-க்கு 575 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அஸ்வினி, நிஷாந்தி, கீர்த்தனா ஆகிய 3 பேரும் 600-க்கு 562 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளனர். விநாயகமூர்த்தி 552 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். மாணவர்கள் விஷ்வா, நிஷாந்தி, லோகேஸ்வரி ஆகியோர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், அஸ்வினி இயற்பியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், பரமேஸ்வரி கணிதம், அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும் எடுத்துள்ள னர்.

    மேலும், இங்கு பயின்ற 38 மாணவர்கள் 500 மதிப்பெண் களுக்கு மேல் எடுத்துள்ளனர். சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் ராஜகோபாலன், செயலாளர் ராஜாசுப்பிரமணியம், முதல்வர் பரணி மற்றும் நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் பள்ளியின் சக ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.

    • மாணவி சுவாதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொது தேர்வில் மாநில அளவில் 3-வது இடமும் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.
    • மாநில அளவில் தேர்ச்சி பெறுவதற்கு பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தியதை அன்றே படித்து முடிக்க வேண்டும் என சுவாதி கூறினார்.

    கடலூர்:

    பண்ருட்டிஒன்றியம் கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி சுவாதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொது தேர்வில் மாநில அளவில் 3-வது இடமும் மாவட்ட அளவில்முதலிடமும் பெற்றுள்ளார். மாநில அளவில் தேர்ச்சி பெறுவதற்கு பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தியதை அன்றே படித்து முடிக்க வேண்டும். படிப்பதை எழுதி பார்த்தால் மனதில் நன்கு பதியும். நாம் படிப்பதை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். தேர்வை நல்ல முறையில் எழுத வேண்டும். பாடத்தில் எந்த சந்தேகம் இருந்தாலும் அதனை ஆசிரியர்களிடம் உடனே தீர்த்து கொள்ள வேண்டும். மேலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் எனக்கு நன்கு ஊக்கம் அளித்தனர்.நீட் தேர்வு எழுதி உள்ளேன். அதன் பிறகு டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

    • சுவாதி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 596 மதிப்பெண் பெற்றார்.
    • அவரின் பெற்றோரை கவுரவப்படுத்தி, அவர்களின் குடும்பத்திற்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைக் கண்ணன். விவசாயி.இவரது மனைவி தங்கம். இவர்களின் மகள் சுவாதி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 596மதிப்பெண் பெற்று மாநில அளவில்3-ம் இடமும், கடலூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பெற்றுள்ளார். அவரை பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரி வித்து பாராட்டினார். அவரின் பெற்றோரை கவுரவப்படுத்தி, அவர்களின் குடும்பத்திற்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார்.

    பின்னர்டாக்டர் ராம தாஸ் வழிகாட்டுதலின்படி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் அறிவுறுத்தலின் படி, மே 31-ந் தேதிக்குள் வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டி னை வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர், தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட் டோர் ஆணைய தலைவர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதற்கான படி வத்தை வழங்கி, வன்னியர் களுக்கான உள்ஒதுக்கீடு பயன் குறித்தும் எடுத்துக் கூறினார். இதில் பா.ம.க. மாவட்ட அமைப்பு துணை தலைவர் ஜெயக்குமார், என்.எல்.சி. ஊழியர் உக்கரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஏ.கே.டி.அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 754 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 748 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • இதையடுத்து அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளைபாராட்டி சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 754 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 748 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இப்பள்ளி 99.02 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இதில் மாணவி அபிராமி 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்களும், மாணவர் புகழ்வர்மன் 589 மதிப்பெண்களும், மாணவர் அமீன் 587 மதிப்பெண்களும், மாணவி ஷெரின் 587 மதிப்பெண்களும், மாணவர் புவனேஸ்வர்குமார் 587 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும்கணித பாடத்தில் 9 பேரும், இயற்பியல் பாடத்தில் 6 பேரும், வேதியியல் பாடத்தில் 30 பேரும், உயிரியல் பாடத்தில் 5 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 5பேரும், வணிகவியல் பாடத்தில் ஒரு வரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 3 பேர் எனமொத்தம் 59 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது தவிர 590 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவரும்,580-589 மதிப்பெண்கள் வரை 21 பேர், 570-579 மதிப்பெண் வரை 39 பேர், 550-569 மதிப்பெண்கள் வரை 78 பேர், 500 முதல் 549 மதிப்பெண்கள் வரை 216 பேர், 450 முதல்        மதிப்பெண்கள் வரை 412 பேர், 400 முதல் 449 மதிப் பெண்கள் வரை 568 பேர் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    இதையடுத்து அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜே ந்திரன், பள்ளிமுதல்வர் வெங்கட்ரமணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

    • பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதிய நம்பியார் நகரை சேர்ந்தவர் இந்திரா.

