search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பெண்கள்"

    • திருமங்கலம் அருகே 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகம், அம்பட்டையன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது30). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியில் இருந்த சிவரஞ்சனி இன்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த சிந்து பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக உசிலம் பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவரஞ்சனி தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகத்துக்குட்பட்ட தூம்பக் குளம் முனியாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி தேவி(55). இவர் களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சில ஆண்டுகளாக தேவிக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. இதனால் விரக்தியில் இருந்த அவர், தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
    • கோரிக்கை மனுவும் அவர்கள் வைத்திருந்த பையில் மண்எண்ணை கேன் இருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொண்டு வந்து அதிகாரியிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில் புவனகிரியை சேர்ந்த சசிகலா தனது தாய் அஞ்சம்மாள் (வயது67) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார்.

    அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது கோரிக்கை மனுவும் அவர்கள் வைத்திருந்த பையில் மண்எண்ணை கேன் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த மண்எண்ணை கேனை போலீசார் பறிமுதல் செய்தனர் பின்னர் அவர்களிடம் இருந்த கோரிக்கை மனுவில், எனது மகள் ராதிகா பிரியா என்பவருக்கும், சதீஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ராதிகாப்பிரியா கடந்த10.2.2022 அன்று இறந்து விட்டதால் மேற்படி இறப்பு தொடர்பாக அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறதுசதீஷ்குமார் என்பவரிடம் இருந்து தனது மகளுடைய நகை, பொருட்கள் அனைத்தையும் பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய முறையில் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி மனு அளிக்க அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    • ஓடும் பஸ்சில் பயணியிடம் 2 பெண்கள் சங்கிலியை பறித்தனர்
    • போலீசில் ஒப்படைத்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூருக்கு நேற்று மாலை ஒரு அரசு டவுன் பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது எசனை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ஒரு பெண் பயணியின் அருகே இருந்த 2 பெண்கள் சேர்ந்து தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இதனை கண்ட அந்த பெண், சக பயணிகள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து, அவர்களிடம் இருந்து சங்கிலியை கைப்பற்றி பெரம்பலூர் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தார். பின்னர் அவர்களை போலீசார் அழைத்து சென்றனர். அந்த பெண் பயணி புகார் தராததால், அந்த 2 பெண்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீவலூர் திருப்பூண்டி, மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரிமளா (28). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரிமளா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் பரிமளா தனது தங்கையுடன் ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு கம்பெனியில் 3 வருடங்களாக தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பரிமளா திடீரென எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டார். இது குறித்து அவரை தங்கைக்கு தெரிய வந்ததும் அக்கா பரிமளாவை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது பரிமளா தான் வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பரிமளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா வெங்கம்பூர் அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அளவுதீன். அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது தாய் ஆயிஷா பீவி (63). மகன் வீடு அருகே தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஆயிஷா பீவி கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று வயிற்றுவலியால் துடித்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கி னார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா பீவி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ×