என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் வலியுறுத்தல்"
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- அதிகாரிகள் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே எருது விடும் திருவிழாவிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ஆம்பூர் தீயணைப்பு துறை அலுவலர் மேகநாதனிடம் விழா குழுவினர் சிலர் சென்றனர்.
அப்போது பணியில் இருந்த தீயணைப்பு அலுவலர் மேகநாதன் தடையில்லா சான்றிதழை வழங்க ரூ.3 ஆயிரம் வேண்டும் என லஞ்சமாக கேட்டது போன்ற வீடியோ சமூக வளையங்களில் வைரலாக பரவியது இந்த வீடியோ ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது போன்ற லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்மந்தமாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த அரசு பள்ளியானது சத்தியமங்கலம்- அத்தாணி முக்கிய சாலையின் ஓரமாக அமைந்துள்ளது. இதனால் காலை, மாலை பஸ்கள், லாரி, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட போக்குவரத்து இந்த சாலை வழியாக அதிகம் காணப்படுகிறது.
அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் எந்நேரமும் வாகனங்கள் வேகமாக செல்வதால் பள்ளி நாட்களில் மாணவ, மாணவிகள் தினமும் அச்ச த்துடன் பள்ளி சென்று வரும் சூழலே உள்ளது.
கள்ளிப்பட்டி அருகே பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் மது அருந்தி விட்டு அந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் பயணிப்பதையும் காண முடிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி நோக்கி மது அருந்தி விட்டு லாரியை ஓட்டி வந்த டிரைவர் கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவ, மாணவிகள் கூட்டத்தில் லாரியை விட்டதில் 2 மாணவிகளுக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோன்று இந்த மாதத்தில் மட்டும் அத்தாணி- சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி பகுதியில் சாலை விபத்தில் ஒரு உயிர்சேதம், ஒருவருக்கு கால் துண்டானது மற்றும் 2 மாணவிகளுக்கு கை, கால் முறிவும் ஏற்பட்டு ள்ளது.
இதனால் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்தில் பள்ளி செல்வதால் கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாவட்ட நிர்வாகம் வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் இது போன்ற சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- தாளவாடி அருகே பசு மாடு ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்தது.
- சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் கால் தடம் மற்றும் இறந்த பசுமாட்டை ஆய்வு செய்தனர். இதில் புலி தாக்கி பசு மாடு பலியானது தெரியவந்தது.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் கணேச புரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (54) விவசாயி. இவர் 4 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் அருகில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்கு கட்டியிருந்தார். பின்னர் மாலை மாடுகளை வீட்டிக்கு அழைத்துவர சென்றார். அப்போது தனது பசு மாடு ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்தது.
இதனையடுத்து இது குறித்து ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் கால் தடம் மற்றும் இறந்த பசுமாட்டை ஆய்வு செய்தனர். இதில் புலி தாக்கி பசு மாடு பலியானது தெரியவந்தது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும். புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அவ்வப்போது காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்படுகிறது.
- மருத்துவ சேவைகளுக்கு இந்த சுகாதார நிலையத்தையே நம்பி உள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒகேனக்கல் அருகில் உள்ளது. இங்கு அரசு ஆரம்ப சுகாதர நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பகுதியை சேர்ந்த மக்கள் மருத்துவ சேவைகளுக்கு இந்த சுகாதார நிைலயத்தையே நம்பி உள்ளனர்.
இந்த சுகாதார நிலையத்தில் முதலுதவி வழங்கும் அளவுக்கு மட்டுமே வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கூடுதல் மருத்துவ சிகிச்சைக்கு நோயாளிகளை பென்னாகரம் அரசு மருத்துவ மனைக்கோ அல்லது தருமபுரி அரசு மருத்துவமனைக்கோ அனுப்பி வைக்கின்றனர். இதனால் பல கிலோ மீட்டர் பயணிக்க வேண்டி உள்ளது. இந்த காலதாமதத்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழலும் உள்ளது.
இப்பகுதியில் பாம்புக்கடி ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது.இதற்கு சிகிச்சை பெறவும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வசதி இல்லை. மேலும் சிக்கலான பிரசவ மருத்துவத்துக்கும் இங்கு வசதியில்லை.
நீர்நிலை உள்ள பகுதியில் ஏரியூர் இருப்பதால் அவ்வப்போது காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு ரத்தப்போக்கு அதிகரிப்பால் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின்னர் தருமபுரி கொண்டு சென்று சேர்த்தும் அவர் உயிரிழந்தார்.
இது போன்ற சம்பவங்கள் தொடராமலிருக்க ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- தம்பதியினர் வாக்குவாதம்
- சமூக வளைதலங்களில் வீடியோ வைரல்.
ஆரணி:
திருவ ண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகில் தனியார் அசைவ ஓட்டல் இயங்கி வருகிறது.
இந்த ஓட்டலில் நேற்று மதியம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் மட்டன் பிரியாணி சாப்பிட்டனர்.
மேலும் மட்டன் பிரியாணி சாப்பிட்ட போது பேரதிர்ச்சியாக சாப்பிட்ட பிரியாணியில் மட்டன் துண்டுக்கு பதிலாக கரப்பான் பூச்சி கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் கடையின் ஊழியரிடம் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வைரலாக பரவியது. சமூக வளைதலங்களிலும் பரவி வருகின்றன.
ஆரணியில் ஏற்கனவே சிக்கன் பிரியாணி சிக்கன் தந்தூரி சாப்பிட்டு மாணவன் ஓருவன் சிறுமி ஆகிய 2 பேர் உயிரழந்த சம்பவம் நடந்தது.
நேற்று நடந்த இச்சம்பவத்தால் ஆரணியில் அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர். உணவு பாதுகாப்பு துறையினர் கண்துடைப்புக்கு ரெய்டு செய்யாமல் தொடர்ந்து ஆய்வு செய்து சுத்தமான முறையில் அசைவ உணவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களின் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்