என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காயல்பட்டினம்"
- ஓடக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் 34 ஆடுகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
- மீட்கப்பட்ட ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 3.50 லட்சம் என்று தெரிகிறது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆடுகளை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் காயல்பட்டினத்தின் உச்சினிமாகாளி யம்மன் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 5 வீடுகளில் வளர்க்கப்பட்ட 34 ஆடுகள் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் திருட்டு போன தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுகளை பறிகொடுத்த நபர்கள் தங்களின் ஆடுகளை யார் திருடி னார்கள்? என்று ஊர் முழுவதும் தேடத் தொடங்கினர். அப்போது ஓடக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் 34 ஆடுகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனே இதுபற்றி ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில், சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று ஆடுகளை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3.50 லட்சம் என்று தெரிகிறது.
விசாரணையில் ஆடு களை திருடி வைத்தி ருந்தது ஓடக்கரை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த சின்னத்து ரை (வயது45) என்பதும், இவருக்கு உடந்தையாக உச்சினி மாகாளி அம்மன் கோவில் தெரு பூஜை மணி இருந்து ள்ளார் என்பதும் தெரியவந்தது. ஆனால் இந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
ஆடுகளை திருடி கடத்தும் போது அவை கத்தும் சத்தம் கேட்டு விடக் கூடாது என்பதற்காக இருக்கைகள் அகற்றப்பட்ட சொகுசு காரில் ஆடுகளை ஏற்றி காரின் கண்ணாடிகளை அடைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பண்டிகை காலத்தில் விற்பதற்காக ஒரே நாளில் 34 ஆடுகளை திருடி உள்ளதும் தெரியவந்தது.
ஆடுகளை திருடிய சின்னத்துரை, பூஜைமணி ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆடுகளை பறிகொடுத்த உச்சினி மாகாளி அம்மன் கோவில் தெரு வைரவன் மனைவி பத்மாவதி, நாராயணன் மனைவி பெரிய பிராட்டி, காட்டுப்பள்ளி தெரு சிராஜுதீன் மனைவி செய்யது அலி பாத்திமா, மங்கள விநாயகர் கோவில் தெரு சம்சுதீன் மனைவி ரகமது பீவி, முகமதுசுபின் ஆகிய 5 பேர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்ய ப்பட்டுள்ளது.
ஆனாலும் இதே பகுதியைச் சேர்ந்த மேலும் பலரும் தங்களின் ஆடுகள் திருட்டு போய் உள்ளதாக புகார் கொடுத்துள்ளனர்.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
- ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட அலியார் தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு கூடுதல் வகுப்பறை வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டன.
மேலும் காயல்பட்டினம் ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20.5 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.
விழாவில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் துணை கலெக்டர் தாக்ரே சுபஞான தேவ்ராவ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அதிகாரி பொங்கலரசி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் பாஸ்கரன், இம்மானுவேல், காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் குமார்சிங், நகராட்சி தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, முக்காணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமரி சங்கர், மாவட்ட தி.மு.க. இளை ஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் சேர்மன் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடைசுகு, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாநில பொது குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மெஜல்லா பீரிஸ், நடுநிலைப்பள்ளி தலைமை யாசிரியர் புனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலாச்சார கண்காட்சியை செய்யது அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார்.
- வரலாற்று ஆய்வு மையத்தை திருச்செந்தூர் சப்-கலெக்டர் புகாரி தொடங்கி வைத்தார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் வரலாற்று மையம் தொடக்க விழா மற்றும் காயல் கலாச்சார சங்கம் விழா கற்புடையார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மர்சூக் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, ஊர் பிரமுகர்கள் தாஜூதீன், முகைதீன் தம்பி, முகைதீன் தம்பிதுரை, அபுல் ஹசன் கலாமி, சம்சுதீன், செய்யது அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல் அமானுல்லா வரவேற்று பேசினார்.
