search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்.ஐ.சி."

    • 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இன்போசிஸ் நிறுவனம் 2-ம் இடம் பிடித்துள்ளது.
    • 4-ம் இடத்தில் எல்.ஐ.சி.யும் 5-ம் இடத்தில ரிலையன்ஸ் நிறுவனமும் உள்ளது.

    2024ம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 இந்திய பிராண்டுகளை பிராண்ட் பைனான்ஸ் இந்தியா பட்டியலிட்டுள்ளது.

    அதில் 2023 ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த டாடா நிறுவனமே இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டை விட 9% வளர்ச்சியுடன் 28.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் முதலிடத்தை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.

    கடந்தாண்டை விட 9% வளர்ச்சி மற்றும் 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இன்போசிஸ் நிறுவனம் 2-ம் இடம் பிடித்துள்ளது.

    கடந்தாண்டை விட 38% அபார வளர்ச்சியுடன் எச்.டி.எப்.சி குழுமம் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. 4-ம் இடத்தில் எல்.ஐ.சி.யும் 5-ம் இடத்தில ரிலையன்ஸ் நிறுவனமும் உள்ளது.

    6-ம் இடத்தில் எஸ்.பி.ஐ.யும், 7-ம் இடத்தில் ஏர்டெல்லும் 8-ம் இடத்தில் எச்.சி.எல். டெக்னாலஜியும் 9-ம் இடத்தில் லார்சன் & டர்போ நிறுவனமும் 10-ம் இடத்தில் மகேந்திரா நிறுவனமும் உள்ளது.

    • விழாவில் தென்காசிகிளை தலைவர் ராமர் சங்க கொடியேற்றினார்.
    • எல்.ஐ.சி. பத்திரத்தில் இந்தி திணிப்பை தவிர்த்து தமிழில் அச்சிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

    தென்காசி:

    குற்றாலத்தில் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் (லிகாய்) நெல்லை 4வது கோட்ட மாநாடு நடந்தது.

    தென்காசிகிளை தலைவர் ராமர் சங்க கொடியேற்றினார். மாநாடுவரவேற்பு குழு மாரியப்பன் வரவேற்றார். சங்கரன்கோவில் கிளை செயலாளர் கணேசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். லிகாய் மாநில தலைவர் பூவலிங்கம் துவக்கவுரை ஆற்றினார். எல்.ஐ.சி.முதுநிலை கோட்ட மேலாளர் குமார், எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், சதன்திருமலைக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அயூப்கான், லிகாய் கோட்ட தலைவர் நடராஜன் லிகாய் மாநில செயலாளர் ராஜேஷ், மாநில பொருளாளர் தாமோதரன், முன்னாள் கோட்ட தலைவர் அல்அமீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    நெல்லை கோட்ட பொதுசெயலாளர் குழந்தைவேலு வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கை வாசித்தார். நெல்லை கோட்ட பொருளாளர் கென்னடி வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில பொதுசெயலாளர் கலாம் நிறைவுரை ஆற்றினார். லிகாய் தென்காசி செயலாளர் கனகராஜ் நன்றிகூறினார்.

    கூட்டத்தில் எல்.ஐ.சி. பிரிமியத்திற்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். முகவர்களுக்கான குழு காப்பீடு வயது வரம்பை ரத்து செய்ய வேண்டும். கேரளா போல் எல்.ஐ.சி. முகவர்களுக்க நலவாரியம் அமைத்திட வேண்டும். எல்.ஐ.சி. பத்திரத்தில் இந்தி திணிப்பை தவிர்த்து தமிழில் அச்சிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மதுரையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாடு நடந்தது.
    • எல்.ஐ.சி. பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் 66வது ஆண்டு பொது மாநாடு மற்றும் பேரணி திருநகரில் நடந்தது. கோட்டத்தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். துணை மேயர் நாகராஜன் வரவேற்றார்.

    கவுன்சிலர் விஜயா பேரணியை தொடங்கி வைத்தார். மதுரை கோட்டத்தின் 6 மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் இருந்து எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தலைவர் வேணுகோபால், தென்மண்டல கூட்டமைப்பின் துணைத்தலைவர் சுவாமிநாதன், சங்கத்தலைவர்கள் முத்துக்குமாரசாமி, சந்திரசேகரன், நிர்மலா, ஜோசப் சுரேஷ்ராஜ்குமார், பாண்டியராஜன் ஆகியோர் பேசினர். எல்.ஐ.சி. பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுச் செயலாளர் ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

    ×