search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனவு"

    • விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.
    • தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    கனவுகளுக்கு உளவியல் ரீதியாக அர்த்தம் சொல்பவர்கள் இருக்கின்றனர். ஆன்மீக ரீதியாகவும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்லலாம். பாம்புகள் அடிக்கடி கனவில் வருவது நல்லதா? கெட்டதா என்று பார்க்கலாம்.

    நமக்கு தினசரியும் ஏதாவது ஒரு விசித்திரமான கனவு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு பாம்புகள் துரத்துவது போல அடிக்கடி கனவில் வரும். சிலருக்கு பாம்புகள் கொத்தி விடும். அந்த கனவு வந்த உடன் அலறியடித்துக்கொண்டு எழுந்து விடுவார்கள். பாம்பு கனவில் வந்தால் குறிப்பாக விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

    நம்முடைய பிரியமானவர்கள், விலங்குகள், நாய்கள், இறந்து போனவர்களும் அடிக்கடி வருகின்றனர். அந்த கனவு ஏன் வந்தது எதனால் வருகிறது என்பதை நம்மால் உணர முடியாது. நல்லதா கெட்டதா என்பதையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் கனவுகள் எதையோ உணர்த்துகின்றன.

    பாம்பு கனவில் வந்தால் நம்முடைய துன்பங்கள் நீங்கும். இந்திய மக்கள் காலம் காலமாக நாகங்களை வழிபடுகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நாக வழிபாடு செய்து, புற்றுக்குப் பால் வார்த்து வருகின்றனர். சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமே என்று பலரும் பயப்படுவார்கள். சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். இதன் மூலம் கடன் பிரச்சினை தீரும். தொல்லைகள், துன்பங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    ஒற்றைப்பாம்பினை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்பை கனவில் கண்டால் ஆபத்துகள் நீங்கி நன்மை உண்டாகும். கனவில் பாம்பை கொன்றாலோ அல்லது இறந்த பாம்பை கனவில் கண்டாலே உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகள், ஆபத்துகள் நீங்கப்போகிறது என்று அர்த்தம்.

    பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால் அரசு அல்லது தனியார் வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

    அடிக்கடி பாம்பு கனவு வந்தால் அம்மன் கோவிலுக்கும் சிவன், முருகன் ஆலயத்திற்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வணங்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.
    • காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.

    உறங்கும் நிலையில் அனைவருக்கும் இயல்பாக வருவது தான் இந்த கனவு. உலகத்தில் கனவு நிலை வராதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில சமயங்களில் நம்மை மீறியும் ஏதேனும் ஒரு சக்தி ஆபத்தில் இருக்கும்போது நம்மை பாதுகாக்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது அனைத்து கனவுகளுக்கும் ஒத்துபோகுமா என்று கேட்டால் யாருக்கும் தெரியாத ஒன்றாகும். குறிப்பாக நாம் காணும் சில கனவுகள் நம்மை சில ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டுருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.

    தாலி, குங்குமம், திருமண மோதிரம், மெட்டி, மாலை போன்றவை தவறி கீழே விழுந்தால் அது நம் அனைவரின் மனதிலும் கெட்ட செயலாக தான் தோன்றும். அந்த சமயத்தில் ஏதேனும் பதற்றங்கள் அதிகமாக ஏற்படும். நமக்கு கெட்ட செயல் நடக்கும்போது தான் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் நாம் கூப்பிடுவது வழக்கம். திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி கழன்று விழுவது போன்று கனவு வந்தால் என்ன பலன், திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி விழுவது போன்று கனவு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளலாம்.


    திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:

    திருமணம் ஆன பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போல் கனவு வருவது இயல்பான ஒன்றுதான். தாலி அறுவது போன்று கனவு வந்தால் திருமணம் ஆன பெண்ணிற்கு அவருடைய கணவனின் மீது கோபம் கூட இருக்கலாம். அல்லது வீட்டில் கணவன்மார்கள் அந்த பெண்ணிடம் சண்டைகள் எதுவும் போட்டு இருக்கலாம்.

