search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன்ஷிப்"

    • அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
    • எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக.. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம்.

    ஜெர்மனியில் 2024 ஆம் ஆண்டுகான யூரோ கால்பந்து கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கால்பந்துலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகள் அணி நேற்று முன் தினம் பிரான்ஸுடன் காலிறுதியில் மோதியது. இந்த போட்டியில் 120 நிமிடங்கள் வரை யாரும் கோல் அடிக்காததால் பெனால்டி மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

    பெனால்டியில் ரொனால்டோவின் 1 கோலையும் சேர்த்து மொத்தம் 3 கோல்களை மட்டுமே போர்ச்சுகல் அடித்த நிலையில் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மைதானத்தில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்ட ரொனால்டோ தோல்வியால் அழுத்த பெபேவை தேற்றினார். முன்னதாக காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் சுற்றில் ஸ்லோவேனியாவுடன் போர்ச்சுகல் மோதும் போட்டியில் கோல் ஒன்றை தவறவிட்டதற்காக ரொனால்டோ கதறி அழுத வீடியோ அனைவரையும் கண்கலங்க செய்தது.

    இந்த வருட தொடருடன் யூரோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து விலகுவதாக ரொனால்டோ அறிவித்திருந்த நிலையில் அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தோல்வி குறித்து ரொனால்டோ தற்போது மனம் திறந்துளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'போர்ச்சுகலின் பெருமையை வருங்காலங்களில் உயர்த்தும் பணி தொடரும். [இந்த தொடரை பொறுத்தவரை] நாங்கள் அதிகமாக எதிர்பார்த்தோம், நாங்கள் இன்னும் அதிகமானவைக்கு தகுதியுடவர்கள்.

    எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். நாங்கள் இதுவரை செய்த சாதனைகள் அனைத்துக்கும் நீங்கள் அளித்த ஆதரவு தான் காரணம் மைதானத்துக்கும் உள்ளேயும், வெளியேயும் இந்த பெருமை தொடரும். ஒன்றாக இணைந்து தொடர்ந்து அதைக் கட்டி  எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார். 

    • 4, 16,18,20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள், பெண்கள் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.
    • பதிவு செய்யப்படாத கிளப்புகளை வீரர்கள் UNATTACHED தடகள வீரர்களாகவே பதிவு செய்யப்படுவார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் தடகள சங்கத்தின் சார்பில் கிட்ஸ் கிளப் பள்ளிகளின் நிறுவனர் மோகன் கந்தசாமி நினைவு 5-வது திருப்பூர் மாவட்ட அளவிலான 14, 16,18,20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள், பெண்கள் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் வருகிற 13-ந் தேதி அவினாசி அருகே பழங்கரையில் உள்ள டீ பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது.

    98 வகையான தடகள போட்டிகள் நடைபெற இருக்கிறது. மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு மாநிலதடகள போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்பார்கள். மாநில தடகளப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள், கோவை நேரு விளையாட்டு அரங்கில், நவம்பர் மாதம் 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கும் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.

    திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை. தடகள சாதனை விவரங்கள், தேசிய, மாநில சங்க தகவல்கள், செய்திகளை www.tirupurathleticassociation.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் entrytaa@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கடைசிநாள் வருகிற 8-ந் தேதியாகும்.

    திருப்பூர் தடகள சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கிளப்கள் மட்டுமே கிளப் பெயரில் தடகள வீரர்களை பதிவு செய்ய முடியும். பதிவு செய்யப்படாத கிளப்புகளை வீரர்கள் UNATTACHED தடகள வீரர்களாகவே பதிவு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு 86677 99305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிறந்த தடகள வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் தடகள சங்கம் சார்பாக தேவையான உதவிகள் செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • 22 மாவட்டங்களைச் சேர்ந்த 214 வீரர்-வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.
    • ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான கடற்கரை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் குமரி மாவட்டம் பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. பல்வேறு பிரிவுகளின் கீழ் 2 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கடலூர் உள்பட 22 மாவட்டங்களைச் சேர்ந்த 214 வீரர்-வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். பள்ளம்துறை ஊராட்சி மன்ற தலைவர் ஆன்றனிமுன்னிலை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், போட்டியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளம் ஊர் தலைவர் சார்லஸ், செயலாளர் ரெனிஸ்டன், பொருளாளர் சகாய ஜார்ஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், சீனியர் கூட்டுறவு ஆய்வாளர் பினு, கன்னியாகுமரி விளையாட்டு அலுவலர் ராஜேஷ், மாவட்ட மல்யுத்த சங்க செயலாளர் ரஞ்சித், பயிற்சியாளர் நிகேஷ் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

    • இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • தஞ்சாவூரை சேர்ந்த வேலம்மாள் பள்ளி மாணவர்கள் மாதேஸ், பிரவினா கலந்து கொண்டனர். போட்டியில் அவர்கள் வென்று சாதனை படைத்தனர்.

    தஞ்சாவூர்:

    ஆந்திரா மாநிலத்தில் 3-வது மினி தென்னிந்திய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு அணி மாணவர்கள் பிரிவில் முதலிடமும், பெண்கள் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றனர்.

    இதில் மாணவர் அணியில் தஞ்சாவூரை சேர்ந்த வேலம்மாள் பள்ளி மாணவர்கள் மாதேஸ், பிரவினா கலந்து கொண்டனர். போட்டியில் அவர்கள் வென்று சாதனை படைத்தனர்.

    இதனை தொடர்ந்து சாதனை படைத்த மாணவர்களை வேலம்மாள் பள்ளி முதல்வர் ஜெபஸ்டின் ராபர்ட் கிளைவ் பாராட்டி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் கோவிந்தராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி தடகள வீரருக்கு நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.
    • தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடைபெறுகிறது.

    சிவகங்கை

    தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் சார்பில் 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிக்கு மாற்றுத்திறனாளி வீரரான சிவகங்கை மாவட்டம், சிவல்பட்டி கிராமத்தை வினோத்குமார் தகுதி பெற்றுள்ளார்.

    அவருக்கு பாராலிம்பிக் கமிட்டியால் நுழைவு கட்டணம், போக்குவரத்து, உணவு, தங்குமிடம், மருத்துவ உதவிகளுக்காக ரூ. 25 ஆயிரம் நிதி உதவியை பாராலிம்பிக் கமிட்டியின் சிவகங்கை மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் வழங்கினார்.

    அப்போது சிவகங்கை மாவட்ட பாரா ஒலிம்பிக் விளையாட்டு செயலாளர் பாபு, துணைத் தலைவர் சரவணன், பொருளாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×