search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முரளிதரன்"

    • தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை.
    • தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

    மதுரை:

    மதுரை ரிசர்வ் லைன் விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 39 ஆண்டுகளாக தொழில் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஆசிரியர் முரளிதரனின் கல்விப் பணியை கவுரவிக்கும் வகையில் இன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முரளிதரன் கூறியதாவது:-

    தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஏற்கனவே மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வாங்கியுள்ளேன். தற்போது தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

    என்னால் இயன்றவரை இதனை பணியாக பார்க்காமல் மாணவர்களுக்கு செய்யும் கடமையாக பார்த்துதான் பணி செய்து வருகிறேன்.

    மாணவர்களுக்கு புரியும் வகையில் கொரோனா காலத்தில் கூட தொழில் கல்வி தொடர்பான வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் பயிற்சி அளித்தேன். தொடர்ந்து யூடியூப் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

    எனது குடும்பம் ஒரு ஆசிரியர் குடும்பம், எனது தந்தை ஆசிரியராக இருந் தார். தற்போது எனக்கு 39 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்ததன் காரணமாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கான விருது வருகிற (செப்டம்பர்) 5-ந்தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன் வழங்கப்பட உள்ளது.

    தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள மதுரையை சேர்ந்த தொழில் கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு தமிழக பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் +2 பொதுத்தேர்வில் 578 மதிப்பெண் பெற்று ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதை முதலிடம்.
    • பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன் என பூங்கோதை தெரிவித்துள்ளார்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.

    4998 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 4355 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 87.13 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட 0.27 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பூங்கோதை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்தவர். இந்த மாணவி 600-க்கு 578 மதிப்பெண் பெற்றார். பள்ளியிலும் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார்.

    மாணவி பூங்கோதை கூறியதாவது:-

    ஏழை குடும்பத்தில் பிறந்தவள் நான். இவ்வளவு மதிப்பெண் பெறுவதற்கு எனது ஆசிரியைகள்தான் காரணம். என்னை ஊக்கப்படுத்தினார்கள். எப்போது சந்தேகம் கேட்டாலும் மனம் கோணாமல் சொல்லித் தருவார்கள். வீட்டில் அதிகமாக படிக்க மாட்டேன். இரவு 10 முதல் 11 மணி வரை மட்டுமே வீட்டில் படிப்பேன். பள்ளியில்தான் முழுமையாக படிப்பேன். சிறப்பு வகுப்பு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. படிப்பிற்காக 6 மாதமாக டி.வி. பார்க்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து படிப்பேன்.

    பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன். அம்மா வீட்டு வேலை செய்தும் அப்பா ஆட்டோ ஓட்டியும் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி பூங்கோதைக்கு உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்பதாக எத்திராஜ் கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் முரளிதரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதைக்கு, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இலவசமாகப் படிப்பதற்கான ஆணையை கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் முரளிதரன் நேரில் வழங்கியுள்ளார். 

    • ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள்.
    • எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்

    மும்பை:

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரரான இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து 800 என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.

    இதில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ஜெயசூர்யா, முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முரளிதரன் பேசுகையில், 'டெண்டுல்கர் எனது பந்து வீச்சை நன்றாக கணித்து செயல்பட்டார். அதனை பலரால் செய்ய முடியாது. பிரையன் லாரா எனக்கு எதிராக நன்றாக ஆடினார். 

    ஆனால் பெரிய அளவில் எனது பந்து வீச்சை அடித்து நொறுக்கியதில்லை. ராகுல் டிராவிட்டை போன்ற சிலரை நான் அறிவேன். அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் அவர் ஒருபோதும் எனது பந்து வீச்சை துல்லியமாக கணித்து ஆடியது கிடையாது. ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள். எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

    • அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    தூத்துக்குடி:

    மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ் , மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஐ.என்.டி.சி. ராஜ்,மண்டல தலைவர்கள் பிரபாகரன், ஜசன்சில்வா, சேகர்,செந்தூர்பாண்டி, மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவர் ராஜா,

    மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன்,அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ்.பி.ராஜன் , ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி,மாணவர் காங்கிரஸ் மாநகர் தலைவர் பிரவீன்துரை, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்,மீனவரணி மாநகர தலைவர் ரொனால்டு, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,

    மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, மாவட்ட நிர்வாகிகள் கோபால்,ராதாகிருஷ்ணன்,சாமுவேல்ஞானதுரை, கதிர்வேல், மகாலிங்கம், வாசிராஜன், கனகராஜ், சித்திரைபால்ராஜ், தனுஷ், நிர்மல் கிறிஸ்டோபர், சின்னகாளை,சண்முகசுந்தரம், சுசைவியாகுலம், ஜெயகிங்ஸ்டன், ஜெயராஜ், மகாராஜன், கருப்பசாமி, முருகன்,குமாரமுருகேசன், புஷ்பராஜ், ராஜரத்தினம், முனியசாமி இசக்கிபாண்டியன், நெப்போலியன், நவ்ரோஜ், நடேஷ்குமார், கிருஷ்ணன்,கணேசன்,உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×