என் மலர்
நீங்கள் தேடியது "குற்ற வழக்குகள்"
- முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆந்திராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
- ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
திருப்பதி:
தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சொத்து விவரம் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்த ஆய்வு நடத்தியது.
இதில் நாட்டில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆந்திராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துக்களுடன் 5-வது இடம் பிடித்துள்ளார்.
மந்திரி பி.நாராயணா ரூ.824 கோடியுடன் 6-வது இடத்திலும், முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ரூ.757 கோடியுடன் 7-வது இடத்திலும் பிரசாந்தி ரெட்டி எம்.எல்.ஏ என்பவர் ரூ.716 கோடியுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் ரூ.542 கோடி சொத்துக்களுடனும், நடிகர் பாலகிருஷ்ணா ரூ.482 கோடி மற்றும் மாதவி எம்.எல்.ஏ. ரூ.388 கோடியுடன் முதல் 20 பேர் கொண்ட பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
நாட்டில் உள்ள பணக்கார எம்.எல்.ஏ. க்களில் முதல் 20 பேரில் ஆந்திராவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தேசிய சொத்து மதிப்பில் 66-வது இடத்தில் உள்ளார்.
ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
சொத்து மதிப்பில் மட்டுமல்லாது குற்ற வழக்குகளிலும் ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஆந்திராவில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 138 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தேர்தலில் மனுத்தாக்களின் போது தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் 9, தெலுங்கானா 82, பீகார் 158 ,மகாராஷ்டிரா 127, தமிழ்நாட்டில் 132 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
- டி.ஐ.ஜி. முத்துசாமி போலீசாருக்கு அறிவுரை
- புலன் விசாரணை குறித்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் 6 நாட்கள் நடக்கிறது
வேலூர்:
வேலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்க ளுக்கு குற்ற வழக்குகளில் புலன் விசாரணை குறித்த பயிற்சி வகுப்புகள் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று முதல் 6 நாட்கள் நடக்கிறது.
இந்த பயிற்சி வகுப்பை வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
குற்ற வழக்குகளில் திறம்பட செயல்படுவதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இங்கு கற்றுக் கொடுக்கப்படும் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இது வழக்கு விசாரணைக்கு பெரிய உதவியாக இருக்கும்.
குற்ற வழக்குகளில் புதிய தொழில்நுட்பங்களை கையாள தெரிந்து கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவது எப்படி என்பதை கற்று தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பயிற்சி வகுப்பில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், பணியிடை பயிற்சி பள்ளி டி.எஸ்.பி. முருகன் மற்றும் தடயவியல், கைரேகை நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
- அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் நன்னடத்தை ஜாமீன் பெற்றார்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல் லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, வழிப் பறி மற்றும் கஞ்சா விற்பனை ஆகிய வழக்கு களில் அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டை பகுதியை சேர்ந்ததிலிப் (வயது 26) என்பவரை கடந்த 11-ந் தேதி டவுன் போலீசார் கைது செய்தனர்.
அப்போது அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் நன்னடத்தை ஜாமீன் பெற்றார். ஜாமீன் பெற்ற மறுநாளே அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தில் நடைபெற்ற திரவுபதியம்மன் கோவில் திருவி ழாவில் பொதுமக்களிடம் பிரச்சினை செய்த தாக வந்த புகாரின் பேரில் அரகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திலிப்பை சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து குற்றவியல் நடை முறை சட்ட பிரிவின் படி திலிப் நன்ன டைத்தை ஜாமீனை மீறிய குற்றத்திற்காக அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் (பொறுப்பு) லதா, அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா முன்பு திலிப்பை ஆஜர்படுத்தினார். அப்போது திலிப்பிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திலிப்பை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது
- பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது.
இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மோடி 3 வது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
இந்த 72 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம், கலவரத்தைத் தூண்டும் வெறுப்பு பேச்சு ஆகிய கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என ஜனநாயக சீர்திருத்த சங்கம் [ ADR ] அறிக்கை வெளியிட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாந்தனு தாக்கூர் மற்றும் தென் கிழக்கு பகுதிகளின் கல்வி - மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க எம்.பி சுகந்தா மஜூம்தார் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி குற்றம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
28 அமைச்சர்களில் பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது. 8 அமைச்சர்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆக புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
- கருப்பூர் புறவழிச்சாலையில் உள்ள டீ கடையில் டீ அருந்திவிட்டு நின்று கொண்டிருந்த போது புண்ணிய மூர்த்தியை முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பியது.
- பல்வேறு குற்ற வழக்குகள் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா சாலிய மங்கல ம்அருகே உள்ள களஞ்சே ரியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 42).
இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் அம்மாபேட்டை காவல் நிலைய த்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொர நாட்டு கருப்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்த போது இன்று காலை கருப்பூர் புறவழி ச்சாலையில் உள்ள டீ கடையில் டீ அருந்திவிட்டு நின்று கொண்டிருந்த போது புண்ணிய மூர்த்தியை முகமூடி அணிந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியது.
இதில் சம்பவ இடத்திலேயே புண்ணிய மூர்த்தி உயிரி ழந்தார்.தகவல யறிந்த உடனடியாக சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்த காவல்துறை துணை கண்காணி ப்பாளர்அசோ கன் மற்றும் தாலு கா காவல் நிலைய காவல்துறை யினர் புண்ணி யமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்ப கோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இப்படு கொலை சம்பவம் தொடர்பாக தாலுக்கா காவல்து றையினர் தீவிர விசாரணை மே ற்கொண்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.