விழாவில் கலாச்சார கண்காட்சியை செய்யது அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த வரலாற்று ஆய்வு மையத்தை திருச்செந்தூர் சப்-கலெக்டர் புகாரி தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் வரவேற்று பேசினார். ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் உலக தமிழர் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு, பேராசிரியர் முகமது நாசர், வரலாற்று ஆய்வாளர் சேயன் இப்ராஹிம், புகாரி ஷரீப் ஆகியோர் பேசினர். வரலாற்று ஆசிரியர் திவான் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து கலாச்சார கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. சாலை பசீர், சுல்தான் ஜமாலுதீன், மர்சூக் மவுலானா, காயல் விஷன் ரபீக், சேகு அப்துல் காதர், சேகு அப்துல் காதர் சூபி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
முன்னதாக செய்யது முகமது ஜியாது இறைவணக்கம் பாடினார். முடிவில் ஹாமிது பிரார்த்தனை நடத்தினார். அகமது முகைதீன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அப்துல் அஜீஸ், மஹ்மூது, சாலிஹ், சம்சுதீன் காமில், மிஸ்பாஹி அன்சாரி, அனீஸ் இப்னு செய்யது உள்பட பலர் செய்திருந்தனர்.
- ஜமாலுதீன் காயல்பட்டினம் பஜாரில் டீக்கடை நடத்தி வருகிறார்.
- கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மிர்சிதா பானு மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் எல். எப். ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜமாலுதீன் (வயது 45). இவர் காயல்பட்டினம் பஜாரில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி மிர்ஷிதா பானு (35) கடந்த சில வருடங்களாக தண்டுவடம் மற்றும் நரம்பு தளர்ச்சி நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் மிர்ஷிதா பானு நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்க சென்றார். நேற்று காலையில் வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் ஜமாலுதீன் மற்றும் அவரது உறவினர் அரபாத் ஆகியோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது மிர்சிதா பானு மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார். நோய் அவதி காரணமாகவே தான் இந்த முடிவை எடுப்பதாகவும், வேறு யாரும் காரணம் அல்ல என்றும் அவர் கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மிர்சிதா பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது.
- நிறைவு நாளான நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் நள்ளிரவில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது. விழா நாட்களில் தினசரி ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 9-வது நாளன்று மாலையில் புரோமில்டன் தலைமையில் திருவிழா ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து புனித முடியப்பர் சப்பர பவனி நடைபெற்றது. 10-வது நாள் விக்டர் லோபோ தலைமையில் ஆராதனை நடந்தது.வில்லியம் சந்தானம் மறையுரை நிகழ்த்தினார்.
கொம்புத்துறை பங்குத்தந்தை பிரதீஸ் அடிகளார், ஊர் நல கமிட்டி தலைவர் போர்தாஸ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். புனித முடியப்பர் சபையின் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நிறைவு நாளான நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பங்குதந்தை அலாய்சியஸ் முன்னிலையில் ஆறுமுகநேரி இறைமக்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து சிங்கித்துறை பங்குதந்தை ஷிபாகர் தலைமையில் அப்பகுதி மக்களும் தூத்துக்குடி, ஏரல், குரும்பூர் பகுதி மக்கள் பபிஸ்டன் அடிகளார் முன்னிலையிலும், பழையகாயல் பகுதி மக்கள் வினிஸ்டன் அடிகளார் முன்னிலையிலும், புன்னக்காயல் பகுதி மக்கள் பிராங்கிளின், ஆன்றனி ஜெபஸ்டின் ஆகியோர் முன்னிலையிலும், வீரபாண்டியன்பட்டினம் பகுதி மக்கள் கிருபாகரன், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலையிலும், ஆலந்தலை, அமலிநகர், ஜீவா நகர் பகுதி மக்கள் ஜெயக்குமார், வில்லியம் சந்தானம், இருதயராஜ் ஆகியோர் முன்னிலையிலும் உலக நன்மைக்காக நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
- காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் 7- வது ஆண்டு புறா பந்தயம் நடைபெற்றது.
- மதுரையிலிருந்து 210 புறாக்கள் பந்தயத்திற்கு விடப்பட்டன.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் 7- வது ஆண்டு புறா பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை அருகே உள்ள ஓகுர் மைதானத்தில் இருந்து மொத்தம் 205 புறாக்கள் பறக்க விடப்பட்டன.
இதில் சிவகங்கை-காயல்பட்டினம் இடையிலான 160 கிலோ மீட்டர் விமான தூரத்தை காயல்பட்டினம் கே.டி.எம். தெருவை சேர்ந்த அகமது ரியாஸ் என்பவரது புறா 2 மணி நேரம் 2 நிமிடம் 10 வினாடியில் கடந்து வந்து முதல் இடத்தை வென்றது.