    அதுமட்டும் இல்லாமல் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் நிகழ்ந்து இருக்கும். இதில் எதுவும் இல்லையென்றால் கணவனிடம் அந்த பெண்ணிற்கு ஏதேனும் பிடிக்காமல் இருந்து இருக்கலாம். பெண்களுக்கு தாலி அறுந்து விழுவது போன்று கனவு வந்தால் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:

    திருமணம் ஆகாத பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போன்று வந்தால் அது இயற்கைக்கு மாறான ஒரு விஷயமாகும். தாலி அறுவது போல் கனவு வந்தால் அந்த பெண்ணிற்கு எந்த ஒரு சிந்தனை செயல்களும் அவர்களிடத்தில் இருக்காது. பிறகு ஏன் இந்த கனவு வர வேண்டும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளதுதான்.

    தாலி அறுவது போன்ற கனவு திருமணம் ஆகாத பெண்ணிற்கு வந்தால் அவர்களுக்கு திருமணம் பற்றிய பயமும், பதற்றமும் ஆழ்மனதில் அவர்களுக்கிடையில் அறியாமல் இருக்கும்.


    திருமணம் செய்யும் நேரம்:

    உதாரணத்திற்கு அந்த பெண்ணிற்கு வீட்டில் வரன் பார்த்து கொண்டிருப்பார்கள். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று கனவு வந்தால் நடக்கவிருக்கும் திருமணத்தில் ஏதோ ஒரு ஆபத்து உள்ளது என்ற அறிகுறியாகும். உள்மனதில் அந்த பெண்ணிற்கு இப்போது திருமணம் நிச்சயிக்க வேண்டாம் என்று கூறுவதாகும்.

    வர போகும் ஆபத்தில் இருந்து அந்த பெண்ணை பாதுகாப்படைய செய்கிறது. இது போன்று உள்ளவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்காமல் இருப்பது நல்லது. காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.

    6 மாதம் பொருத்திருந்து அதன் பின்னர் தாலி அறுவது போன்று கனவு வருகிறதா என்று பார்த்து, கனவு வரவில்லை என்றால் அதன் பிறகு திருமண பேச்சை பற்றி யோசிக்கலாம். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று வருவதால் அந்த பெண்ணிற்கு திருமணத்தில் பிரச்சனை ஏற்படப்போகிறது என்று கனவு மூலம் இறைவன் காட்டுகிறார்.

    அந்த பெண்ணிற்கு திருமணத்தில் அவசரம் காட்டக்கூடாது என்று அர்த்தமாகும். இது போன்ற சூழலில் யார் மீதும் காதல் கொள்வது, புதிதாக வரன்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும். கனவுகளில் பல வகையான கனவுகள் உள்ளன. அவைகள் அனைத்திற்கும் அர்த்தம் இருக்கிறது என்று கூறமுடியாது. ஆனால் சில கனவுகளுக்கு அர்த்தம் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

    • சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
    • இந்நிகழ்ச்சியில் “தொன்மை மறவேல்” என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார்.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் "தொன்மை மறவேல்" என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், தொன்மை மற்றும் வாழ்வின் முன்னேற்றம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பல்வேறு துறை வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

    மேலும் மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், உதவி இயக்குநர் (நான் முதல்வன்) திறன் பயிற்சி, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், மாவட்ட நூலகம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
    • சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தின் பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நாளை(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒருமுக்கியமான பகுதியாகும்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், சொற்பொழிவுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழர் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் அச்சடித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேடுக்கொண்டுள்ளார்.

    • கல்லூரி கனவு நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வழிவகை செய்யும் சேலம் கலெக்டர் கார்மேகம் பேச்சினார்.
    • “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழக முதல்- அமைச்சர் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, இன்று சேலம் அம்மாப்பேட்டையில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து நான் முதல்வன் "கல்லூரி கனவு " எனும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் புத்தகத்தினை வெளியிட்டார்.

    இதையடுத்து கலெக்டர் கார்மேகம், பேசியதாவது-

    சேலம் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்ற 1,600 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கு தேவையான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய நான் முதல்வன் "கல்லூரி கனவு" எனும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

    மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பார்த்திபன், செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், அருள், எஸ்.சதாசிவம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா விஜயக்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

    ×