என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி ஆசிரியர்கள்"

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும்.
    • விவரங்களை மிகவும் அவசரம் என கருதி இ-மெயில் மூலம் உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும்.

    நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள், நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்கள், தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள் (அடிக்கடி விடுப்பில் உள்ளவர்கள்). மேற்காணும் விவரங்களை மிகவும் அவசரம் என கருதி இ-மெயில் மூலம் உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    • ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும்.

    அசாம் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பள்ளி ஆசியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆசிரியர்- ஆசிரியைகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீ சர்ட் போன்ற ஆடைகள் அணிந்து வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் சட்டை, பேண்ட்களிலும், ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு ஆசிரியர் தனது கடமையை செய்யும் போது அனைத்து விதமான கண்ணியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பணியிடத்தில் நல்லொழுக்கம், கண்ணியம், தொழில்முறை மற்றும் வேலையின் நோக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டியது அவசியமாகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
    • மாநில அரசு நிதியில் இருந்து நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை.

    ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் விடுவிக்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் போலராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து, செப்டம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, எஸ்.எஸ்.ஏ.ஆசிரியர்களுக்கான சம்பளம் இன்று விடுவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

    ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

    மத்திய கல்வி அமைச்சரிடம் 2 முறை கோரிக்கை வைத்தும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதி இதுவரையில் வரவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மேலும், மாநில அரசு நிதியில் இருந்து நிதியை எவ்வாறு பகிர்ந்து அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம் என்றார்.

    • இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றும் ஏற்றுக் கொள்ளாது.
    • தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாமல் தான் இங்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு பழகிக் கொள்கிறார்கள்.

    ரயில்நிலையங்கள், தபால் நிலையங்களில் எப்படி வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்களோ அதுபோல, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தமிழ்நாடு பள்ளிகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் சூழ்நிலை உருவாகும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழும் ஆங்கிலமும் பயின்றாலே நமது மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நானும் அத்தகைய பள்ளியில் தான் படித்தேன். எனது மகளும் தமிழும், ஆங்கிலம் மட்டும் தான் பள்ளியில் படித்தார்.

    மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்தினார்கள் என்றால் அது மறைமுகமாக இந்தி திணிப்பாக தான் பார்க்க வேண்டும். இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றும் ஏற்றுக் கொள்ளாது.

    வடநாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் வேலைக்கு வரும்போது யாரும் ஆத்திச்சூடியோ, திருக்குறளோ, தமிழ் இலக்கியமோ, இலக்கணமோ படித்துவிட்டு இங்கு வருவதில்லை.

    தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாமல் தான் இங்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு பழகிக் கொள்கிறார்கள்.

    நாமும் அவர்களுக்கு மொழி தெரியாததால் அவர்களை விரட்டி அடிப்பது கிடையாது. அதேபோல, தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அவர்களும் பழகிக்கொள்வார்கள்.

    யாருக்காவது இந்தி பயில வேண்டும் என்றால் சிபிஎஸ்இ பள்ளிகள், கேந்திரியா வித்யாலயா பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இருக்கிறது. அங்கு படித்துக் கொள்ளலாம்.

    ஆனால், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியை கட்டாயம் ஆக்குவது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி மூன்றாவது மொழி என்றால் அவர்கள் இந்தியைதான் திணிக்க முயல்கிறார்கள்.

    இது என்னவாகும் என்றால், எல்லாம் அரசு பள்ளிகளிலும் மூன்றாம் மொழிக்கான ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் பாஜக அரசு பீகார், உபியில் இருந்து ஆசிரியர்களை அனுப்புகிறோம் என்பார்கள்.

    ரயில்நிலையங்கள், தபால் நிலையங்களில் எப்படி வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்களோ அதுபோல, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தமிழ்நாடு பள்ளிகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் சூழ்நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் முதல் நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.
    • மாணவர்களின் கவரும் வகையில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும் என்ற நோக்கில், எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 234 பேருக்கு, இரண்டாம் பருவ பாட திட்டத்தில், இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் முதல் நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    இதில் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பள்ளி மாணவ மாணவர்களின் கல்விநிலை பாதித்து அதை சரிசெய்யும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் எளிதாகவும் இனிமையானதாக அமையும் வகையில், செய்முறையோடு, காட்சிப் பொருளாகக் கொண்டு, மாணவர்களின் மனதைக் கவரும் வகையில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும் என்ற நோக்கில், எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    பயிற்சி வகுப்பிற்கு நன்னிலம் வட்டார கல்வி அலுவலர் முருகபாஸ்கர், மணி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடேஷ் துரை வரவேற்றார்.

    ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஆசிரியர்கள் தன்னார்வத்தோடு பயிற்சியில் பங்கேற்றனர்.

    • மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் வகுப்பறையை பள்ளியறையாக மாற்றிய ஆசிரியர்களின் செயலை கண்டு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
    • பின்னர் இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சித்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையில் ரமேஷ் (வயது 40), புண்ணியமூர்த்தி (30) ஆகிய 2 ஆசிரியர்களும் தங்களது சட்டையை கழற்றிவிட்டு, மேலாடை இன்றி ஒரு ஆசிரியையுடன் நெருக்கமாக தொட்டு பேசுவது, அவருடன் சிரித்து அரட்டை அடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதைப் பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் வகுப்பறையை பள்ளியறையாக மாற்றிய ஆசிரியர்களின் செயலை கண்டு ஆத்திரமடைந்தனர். பின்னர் இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சட்டை இல்லாமல் இருந்த அந்த ஆசிரியர்கள் இருவரும் வாத்தலை போலீசில் புகார் செய்தனர். அதில் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கூடம் வந்ததாகவும், அப்போது சட்டையை கழற்றி உலர்த்தியதாகவும், அதனை ஆசிரியையுடன் இணைத்து அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

    அப்போது ஏதேச்சையாக ஆய்வுக்கு வந்த முசிறி நீதிமன்ற நீதிபதி புகாரை பெற்றுக்கொண்டு திருச்சி புறநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.

    சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, புகாருக்கு ஆளாகியுள்ள இரண்டு ஆசிரியர்களும் சித்தாம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்பு பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால் 2019-ல் அவர்கள் பணி மாறுதலாகி வேறு பள்ளிக்கு சென்று விட்டார்கள்.

    ஆகவே அவர்கள் பணியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களா? அல்லது தற்போது எடுக்கப்பட்டதா? இப்போது எடுத்திருந்தால் அவர்கள் எதற்காக மீண்டும் அந்த பள்ளிக்கு சென்றார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது என்றனர்.

    தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களை நேர் வழிக்கு அழைத்து சென்று கல்வி போதிக்கும் ஆசிரியர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், மாணவர்களின் எதிர்கால செயல் கேள்விக்குறியாகி விடும் என்பதே பெற்றோர்களின் ஆதங்கம்.

    ×