search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டர் தடுப்பு சட்டம்"

    • படுகொலை சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலை சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    பொன்னை பாலு, அருள், சந்தோஷ், ராமு உள்ளிட்ட பத்து பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகத்தில் பூதாகாரமாக வெடித்தது.
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பல்வேறு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சு கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

    இந்த வழக்கில் தமிழக காவல் துறை கைது செய்தவர்களில் மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை மற்றும் ஜோசப் என நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 17 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசார் பரிந்துரைத்தனர்.

    அதன்படி முதற்கட்டமாக நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
    • பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் தப்புதான்.

    திருச்சி:

    ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதன் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் சேனலை சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    அதேபோன்று டெல்லியில் ஜெரால்டை கைது செய்து ரெயில் மூலம் அழைத்து வந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் மனு தாக்கல் செய்தார்.

    இதை தொடர்ந்து கோவை ஜெயில் இருந்து சவுக்கு சங்கரை பெண் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

    பின்னர் நேற்று காலை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது சவுக்கு சங்கரின் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஏற்கனவே இந்த வழக்கில் கோவை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். ஆகவே போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து அவரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    அங்கே விடிய விடிய போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது,பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதற்கு பின்னணியில் யார் யார்? கேட்டனர்.

    அதற்கு சவுக்கு சங்கர் பதிலளிக்கும் போது, யாரும் என்னை தூண்டவில்லை. ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜார்னலிசம். எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சியாக இருந்தபோது அவரை விமர்சனம் செய்துள்ளேன்.

    பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். அது தப்புதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன் என கூறியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    இதனிடையே பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக திருச்சி சிறையில் இருந்து அவரை போலீசார் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து சென்றனர்.

    • திருப்பூா் மாவட்டம், பல்லடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை 5 நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.
    • செல்வம் என்ற வெங்கடேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மாவட்டம், பல்லடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை 5 நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.

    இந்த கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் கடந்த செப்டம்பா் 21- ந் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

    இந்த வழக்கில் தொடா்புடைய திருநெல்வேலி மாவட்டம், வடக்கு அரியநாயகிபுரம், அம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த ஏ.செல்வம் (எ) வெங்கடேஷை (29) குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓா் ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

    இதையடுத்து, செல்வம் என்ற வெங்கடேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள வெங்கடேஷிடம் போலீசார் வழங்கினா்.

    அதேபோல, அவிநாசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொலை வழக்கில் தொடா்புடைய திண்டுக்கல் மாவட்டம், புஸ்பத்துரைச் சோ்ந்த கில்டன் (22), வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொள்ளை வழக்கில் தொடா்புடைய மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த தாந்தவன்குளத்தைச் சோ்ந்த மருது (29) ஆகியோரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

    காங்கயம் காவல் நிலையத்துக்குள்பட்ட சிவன்மலையில் ஆயில் மில் உரிமையாளா் வீட்டில் நடந்த கூட்டுக் கொள்ளை வழக்கில் தொடா்புடைய கள்ளக்குறிச்சி, ஆறாம்பூண்டி குச்சிக்காட்டைச் சோ்ந்த பி.அண்ணாதுரை (32), தளி தெருவைச் சோ்ந்த பி.சுந்தா் (25),ஆறாம்பூண்டி மேல்தெருவைச் சோ்ந்த எஸ்.ராமநாதன் (35) ஆகியோரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.திருப்பூா் மாவட்டத்தில் நிகழாண்டு தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 47 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தருமபுரி நகர் பகுதியில் திருடியதாக டவுன் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன.
    • திருட்டு வழக்கில் மாரியப்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    தருமபுரி,

    சென்னை டி.நகர் அடுத்த கண்ணம்மாபேட்டை சித்திவிநாயகா தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் மாரியப்பன் (வயது29). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளன.

    மேலும் இவர் மீது தருமபுரி நகர் பகுதியில் திருடியதாக டவுன் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளன. இதனால் மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரையின் பேரில் திருட்டு வழக்கில் மாரியப்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • அடிதடி, திருட்டு உள்பட 10 வழக்குகள் உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை காரை அந்தோ ணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாகர் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை காரை லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் நரேஷ்குமாரை (36) தாக்கி, அவரி டம் நகை, பணம் பறித்த வழக்கு மற்றும் அடிதடி, திருட்டு உள்பட 10 வழக்குகள் உள்ளது.

    இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசாரால் கைது செய் யப்பட்ட சுபாகர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுபாகரின் குற்ற செயல்களை கட்டுப்படுத் தும் விதமாக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் சுபாகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

    • நவம்பா் 11-ந் தேதி வி.சந்தோஷ், நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 போ் பணத்தை பறித்துச்சென்றனா்.
    • 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

    திருப்பூர் :

    திருப்பூா் வளையங்காடு பகுதியை சேர்ந்தவர் வி.சந்தோஷ். இவா் கடந்த நவம்பா் 11-ந் தேதி அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 போ் அவரை தூக்கிச் சென்று பணத்தை பறித்துச்சென்றனா். இதுகுறித்து சந்தோஷ் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

    இது தொடா்பாக திருப்பூா் காந்திநகரை சோ்ந்த எஸ்.சூா்யா (25), சாமுண்டிபுரத்தை சோ்ந்த நவீன்குமாா் (24), எஸ்.கோகுல்(19) ஆகிய 3 பேரை கடந்த நவம்பா் 28-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

    இந்நிலையில் சூா்யா மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி, 8 வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சூா்யாவை குண்டா் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையா் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூா்யாவிடம் காவல் துறையினா் நேரில் வழங்கினா்.

    • கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்கில் காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவை சேர்ந்த ஷேக் காதர் என்பவர் சிக்கினார்.
    • மாவட்ட கலெக்டர், சரித்திர பதிவேடு குற்றவாளியான ஷேக் காதரை ஓராண்டு தடுப்புக்காவலில வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்கில் காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவை சேர்ந்த ஷேக் காதர் (36) என்பவர் சிக்கினார்.

    இந்த நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து, அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, சரித்திர பதிவேடு குற்றவாளியான ஷேக் காதரை ஓராண்டு தடுப்புக்காவலில வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

    • இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில், பொன்மலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
    • குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்

    திருச்சி :

    திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து, குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

    இதற்கிடையே கடந்த 11.06.22 அன்று மேலக்கல்கண்டார்கோட்டை சோமசுந்தரம்நகர் சுடுகாட்டு பகுதியில், 19 வயது இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில், பொன்மலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான விசாரணையில் காட்டுமலை (எ) அருண்குமார், மணிகுண்டு (எ) மணிகண்டன், ஹரீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காட்டுமலை (எ) அருண்குமார், மணிகுண்டு (எ) மணிகண்டன், ஹரீஸ் ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடமுயற்சிப்பதும், ஆயுதங்களை கொண்டு கொலை செய்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 3 பேரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மேற்கண்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

    அதன்படி திருச்சி மத்திய சிறையில் உள்ள 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும், சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தியாகதுருகம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ராமுவின் செயலானது புது உச்சிமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துவதுடன் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 26), இவர் தனது உறவினருடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரை முன்விரோதத்தின் காரணமாக கடந்த மாதம் கொலை செய்தார். இந்த வழக்கில் காவல்துறையினரால் ராமு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் இந்நிலையில் ராமுவின் செயலானது புது உச்சிமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துவதுடன் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதாலும், இவர் வெளியே இருந்தால் வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவரது நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்கண்ட ராமுவை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் நேற்று ராமுவை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×