search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 3 நாள் பாதயாத்திரை
    X

    குமரி மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 3 நாள் பாதயாத்திரை

    • லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்ள ஏற்பாடு
    • அண்ணாமலை 18-ந்தேதி காலை நாகர்கோவிலில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.

    நாகர்கோவில் :

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

    அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாதயாத்திரை மேற் கொள்வதற்காக வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். அன்று விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். அங்கு மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலரை சந்தித்து பேசுகிறார்.

    17-ந்தேதி குளச்சல் பத்ம நாபபுரம் தொகுதிகளில் பாதயாத்திரை மேற் கொள்ளும் அண்ணாமலை 18-ந்தேதி காலை நாகர்கோவிலில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர் மாலை கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    பாதயாத்திரை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதயாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரு கிறார்கள். பாதயாத்திரை தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.

    மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் தர்மராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×