search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துடியலூர்"

    • கஞ்சாவை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோவை

    கோவை துடியலூர் முல்லை நகரில் உள்ள காட்டு பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கவுண்டம்பாளையம் முல்லை நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ேலாகு என்ற லோகநாதன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சூலூர் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள சந்திப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த விழுப்புரத்தை சேர்ந்த நந்தகுமார் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • 40 தொகுதிகளையும் வெல்ல அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் பஸ் நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    1-வது வார்டு செயலாளர் சாந்திபூஷன் அனைவரையும் வரவேற்றார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.பி திருப்பூர் சிவசாமி, ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, திரைப்பட இயக்குநர் ரங்கநாதன், தலைமை பேச்சாளர் எடப்பாடி சிவசண்முகம் ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பார்கள் பேசும்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளையும் வெல்ல அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றனர்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, கே.வி.என்.ஜெயராமன், எம்ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வீரபாண்டி விஜயன், பொதுக்குழு உறுப்பினர் ஐ.கே.எஸ்.சதீஷ்குமார், பகுதி செயலாளர் வக்கில் ராஜேந்திரன், நகர செயலாளர்கள் ரகுநாதன், ஆனந்தன், டியூகாஸ் துணைத்தலைவர் செல்வராஜன், ஊராட்சித்தலைவர்கள் ரவி, ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் பூக்கடை ரவி, மாணிக்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். முடிவில் கவிச்சந்திரமோகன் நன்றி கூறினார்.

    • புதுச்சேரியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • 6 பவுன் தங்க நகைகளை கொள்ளயடித்து தப்பிச் சென்றனர்.

    கோவை:

    கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் ரூபேஸ்குமார் (வயது45).

    இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 8-ந் தேதி ரூபேஸ்குமார் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புதுச்சேரியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

    அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கை செயின், மோதிரம், வளையல் உள்பட 6 பவுன் தங்க நகைகளை கொள்ளயடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய ரூபேஸ் குமார் கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • கடந்த 1½ மாதங்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.
    • 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்டம் துடியலூர் அருகே பன்னிமடை ஊராட்சி உள்ளது.

    இந்த ஊராட்சியில் பன்னீர்மடை கார்டன், சூர்யா கார்டன், வாரி கார்டன் என பல பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்மடை கார்டன், சூர்யா கார்டன், வாரி கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இன்று காலை ஊராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது எங்கள் பகுதிக்கு தண்ணீர் விடும் வரை ஊராட்சி அலுவலகத்தை திறக்க விடமாட்டோம் என கூறி கோஷங்களை எழுப்பியதுடன், ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்து துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் பாப்பநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.பி நகர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் வடமதுரையிலிருந்து ஆனைகட்டி செல்லும் சாலையை மறித்து அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் பாப்பநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.பி நகர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இந்த நகருக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் வடமதுரையிலிருந்து ஆனைகட்டி செல்லும் சாலையை மறித்து அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் கார்த்திகேசுவரி சுந்தர்ராஜ், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ஈஸ்வரி மற்றும் துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தண்ணீர் முறையாக விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள், உடனடியாக தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×