search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருசக்கர வாகனம் திருட்டு"

    • கடை முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் வண்டியிலே வைத்துவிட்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • மாலையில் பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள சீத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 52). இவர் அணியாபுரத்தில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 12-ந் தேதி தனது கடை முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் வண்டியிலே வைத்துவிட்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மாலையில் பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை.

    இது குறித்து மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் மோகனூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்த 2 பேரை மோகனூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், கரூர் மாவட்டம், பெரியாண்டாங்கோவில் பெரியார் நகரைச்சேர்ந்த சுரேஷ்குமார் மகன் அகிலன் (22), கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனாம்புலியூர், முதலைப் பட்டியை சேர்ந்த வைரபெருமாள் மகன் செல்வராஜ் (32) என்பதும் தெரிய வந்தது.

    தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அணியாபுரத்தில் திருடிய ஸ்கூட்டர், மோகனூர் அடுத்த கிராயூர் அரசு மதுபான கடை மேற்பார்வையாளர் மகேஸ்வரன் என்பவரது ஸ்கூட்டர் ஆகிய 2 வாகனங்களை திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து செல்வராஜ் மற்றும் அகிலன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் பக்கத்து ஊரில் நடந்த ஆடல்,பாடல் நிகழ்ச்சியை பார்க்க சென்றார்.
    • இதுகுறித்து தமிழழகன் தந்த புகாரின்பேரில் சிங்காரம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரம்பேட்டை அருகேயுள்ள பெரிய கள்ளப்பாடியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 32).

    இவர் தனது இருசக்கர வாகனத்தில் பக்கத்து ஊரில் நடந்த ஆடல்,பாடல் நிகழ்ச்சியை பார்க்க சென்றார்.

    அப்போது அவரது வாகனம் திருடு போனது. இதுகுறித்து தமிழழகன் தந்த புகாரின்பேரில் சிங்காரம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • மொபட்டை ரெயில் நிலையம் பின்புறம் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட் திருட்டு போயிருந்தது.
    • இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை :

    கோவை ஏ.கே.எஸ் நகரை சேர்ந்தவர் லட்சுமி கிளேரா (வயது 50).டிரைவர். இவர் தனது மொபட்டை ரெயில் நிலையம் பின்புறம் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட் திருட்டு போயிருந்தது. இது குறித்து உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

    கோவை கூடுதல் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருபவர் ராஜ்குமார்(45). சம்பவத்தன்று இவர் கோர்ட் வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணபதி ஆவாரம் பாளையத்தை சேர்ந்தவர் ஜவகர்(18). இவர் தனது மோட்டார் சைக்கிளை கொடிசியா அருகே நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. போத்தனூர் அருகே உள்ள குருச்சியை சேர்ந்தவர் மன்சூர்(35) இவர் தனது காரை நஞ்சுண ்டாபுரம் ரோட்டில் நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது கார் திருட்டு போயி ருந்தது. இதுகுறித்து போலீசார் விசார ணை நடத்தி வரு கிறார்கள்.

    ×