கூடுதலாக 30 வினாடிகளில் வந்த சுலைமான் நகரை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரது புறா 2- வது இடத்தையும், அதனையடுத்து 10 வினாடி கழித்து வந்த நைனார் தெருவை சேர்ந்த முகமது ஹாஷிம் என்பவரது புறா 3-வது இடத்தையும் பிடித்தன. இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை புறா பந்தய கிளப் நிர்வாகிகள் அகமதுரியாஸ், லெப்பை, முகமது ஹாஷிம், அகமது, இப்னு மாஜா ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் ஆறுமுகநேரி ஸ்டார் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் மதுரையிலிருந்து 210 புறாக்கள் பந்தயத்திற்கு விடப்பட்டன.
இவற்றில் 160 கி. மீ. சாலை தூரத்தை 1 மணி 54 நிமிட நேரத்தில் கடந்து வந்த லட்சுமி மாநகரத்தை சேர்ந்த ஜோஸ் வினின்ஸ்டன் என்பவரது புறா முதல் இடத்தை பிடித்தது. மேலும் இவரது இரு புறாக்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களை பிடித்தன. இதற்கான ஏற்பாடுகளை கிளப் நிர்வாகிகள் நாராய ணன், ராஜ், பட்டு ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
- காயல்பட்டினம் அப்பா பள்ளி தெருவில் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
- சிறுபான்மை இன மக்களுக்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் அப்பா பள்ளி தெருவில் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பி தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் தாஜூதீன், முகமது இஸ்மாயில், முத்து ஹாஜி, முன்னாள் தலைவர் அபுல் ஹசன் கலாமி, பொருளாளர் முகமது உமர், செயற்குழு உறுப்பினர்கள் முகமது இக்பால், கலிலூர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகமது ஆதம் சுல்தான் வரவேற்று பேசினார். பேரவையின் துணைச் செயலாளர் நவாஸ் அகமது தொடக்க உரையாற்றினார்.
விழாவில் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு இ-சேவை மையத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், சிறுபான்மை இன மக்களுக்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி அவரது தனி கவனத்தில் காயல்பட்டினம் நகராட்சி இயங்கி வருகிறது. அதனால் இங்கு அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
இதில் கூட்டுறவு வங்கி தலைவர் உமரி சங்கர், காயல்பட்டினம் நகர் மன்ற தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வகுமார், அரசு வக்கீல் பூங்குமார், ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர், ஸ்பிக் நகர் பகுதி செயலாளர் ஆஸ்கர், கவுன்சிலர்கள் சுகு ரங்கநாதன், அன்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கவுது மெய்தீன், நாகூர் மீரான் என்பவரும் சமையல் வேலைக்காக ஆத்தூருக்கு சென்றனர்.
- தனியார் கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விழுந்தது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்தவர் கவுது மெய்தீன் (வயது 39). சமையல் தொழிலாளி. இவருக்கு ராபியா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது சித்தப்பாவின் மகனான நாகூர் மீரான் (30) என்ப வரும் நேற்று காலையில் சமையல் வேலைக்காக ஆத்தூருக்கு சென்றனர்.
