search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடிக்க"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • ஒரு மாதத்தில் மட்டும் 35 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் ஓடும் பஸ்சில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி நட வடிக்கை மேற்கொண்டு வரு கிறார். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பெண்களிடம் பெண் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பெண் கொள்ளை யர்கள் கூட்டம் நெரிசல் அதிகமாக உள்ள பஸ்களில் கைவரிசை காட்டிவிட்டு உடனடியாக வெளியூர்க ளுக்கு தப்பி செல்வது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையில் ஈடுபடும் பெண்கள் கை குழந்தைக ளுடன் டிப்டாப் உடையில் வந்து கொள்ளையை அரங்கேற்றுவதும் தெரி யவந்துள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க பஸ் நிலையங்களில் கண் காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

    வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்தில் மப்டி உடையில் பெண் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யட்டுள்ளது. மேலும் பஸ்களிலும் சந்தேகப்ப டும்படியாக பெண்கள் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் வழிப்பறி திருட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. தற்பொழுது பஸ்களில் செயின் திருட்டு, செயின் மாயம் போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கும்பல் கைவரிசை காட்டுகிறார்கள். இவர் களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீ சார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கொள்ளை சம்பவங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நாகர்கோவிலில் அந்த கருவி மூலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலை தொடர்ந்து கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்- டிவிஷனலுக்குட்பட்ட பகுதிகளிலும் அபராதம் விற்பதற்கு நவீன கருவி வாங்க நடவடிக்கை எடுக் கப்படும். இந்த கருவியின் மூலமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரும் வாகனங் களை கண்காணிக்க முடியும். 400 மீட்டர் தொலைவில் அந்த வாகனம் வரும்போது அந்த வாகனத்தில் பதிவு எண் இந்த கருவியில் பதிவாகி விடும். ஹெல்மட் அணியாமல் வருபவர்களை யும் இந்த கருவி மூலமாக கண்டறிந்து அபராதம் விதிக்கலாம். செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டு பவர்களை கண்ட றிந்தும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார்.
    • நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 64). இவர், காடச்சநல்லூர் ஊராட்சி பில்லுமடை காடு பகுதியில் குத்தகைக்கு நிலம் பிடித்து குடிசை போட்டு தங்கியிருந்து ஆடு, மாடு வளர்பில் ஈடுபட்டு வந்தார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று காலை பழனியம்மாள் குடி சையில் இருந்து வெளியில் வரவில்லை. இதையடுத்து, தீவனம் இன்றி கால்நடை களும் கத்தத் தொடங்கின. அதனைக்கேட்டு அப்பகுதி மக்கள் குடிசைக்கு சென்று பார்த்துள்ளனர்.

    அங்கு, நிர்வாண நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

    பழனியம்மாளின் தலை யில் கல்லால் தாக்கியதில், அதிகளவில் ரத்தம் வெளி யேறிய நிலையில் உயிரி ழந்திருப்பது தெரியவந்தது. கொலை சம்பவம் குறித்து அறிந்த டி.எஸ்.பி. மகா லட்சுமி, சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, கொலை நடந்த விதம் குறித்து விசா ரணை மேற்கொண்டார்.

    நிர்வாண நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்ததை பார்க்கும் போது, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டடிருக்கலாம் என போலீசார் தெரிவித்த னர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான் முழுவிபரம் தெரிய வரம் என கூறினர். தொடர்ந்து மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. குடிசை வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய ஸ்டெபி, மெயின் ரோடு வரை சென்று நின்றுவிட்டது. மேலும், நாமக்கல்லில் இருந்து தடய அறிவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தடயங்களை சேகரித்தனர்.

    தொடர்ந்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட எஸ்.பி.கலைச்செல்வன், சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளியை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டார்.

    2 மாதங்களுக்கு முன்பு பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியைச் சேர்ந்த மூதாட்டி பாவாயம்மாள், பாப்பம்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் நிர்வணா நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இந்த வழக்கில் கொலையாளி குறித்து துப்பு துலங்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், அதேபோல் மற்றொரு கொலை சம்ப வம், பள்ளிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உண்ணியூர்கோணம் மாடத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (வயது 46). இவரது மகன் சுபாஷ் வயது (26).

    இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் வந்து இருக்கிறார். லதா சித்திரங்கோடு அருகே ரைஸ் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு 7.30 மணி அளவில் உண்ணியூர்கோணம் பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போதுமோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதிர்ச்சி அடைந்த லதா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு முதலுதவி அளித்து, குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து குலசேகரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் லதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை அடை யாளம் காணும் விதமாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. ஆய்வு செய்து வருகிறார்கள். லதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை காரணமாக ஆசிட் வீசப்பட்டதா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் நேரடியாக சென்று அந்த பகுதியை ஆய்வு செய்தார்.

    • பரமத்திவேலூர் அருகே சூரியாம்பாளையம் பகுதி யில் உள்ள வீடுகளில் கட்டி யிருந்த கன்று குட்டிகள், நாய், மயில்கள், ஆடுகள் உள்ளிட்டவற்றை அந்த பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை புலி தாக்கி கொன்றது.
    • கால்நடை களை தொடர்ந்து தாக்கி கொன்று வரும் சிறுத்தை புலியை பிடிக்கக்கோரி, பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா,

    கபிலர்மலை அருகே உள்ள

    இருக்கூர், செஞ்சுடை யாம்பாளையம் மற்றும் சுண்டப்பனை பகுதிகள், பரமத்திவேலூர் அருகே சூரியாம்பாளையம் பகுதி யில் உள்ள வீடுகளில் கட்டி யிருந்த கன்று குட்டிகள், நாய், மயில்கள், ஆடுகள் உள்ளிட்டவற்றை அந்த பகு

    தியில் சுற்றித் திரியும் சிறுத்தை

    புலி தாக்கி கொன்றது.

    இதையடுத்து, கால்நடை களை தொடர்ந்து தாக்கி கொன்று வரும் சிறுத்தை புலியை பிடிக்கக்கோரி, பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ், மாவட்டச் செயலாளர் சுஜாதா செல்வி, பா.ஜ.க மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட துணை தலைவர் வடிவேல், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் அரிமா காந்தி, மாவட்ட துணை செயலாளர் பழனியப்பன், பரமத்தி ஒன்றிய தலைவர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈஸ்வரனை கடத்தியதாக சீனிவாசன், பிரைட் பால் ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.ஈஸ்வரன் (46). புன்செய்ப்புளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 24-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தன்னை அடித்து பணம் கேட்டு கடத்தி ரூ.1.50 கோடி பறித்து சென்றதாக புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்தது தெரிய வந்தது. அவர் தூண்டுதல் பெயரில் மோகன் உள்பட 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமறை வாகிவிட்டனர்.

    இதனையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்ப டைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஈஸ்வரனை கடத்தியதாக சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (49). கோவை தொண்டாமுத்தூர் என். ஆர். நகரை சேர்ந்த பிரைட் பால் (40) ஆகியோரை புளியம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சத்திய மங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் உள்பட 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    சரவணன் பிடிபட்டால் தான் எதற்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றது என உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையத்தில் முருகன், மாரியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவில்களின் நடை தினமும் காலை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

    இதே போல் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம் போல் கோவில்களை திறக்க வந்த பூசாரிகள் 2 கோவில்களின்

    உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ 25,000 திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்களும் வந்து பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் இதற்கு முன்பு கோவில்களில் கைவரிசை காட்டியவர்கள் பட்டியலை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாளவாடி அருகே வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து கொன்றது.
    • மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தாளவாடி வனச் சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரசுவாமி (49)இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார் வழக்கம் போல் மாடுகளை அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார் நேற்று மதியம் மாடுகளை அழைத்தை வர சென்ற போது ஓரு பசு மாடு இறந்துகிடந்தது மாடு இறந்துகிடந்த இடம் கர்நாடக வனப்பகுக்கு உட்பட்டது.

    இதுபற்றி தாளவாடி வனத்துறை மற்றும் கர்நாடக வனத்துறைக்கு தகவல் அளித்தார் சம்பவயி–டத்திக்கு வந்த வனத்துறை இறந்த மாட்டை ஆய்வு செய்தனர் புலி தாக்கி பசு மாடு இறந்தது தெரியவந்தது.

    இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக கால்நடை வளர்போர் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-

    கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்றனர்.

    ×