search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில் திட்டம்"

    • மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63000 கோடி நிதி வழங்குவதாக தகவல் வெளியானது.
    • தவறான தவலைப் பரப்பாதீர்கள் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்.

    மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து, மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63000 கோடி நிதி வழங்குவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக பரவும் செய்தி தவறானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடி மட்டுமே. தமிழக அரசின் பங்கு- ரூ.22,228 கோடி, கடன் ரூ.33,593 கோடி பங்கிடப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், தவறான தவலைப் பரப்பாதீர்கள் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

    • அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்து டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் தயாராகி உள்ளது.
    • டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் பூந்தமல்லி பணி மனைக்கு அனுப்பப்படும்.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறுகிறது. இதில் மாதவரம் -சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி புறவழிச்சாலை, மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை பணிகள் நடந்து வருகின்றன.

    2-ம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரெயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1,215.92 கோடி மதிப்பில் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரெயிலுக்கான பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை அந்த நிறுவனம் ஸ்ரீசிட்டியில் கடந்த 8.2.2024 அன்று தொடங்கியது. முதல் மெட்ரோ ரெயில் பெட்டிக்கான உற்பத்தியை தொடங்கிய நிலையில் பெட்டியில் உள்ள பல்வேறு உபகரணங்களை பொருத்தும் பணிகள் நடைபெற்றது. தற்போது அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்து டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் தயாராகி உள்ளது.

    இதனை தனியார் நிறுவனம் அதன் சோதனை தடத்திற்கு மாற்றியது. இந்த நிகழ்ச்சியில் முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தலைமை பொது மேலாளர் ராஜேந்தி ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    உற்பத்தி வளாகத்தில் அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர் டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் பூந்தமல்லி பணி மனைக்கு அனுப்பப்படும். இதன் பிறகு 2-ம் கட்ட வழித்தடத்தில் பல்வேறு நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்று முறையான ஒப்புதல்களைப் பெற்ற பிறகு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் பயணிகளின் சேவை தொடங்கும்.

    • ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழக அரசு கடனுதவி கோரியுள்ளது.
    • கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைய உள்ள வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை:

    சென்னை மெட்ரோ ரெயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையைத் தொடங்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகி வருகிறது.

    அந்த வகையில், கோவையில் முதல்கட்டமாக அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய 2 வழித்தடங்களில் மொத்தம் 38 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10,740 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    முதல் வழித்தடமாக உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து டவுன்ஹால், அவிநாசி சாலை வழியாக நீலாம்பூர் வரை 22 கிலோ மீட்டர் தூரத்துக்கும், இரண்டாம் கட்டமாக கோவை ரெயில் நிலையத்திலிருந்து சத்தி சாலையில் கோவில்பாளையம் அருகே உள்ள வழியாம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்துக்கான நிதியை பெறுவதற்கு, ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழக அரசு கடனுதவி கோரியுள்ளது.

    இதனை ஏற்று மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்க உள்ள பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் நேற்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து இன்று கோவை வந்தனர். கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைய உள்ள வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை உக்கடம் பகுதியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுணன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு அலுவலர் வென்யுகு, தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களுக்கு அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கி கூறினர்.

    2 நாள் ஆய்வு முடிந்த பின்னர் நாளை தமிழ்நாடு நிதித்துறை செயலாளரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    • மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதாக திட்ட இயக்குநர் பேட்டியளித்துள்ளார்.
    • வைகையாற்றில் பாறை பகுதிகளில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

    மதுரை

    மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை அமைக்கப்படும் என சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் மதுரையில் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மண் பரிசோதனை, வழித்தடம் போன்றவற்றை அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.

    மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மதுரையில் திட்ட இயக்குநர் அர்ஜூனன் மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயிலுக்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்து இறுதி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். திருமங்கலம் பஸ் நிலையம் அருகில், தோப்பூர், மதுரை ரெயில் நிலையம் அருகில் மற்றும் மாசி வீதிகளில் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மாசி வீதிகளில் தேரோட்டம் பாதிக்கப்படாத வகையிலும், பழமையான கட்டிடங்கள் சேதமடையாத வகையிலும் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை வைகை ஆறு முதல் கோரிப்பாளையம் வரை மெட்ரோ சுரங்கப்பாதை அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளது.

    வைகையாற்றில் பாறை பகுதிகளில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை பொறுத்தவரை வைகை ஆற்றின் கீழ் வழித்தடம் அமைப்பது, மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைப்பது சவாலான பணிகளாக இருக்கும். மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெட்ரோ ரெயில் சேவையை அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில் திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும்.
    • இந்த திட்டத்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பின்னலாடை தொழில் அமைப்பினர் சந்தித்து மனு அளித்தனர்.பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க(நிட்மா) தலைவர் ரத்தினசாமி அளித்த மனுவில்,கோவை உக்கடத்திலிருந்து, அவிநாசி மார்க்கமாக, விமானநிலையம், கணியூர் வரையிலும், பல்லடம் மார்க்கத்தில் உக்கடத்திலிருந்து காரணம்பேட்டை வரை மெட்ரோ ெரயில் சேவை தொடங்க தமிழக அரசால் உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ெரயில் சேவையை அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில், கணியூரில் இருந்தும், காரணம் பேட்டை, சாமளாபுரம் வழியாக திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும்.

