search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருடாபிஷேகம்"

    • மாப்பிள்ளை விநாயகர் கோவில் வருடாபிஷேகம் நடந்தது.
    • பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தர்மாபுரம் தெருவில் உள்ளது மாப்பிள்ளை விநாயகர் கோவில். இங்கு 36-வது ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார்.

    கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூைஜகள் நடந்தன. தொடர்ந்து புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மேலூர் வீரமாகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
    • மேலூர் வீரமாகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் வெங்கடேஸ்வரா நகரில் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12-வது வருடாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி மேலூர் சிவன் கோவில் சிவாச்சாரியார்கள் ராஜா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் கணபதி ஹோமம் நடந்தது.

    கோவில் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு புனித நீரால் விநாயகர், முருகன், வீரமாகாளியம்மன் ஆகியோருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். வெங்கடேஸ்வரா நகர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சோழவந்தான் அருகே உள்ள பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
    • காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் பூசாரி மகாமுனி தலைமையில் நடந்தது. பட்டர்கள் பாலாஜி, செந்தில் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகபூஜை நடந்து இதை தொடர்ந்து பூர்ணாஹூதி செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு மரக்கன்று, அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உலக நன்மைக்காக சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிப்பாடு நடைபெறுகிறது. 5 பேர்ஆண்டித்தேவர் வகையறா, எட்டூர் கிராம பொதுமக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மங்கள விநாயகர் கோவில் வருடாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே உள்ள கலெக்டர் வளாகத்தில் 34 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் டி பிளாக் மங்கள விநாயகர் கோவிலின் 7-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி மகா கணபதி ஹோமம் நடந்தது.

    14 கும்பங்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு பின்பு கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மங்கள விநாயகர், நாகநாதர் மற்றும் நவக்கிரகங்களுக்கு பூரண கும்ப அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்தில் மங்கள விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் குருக்கள் கோபால கிருஷ்ணன், ராஜாராம், ரவி மற்றும் விழா கமிட்டியாளர்கள் வருடாபிஷேக ஏற்பாடுகளை செய்தனர்.

    • ராமநாதபுரம் அருகே வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா நடந்தது.
    • பகல் 12 மணிக்கு மூலவர் அய்யப்பனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவி லில் 2017-ம் ஆண்டு 2-வது முறையாக கும்பாபி ஷேகம் நடந்தது. நேற்று வருடாபிஷேகத்தை முன்னிட்டு வல்லபை அய்யப்பன் கோவிலில் கணபதி ஹோமம் அஷ்டாபிஷேகம் நடந்தது.

    வல்லபை விநாயகர், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், சங்கரன் சங்கரி, முருகன், பெரிய கடுத்த சாமி, சிறிய கடுத்த சாமி, கருப்பாயி அம்மாள், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    நேற்று பகல் 12 மணிக்கு மூலவர் அய்யப்பனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்தி ருந்தார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அயப்பன் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    • விழாவை முன்னிட்டு காலையில் மூலவர் சிவன், அகிலாண்டேஸ்வரி அம்பாள் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும், ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் உற்சவர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இறைநெறி கழகத்தினர், தின வழிபாட்டு குழுவினர், பிரதோஷ வழிபாட்டு குழுவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 16-வது ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காலையில் மூலவர் சிவன், அகிலாண்டேஸ்வரி அம்பாள் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும், ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் உற்சவர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் சிவாச்சாரியார், உதவி சிவாச்சாரியார் முல்லை ஆகியோர் நடத்தினர். இதில் முன்னாள் அறங்காவலர்கள், தர்ம பரிபாலின சங்க நிர்வாகிகள், இறைநெறி கழகத்தினர், தின வழிபாட்டு குழுவினர், பிரதோஷ வழிபாட்டு குழுவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×