    இவரது மகள் குணவதி (வயது 15).

    இவர் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

    இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    இதில் மாணவி குணவதி ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்தது தெரியவந்தது.

    இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டினார்.

    இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் குணவதியை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார்.

    இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.
    • டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியை சார்ந்த ரெயில்வே அதிகாரியான பிரபாகரன், கல்லூரி பேராசிரியை விமலாதேவி தம்பதியின் மகன் ரஜநீஷ். இவர் நீட் தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.

    இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது. இதில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்த ரஜநீஷ், விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்த அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் இனிப்புகள் ஊட்டி பாராட்டினர். சிறுவயதிலிருந்து ரஜநீஷ் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவுகளோடு பள்ளி படிப்பினை முடித்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பில் 482 மதிப்பெண்களும், பிளஸ்-2 தேர்வில் 490 மதிப்பெண்கள் எடுத்தார். நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நீட்தேர்விற்கு சிறப்பு வகுப்புகளில் பயிற்சி பெற்று முழு மதிப்பெண்ணை ரஜநீஷ் எடுத்துள்ளார்,

    மாணவன் ரஜநீஷ் கூறுகையில், டெல்லியில் உள்ள எய்ம்சில் பயின்று, இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆக வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு. இதற்காக அதிகமாக பயிற்சி மேற்கொண்டதில், அதற்கான பலன் கிடைத்துள்ளது. டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், தாய் விமலா தேவி, தொடர்ந்து உறுதுணையாக இருந்ததாகவும், உழைப்பினை கொடுத்தால் அதற்கான பலன் கிடைக்குமென அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும், மாணவன் ரஜநீஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    அரசு பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திரு.வி.க. வீதியில் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. தற்போது வெளியான பிளஸ்-2 தேர்வில் மாணவி சரஸ்வதி 594 மதிப்பெண் பெற்று முதல் இடத்ைத பிடித்து உள்ளார். 2-ம், இடத்தை மாணவி அபிநயா, 3-ம் இடத்தை மாணவன் ரேஷிநாத், 4-ம் இடத்தை மாணவி பிரிய வர்தனா (583/600), 5-ம் இடத்தில் மாணவன் வாஞ்சிநாதன் (582/600) மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து உள்ளனர். 10-ம் வகுப்பு பொது தேர்வில் அதிகபட்சம் மதிப்பெண்களை பெற்ற மாணவி ஐஸ்வர்யா (495/500) முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தில்மாணவி அம்ரூதா (481/500), மூன்றாம் இடத்தில் மாணவி ஜெயவர்ஷினி (476/500), நான்காம் இடத்தில் மாணவி இவாஞ்சிலின் மோனிக்கா (475/500), ஐந்தாம் இடத்தில் மாணவி தாரணி (473/500), லாவண்யா (473/500) மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

    சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின்சேர்மன் டாக்டர் எஸ். ரவீந்திரன், பொருளாளர் எம். சிதம்பரநாதன், மேளான் டிரஸ்டி ஜி. முத்து சரவணன் ,தாளாளர் எம்.ராஜசேகரன், பள்ளியின்முதல்வர்ஆர். யமுனாராணி, துணை முதல்வர் எம்.சாந்தி, ஆசிரியர்கள்,ஊழியர்கள் அனைவரும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள்.மேலும் இந்த கல்வி ஆண்டில்மாணவ/ மாணவியர்கள் மேற்படிப்பிற்கான அனைத்து விதமான நுழைவுதேர்வுகளையும் எதிர்கெள்ளும் வகையில் பள்ளியின் முதல்வர் மற்றும்ஆசிரியர்கள் திறன்படசெயல்படுவதாக தாளாளர்தெரிவித்துள்ளர்.

    ×