    உலகளவில் புகழ் பெற்ற பின்னலாடை நகரம் திருப்பூர். கோவையில் இருந்து திருப்பூருக்கும், திருப்பூரிலிருந்து கோவைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து செல்கின்றனர். கோவை - திருப்பூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ெரயில் இயக்கினால், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி தொழில் வளர்ச்சி பெறும்.

    சாமளாபுரத்தில் இருந்து நொய்யலாற்றின் மேல் மெட்ரோ ெரயில் திட்டம் அமைந்தால் நில ஆர்ஜிதம் செய்வது சுலபமாகும். இந்த திட்டத்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும். விபத்து தவிர்க்கப்படும். பயண நேரம் குறையும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதனுடன் கோவை - திருப்பூர் இடையே மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பது குறித்த மாதிரி வரைபடத்தையும் அவர் இணைத்துள்ளார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் அளித்த மனுவில்,பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் உள்ள குறு, சிறு நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. நூல் விலை உயர்வால் ஆடை தயாரிப்பு செலவினம் அதிகரித்துள்ளது. உற்பத்தி பிரிவில், 50 சதவீதம் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்கிறது.வடமாநில தொழிலாளரை சார்ந்தே நிறுவனங்களை இயக்கவேண்டியுள்ளது. திருப்பூர் முழுவதும் மூன்று லட்சம் வடமாநில தொழிலாளர் உள்ளனர். ஒரு தொழிலாளருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 300 கோடி ரூபாய் திருப்பூரிலிருந்து வெளிமாநிலத்துக்கு செல்கிறது.

    டீமா சங்கம் சார்பில் அரசு உதவியுடன் வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படுகிறது. இதில், உள்ளூரை சேர்ந்த 10 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். தமிழகத்தில் தொழிலாளர் மிகுந்த மாவட்டங்களில் ஆயத்த ஆடை பூங்காக்களை அமைத்தால் வேலைவாய்ப்பு பெருகும், மாநில பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.தொழிலாளர் நலன், தொழில் நலன் கருதி, டாஸ்மாக் கடைகளை மாலை 5 மணிக்கு மேல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பருத்தி கொள்முதல் மையம், பின்னலாடை துறைக்கு தனி வாரியம் அமைப்பது அவசியம். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்குகிறது. ஆயிரத்து 200 தென்னை விவசாயிகள் இதில் பங்குதாரர்களாக உள்ளனர்.

    தென்னையிலிருந்து கிடைக்கும் நீரா பானத்தை, அதன் தன்மை மாறாமல் பேக்கிங் செய்து மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம். தென்னையிலிருந்து பெறப்படும் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்கள் அடங்கிய நீரா பானத்தை, தென்னீரா என்ற பெயரில் விற்று வருகிறோம்.கேரள மாநிலம் காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிறுவனம் அங்கீகரித்த தென்னீராபானத்தை, அரசு பானமாக அறிவித்து முதல்வர் அலுவலகம் மற்றும் அமைச்சரவையில் வரவேற்பு பானமாக பயன்படுத்த வேண்டும்.ஆரம்ப சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். நீரா பானம் இறக்குவதற்கான உரிமம் பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவையில் முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களுக்கு இணையாக மெட்ரோ ரெயில் தடம் அமைய உள்ளது. இதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
    • விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், பெரிய நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொது, தனியார் பங்களிப்பின் கீழ் மெட்ரோ ரெயில் நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக அவிநாசி ரோட்டில் இருந்து கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்திய மங்கலம் ரோட்டில் வலியம் பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விரிவான ஆய்வு, ஒப்புதல்களுக்குப் பிறகு 2-ம் கட்டம் மற்றும் 3-ம் கட்டப் பணிகள் தொடங்க உள்ளன. தற்போது உள்ள 139 கி.மீ. திட்டத்தில் இருந்து மேலும் நீட்டிப்பு மற்றும் புதிய பகுதிகளை சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

    கோவையில் முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களுக்கு இணையாக மெட்ரோ ரெயில் தடம் அமைய உள்ளது. இதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. போதுமான வாகன நிறுத்துமிட வசதி, எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதி, ஏற்கெனவே உள்ள சாலை யைக் கடப்பதற்கு இடவசதி உள்ள இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    விமான நிலையம், ரெயில் நிலை யம், பஸ் நிலையங்கள், பெரிய நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொது, தனியார் பங்களிப்பின் கீழ் மெட்ரோ ரெயில் நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கோவை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்திருப்பதாகவும், 2027-ம் ஆண்டில் பணி கள் நிறைவடையும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:- முடிவடைந்த பணிகள், நடை பெற்று க்கொண்டிருக்கிற பணிகள், பரிந்துரைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த விவரங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் கேட்டிருந்தேன்.

    அதில், விரிவான திட்ட அறிக் கைப்படி (டி.பி.ஆர்) கோவை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், 2027-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×