search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில தலைவர்"

    • இயக்குநர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • பொதுமக்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மற்றும் எம்பாமிங் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு சிறிது நேரம் வைக்கப்பட்டு குடும்ப சடங்குகள் செய்யப்பட்டது.

    இதன்பின், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஆம்ஸ்ட்ராங் உடல் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது,

    ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை வன்மையாக கண்டிக்கதக்கது. அவர் பல்வேறு இளைஞர்களுக்கு கல்விக்கு பெரும் உதவி செய்து இருக்கிறார். அவர் உதவியால் படித்து பல்வேறு துறைகளில் இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவரை ரோல் மாடலாக வைத்து இன்னும் பல இளைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு அவரை சார்ந்து உள்ளவர்களுக்கு மாபெரும் இழப்பு. ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அரசு அனுமதிக்காததை அடுத்து நீதிமன்றத்தை அணுகி இருப்பது நல்ல முடிவு என்று கருதுகிறேன். சரியாக தீர்ப்பு வரும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார்.

    இதைதொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

    இதேபோல், கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரையும் பாஜக நியமிக்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக புதிய தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தந்தையின் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

    கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்ள ஏற்பாடு
    • அண்ணாமலை 18-ந்தேதி காலை நாகர்கோவிலில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.

    நாகர்கோவில் :

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

    அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாதயாத்திரை மேற் கொள்வதற்காக வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். அன்று விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். அங்கு மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலரை சந்தித்து பேசுகிறார்.

    17-ந்தேதி குளச்சல் பத்ம நாபபுரம் தொகுதிகளில் பாதயாத்திரை மேற் கொள்ளும் அண்ணாமலை 18-ந்தேதி காலை நாகர்கோவிலில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர் மாலை கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    பாதயாத்திரை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதயாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரு கிறார்கள். பாதயாத்திரை தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.

    மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் தர்மராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு கள்ளர் மாணவ-மாணவிகள் விடுதிகளை மிகவும் சிறுபான்மை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் அரசு ஆணை எண் 40-யை ரத்து செய்யக்கோரி தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாநில இணைச் செயலாளர் சவுந்தரபாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் அசோக், செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மலைச்சாமி, மாணவரணி தினேஷ், நிர்வாகிகள் ஆண்டித்தேவர், சோலை ராஜ், பழனி, கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    ×