பின்னர் மாலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கவுது மெய்தீன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். காயல்பட்டினம் பைபாஸ் சாலையில் உச்சினி மாகாளியம்மன் கோவில் சந்திப்பு அருகே வரும்போது முன்னால் சென்ற மினி லாரியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதி நிலை தடுமாறியது. அதே வேளையில் எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விழுந்தது. இந்த விபத்தில் கவுதுமெய்தீன், நாகூர் மீரான் ஆகிய இருவருக்கும் கண்களிலும் நெற்றியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேல் சிகிச்சைக்காக கவுது மைதீன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகரில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை அகற்றி, தரமான புதிய தார் சாலைகளை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- பணிகளையும் அலட்சியத்துடன் மேற்கொண்டு வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
ஆறுமுகநேரி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளையின் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காயல்பட்டினம் நகராட்சி மன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
நகரில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை அகற்றி, தரமான புதிய தார் சாலைகளை அமைத்தல், செயல்படாமல் இருக்கும் பயோகாஸ் திட்டத்தை விரைவில் இயக்கி, அதன் மூலம் மின் உற்பத்தி செய்தல், குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், வார்டு மறுவரையறையில் நிலவும் குளறுபடிகளைச் திருத்தி அமைத்தல், நகரின் மக்கள்தொகைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், 2-வது குடிநீர் திட்டத்தின் மூலம் சீரான குடிநீர் விநியோகத்தை ஏற்படுத்துதல். தெருவிளக்குகள் பராமரிப்பு, நகர்மன்றக் கூட்டங்களில் நகர பொதுமக்களைப் பார்வையாளர்களாக அனுமதித்தல், கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரமாகவும் பராமரித்தல், பல்லாண்டு காலமாக வெறும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டு அனைத்துப் பணிகளையும் அலட்சியத்துடன் மேற்கொண்டு வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்தல், எதிர்வரும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றிருந்தன. இந்த மனுவை முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் தலைமையில் நகர் மன்ற ஆணையாளர் சுகந்தி, நகர் மன்ற தலைவர் முத்து முகமது ஆகியோரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் இப்ராஹீம் மக்கீ, மாவட்டச் செயலாளர் மஹ்மூதுல் ஹசன், நகர தலைவர் நூவு சாகிப், செயலாளர் அபூ சாலிஹ், பொருளாளர் சுலைமான், மாவட்ட நிர்வாகிகளான மன்னர் பாதுல் அஸ்ஹப், அம்பா ஜாபர், முகம்மத் இஸ்மாயில் புகாரீ, சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- முகமது மைதீன் முபினின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
- எலும்பு முறிந்த நிலையில் கதிர்வேல் மூர்த்தி திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவை சேர்ந்தவர் முகமது மைதீன் முபின் (வயது 25). இவர் மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.
விபத்து
சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் காயல்பட்டினம் பழைய பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ இவர் மீது மோதியது.
இதில் நிலைகுலைந்த முகமது மைதீன் முபினின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில் முகமது மைதீன் முபின் படுகாயம் அடைந்தார். சுயநினைவற்ற நிலையில் அவர் உடனடியாக பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.
இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் கனி மற்றும் கதிர்வேல் மூர்த்தி ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர்.
வழக்குப்பதிவு
எலும்பு முறிந்த நிலையில் கதிர்வேல் மூர்த்தி திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது மைதீன் முபின் நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இசக்கி முத்து என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆட்டோ மீது மோதினார்.
- விபத்தில் ஆட்டோ டிரைவர் ஹேம்குமார் கால் முறிந்தது. அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஹேம்குமார் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு தனது ஆட்டோவில் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காயல்பட்டினம் வடக்கு முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி முத்து (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆட்டோ மீது மோதினார்.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ஹேம்குமார் கால் முறிந்தது. அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் இசக்கி முத்துவின் பின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நெல்லையில் இருந்து செல்லும் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே குரும்பூரை அடுத்து ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரை செல்கிறது.
- இப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு தினமும் பல்வேறு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்செந்தூருக்கும் அரசு பஸ்கள் சென்று வருகிறது.
திருச்செந்தூர்
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் அரசு பஸ்கள் கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், சோனகன்விளை வழியாக திருச்செந்தூருக்கு செல்கிறது.
இதில் நெல்லையில் இருந்து செல்லும் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே குரும்பூரை அடுத்து ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரை செல்கிறது.
காயல்பட்டினம் வழியாக
இந்த அரசு பஸ்கள் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக தினமும் காலையில் 9.15, 11.45, மதியம் 1.45, 2.45, 4.15, மாலை 5 மணி மற்றும் இரவு நேரங்களில் இயக்கபட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக காலை 11.45, 1.45, 2.45, 4.15 ஆகிய நேரங்களில் இயங்கும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
பயணிகள் வேதனை
இதனால் காலை 9.30 மணி அரசு பஸ்சை விட்டால் மாலை 5 மணிக்குதான் அடுத்த அரசுபஸ் உள்ளது.
இதனால் இப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். சிலர் அவசரம் கருதி நகர பேருந்துகளில் திருச்செந்தூருக்கு சென்று அங்கிருந்து வேறுபஸ் பிடித்து செல்ல வேண்டி உள்ளது.
இதனால் தங்களுக்கு கூடுதல் பண செலவு மட்டுமின்றி அதிகநேர பயணம் செய்ய வேண்டி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே முன்புபோல பிற்பகல், மதியம் நேரங்களில் இயக்கப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்