என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொடநாடு"
- கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர்.
- அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார் டிரைவர் கனகராஜ். இவர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளை அடிக்க சென்றனர். அப்போது காவலாளியை கொன்று விட்டு கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்த நிலையில் கனகராஜ் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இறந்தார். இந்த கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலையும் போலீசார் கைது செய்தனர். இவர் கனகராஜின் சிம்கார்டை எரித்து சாட்சியங்களை அழித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அழகு துரையின் சட்டையை பிடித்து தள்ளியதாக போலீசார் தனபாலை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் நேற்று தனபாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது . அவரை உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிறையில் இருந்த போதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
- கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதனை எதிர்த்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கொடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து கொடநாடு பஞ்சாய்த்து தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு நீதிபரிகள் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்பதாகவும், 2008 ஆம் ஆண்டிலிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது? எனவும் ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 2023 ஆம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தப்பட்டுதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், கொடநாடு எஸ்டேட்டுக்குள் விதிகளை மீறி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளவில்லை என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆய்வு செய்தால் தானே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? என தெரியவரும் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து கொடநாடு எஸ்டேட்டில் கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார்.
- அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக கொடநாடு எஸ்டேட்டிற்கு இன்று சசிகலா சென்றிருந்தார். அங்கு, பங்களா முன்பு ஜெயலலிதா சிலை வைக்க பூமி பூஜையில் பங்கேற்றார்.
சசிகலா, கடைசியாக 2016ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் இங்கே தங்கியிருந்தனர்.
2017ல் இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா இங்கு வராமலேயே இருந்தார். இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா இன்று கொடநாடு சென்றார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது:-
கொடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்தேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை!
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன்.
கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது சிலை திறக்கப்படும்.
அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும்!
அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்!
இவ்வாறு அவர் கூறினார்.
- கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர்.
- வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகி இருந்தனர்.
அப்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஜின்குட்டி, திபு உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை பிப்ரவரி 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் செல்போன், வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்குள்ள ஆய்வகத்தில் இவர்களின் பேச்சுக்கள், உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அதில் கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் டி.எஸ்.பி.மாதவன் தலைமையிலான போலீசார் அகமதாபாத்திலேயே முகாமிட்டுள்ளனர்.
இந்த உரையாடல்களில் பேசப்பட்டது என்ன என்பது தெரியவரும் பட்சத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கும்.
- கொடநாடு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருமங்கலத்தில் ஓ.பி.எஸ். அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆயிரக்கணக்கா–னோர் கலந்துக் கொண்ட–னர்.
மதுரை
கொடநாடு கொைல மற்றுமு கொள்ளை வழக்கு–களில் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரியும், இதுவரை குற்ற–வாளிகளை கண்டுபிடிக் காமல் மெத்தனப்போக் கோடு செயல்படும் தி.மு.–க.வை கண்டித்தும் இன்று மதுரை மாவட்டம் திருமங்க–லம் தாலுகா அலுவலகம் ராஜாஜி சிலை அருகே ஓ.பி.எஸ். அணி சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடை–பெற்றது.
மதுரை தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு மாவட்ட கழக செயலா–ளர்கள் ஐயப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், அமைப்பு செயலாளர் ஜி.ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க. மாவட்ட செய–லாளர் பேராசிரியர் ஜெய–பால், ராஜலிங்கம், மேலூர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற் றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் பேசுகையில், இங்கே கூடியி–ருக்கும் நாளை நமது வெற் றியை நிர்ணயிக்கும் கூட்டம் என்றும் முன்னாள் முதல் வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களா கொலை, கொள்ளைகளை கண்டுகொள்ளாமல் இருக் கும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம். கொலை–யாளியை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று பேசினார்.
இதனை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் பேசுகையில், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜி–னாமா செய்ேவன் என்று கூறிய உதயகுமார் இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லையே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வேண்டியதுதானே என்றார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலி–தாவின் மன உளைச்சலுக்கும் மரணத்தின் காரணம் தி.மு.க.வும், அரசு போட்ட பொய்யான வழக்கும் தான் என்று குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது டெண்டர் அணி என்றும், ஓ.பி.எஸ்சிடம் இருப்பது தொண்டர் அணி என்றும் பேசினார்.
மதுரையை தெற்கு மாவட்ட செயலாளர் உசி–லம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப் பன் பேசுகையில், எடப்பாடி–யிடம் தான் மக்கள் செல் வாக்கு இருக்கிறது என்று சொல்லும் உதயகுமார், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும், நானும் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடுகிறேன். உசிலம் பட்டியில் யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப் போமா என்று சவால் விட் டார்.
இன்று தமிழகம் முழுவ–தும் அனைத்து மாவட்டங்க–ளிலும் ஓ.பி.எஸ். ஆணைக்கி–ணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். இதேபோன்று அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலா–ளர்கள் மேலூர் சரவணன், பேராசிரியர் ஜெயபால், ராஜலிங்கம் ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் மாணவரணி மாநில துணைசெயலாளர் ஒத்தக் கடை பாண்டியன், முன் னாள் எம்.எல்.ஏ. பாண்டி–யம்மாள், வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண் ணன், உசிலை சசி–குமார், பிரபு, திருமங்கலம் சிவா, ஜெயகுமார், பன்னியன் ஊராட்சி தலைவர் காசி–நாதன்,
பாரப்பத்தி முத்தையா, ஆட்டோ கருப்பையா, கொம்பையா, புல்லட் ராமமூர்த்தி, சாத்தன உடை–யார், பத்ரி முருகன், ராஜமாணிக்கம், சுந்தரா, வக்கீல் சரவணன், ஜோதி–முருகன், கோடீஸ்வரன், லோகநாதன், பாலசுப்பி–ரமணியன், மாவூத்து வேலன், துதி திருநாவுகரசு, வி.கே.எஸ்.மாரிச்சாமி, திருமங்கலம் நகர செயலாளர் ராஜாமணி, மாவட்ட பொருளாளர் ரவி உள்பட ஆயிரக்கணக்கா–னோர் கலந்துக் கொண்ட–னர்.
- கொடநாடு செல்லும் சாலையில் முக்கிய சாலை வழி சந்திப்பாக ஈளடா பகுதி அமைந்துள்ளது.
- பஸ் நிறுத்த நிழற்குடை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திடீரென இடிக்கப்பட்டது. புதிய நிழற்குடை கட்டுவதற்காக இடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அரவேணு:
கொடநாடு ஈளடா பகுதியில் இடிக்கப்பட்ட பஸ் நிறுத்த நிழற்குடையை உடனடியாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் முக்கிய சாலை வழி சந்திப்பாக ஈளடா பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதியை சுற்றி தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் ,கர்சன், பட்டக்கொரை, பாரதி நகர்,காந்திநகர், கதகஹட்டி, கதகத்துறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 900 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த ஆண்டுகளில் பயன்படுத்தி வந்த பஸ் நிறுத்த நிழற்குடை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திடீரென இடிக்கப்பட்டது. புதிய நிழற்குடை கட்டுவதற்காக இடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நான்கு மாத காலமாகியும் இதுவரை இடிக்கப்பட்ட நாளிலிருந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழையில் நனைந்தபடி பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே அதிகாரிகள் இடிக்கப்பட்ட ஈளடா பகுதி பஸ் நிறுத்த நிழற்குடையை ஆய்வு செய்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பஸ் நிறுத்த நிழற்குடை இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்