என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கைக்கோள்"

    • இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.
    • 3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.

    சீனா, சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளது. இந்த நிலையில் விண்வெளி நிலையத்துக்கு முதல் பெண் விண்வெளி என்ஜினீயர் உள்பட 3 விண்வெளி வீரர்களை சீனா அனுப்பியது. அவர்கள் இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.

    இந்த விண்கலம் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஷென்சோ-19 விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.

    • அமீரகத்தின் கலீபா செயற்கைக்கோளை விட இந்த செயற்கைக்கோள் மிகவும் சக்திவாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • விரைவில் விண்ணில் ஏவுவதற்காக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி ஏவுதளத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    துபாய்:

    துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள எம்.பி.இசட்- சாட் என்ற முகம்மது பின் ஜாயித் செயற்கைக்கோளின் இறுதிகட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளது. இதில் அந்த செயற்கைக்கோளுடன் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குட்டி செயற்கைக்கோளும் இந்த மாதம் விண்ணில் பாய்கிறது.

    இது குறித்து துபாய் விண்வெளி மையத்தின் பொது இயக்குனர் சலெம் அல் மர்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பெயரில் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் எம்.பி.இசட் சாட் அதாவது முகம்மது பின் ஜாயித் என்ற பெயரில் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் முழுவதுமாக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் மொத்தம் 800 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த எம்.பி.இசட் சாட் பிரதேச அளவில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிசக்தி வாய்ந்த செயற்கைக்கோளாகும். அதேபோல உயர்தரத்திலான துல்லிய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை இந்த செயற்கைக்கோள் சேகரிக்க உள்ளது. குறிப்பாக மாறி வரும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த கண்காணிப்பு, வேளாண்மை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த செயற்கைக் கோள் பயன்படுத்தப்படும்.

    அமீரகத்தின் கலீபா செயற்கைக்கோளை விட இந்த செயற்கைக்கோள் மிகவும் சக்திவாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 மடங்கு அதிக துல்லியத்தில் புகைப்படங்களை இந்த செயற்கைக்கோள் அனுப்ப உள்ளது. தரவிறக்கமானது மும்மடங்கு வேகமாக இருக்கும்.

    இதில், 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 நட்சத்திரங்கள், அரபி வழிவெழுத்தில் எழுதப்பட்ட செயற்கைக்கோளின் பெயர், அமீரக தேசிய கொடி மற்றும் அமீரக பிரதேசத்தை காட்டும் வரைபடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக இம்மாதத்திற்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட தொழில்நுட்ப பரிசோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் விண்ணில் ஏவுவதற்காக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி ஏவுதளத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்த செயற்கைக்கோளுடன் அமீரகத்தில் உள்ள விண்வெளி மற்றும் உயர் தொழில்நுட்ப கல்லூரிகளின் ஒத்துழைப்பில் ஹெச்.சி.டி சாட் -1 என்ற மினி நானோ செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கல்லூரி மாணவர்கள் அந்த செயற்கைக்கோளில் பொருத்தப்படும் பேலோட் எனப்படும் கருவிகள், உபகரணங்களை முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கி உள்ளனர்.

    இந்த குட்டி செயற்கைக்கோளும் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் எம்.பி.இசட் சாட் உடன் சேர்த்து 2-வது செயற்கைக்கோளாக பால்கன் 9 ராக்கெட்டில் இது அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவப்படும் நிகழ்வை காண https://mbrsc.ae/live/ என்ற இணையதள முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.எஸ்-இஓ செயற்கைக் கோள் அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுக்கும் தன்மை கொண்டது.
    • கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூர் மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்தியாவில் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அத்துடன், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    அவ்வகையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ்-இஓ, நியூசர் உள்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவ முடிவு செய்யப்பட்டு, அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

    ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு செயற்கைக் கோள்களை தாங்கிய பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

    இந்த ராக்கெட்டில் முதன்மை செயற்கை கோளான டி.எஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம்பிடிக்கும் திறன் உடையது. மேலும் நியூசர் செயற்கை கோள் 155 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர்ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும் தன்மை கொண்டது.

    மேலும் இதனுடன் கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது 2.8 கிலோ எடை கொண்டது. 

    • செயற்கைக்கோள் அதிக தெளிவுடன் ஒரே நேரத்தில் பலகோணங்களில் பூமியை படம் எடுக்கும் திறனுடையது.
    • நாளை மாலை 6 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

    இந்தியாவில் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்கள் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ்-இஓ, நியூசர் உள்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (30-ந்தேதி) மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளுக்கான 25 மணி நேர 'கவுன்டவுன்' இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் முதன்மை செயற்கை கோளான டி.எஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. வண்ண புகைப்படம் எடுக்கும் திறன் உடையது. மேலும் நியூசர் செயற்கை கோள் 155 கிலோ எடை கொண்டது.

    இது சிந்தடிக் அப்ரேச்சர்ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும் தன்மை கொண்டது.

    மேலும் இதனுடன் கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது 2.8 கிலோ எடை கொண்டது.

    இந்த செயற்கைகோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் இறுதி பாகமான பி.எஸ்.4 எந்திரம் உதவியுடன் சில ஆய்வுக் கருவிகளும் வலம் வர உள்ளன.

    ×