search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்து கழகம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நேற்று 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
    • தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எந்த இடையூறும் இல்லை.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நேற்று 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. வேலைநிறுத்தம் இன்று 2-வது நாளாக நீடித்து வரும் நிலையில் முழு அளவில் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

    * தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எந்த இடையூறும் இல்லை.

    * தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து பிடிவாதத்தில் இருக்கிறார்கள்.

    * போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் இன்று பிற்பகலுக்கு பிறகு கிடைக்கும் தீர்ப்பை பொறுத்து மேல் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

    • போக்குவரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர்.
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.

    தருமபுரி:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தி.மு.க. தொழிற்சங்கத்தினரை வைத்து, அரசு தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்தை நிறுத்தாமல், பஸ்களை இயக்கி வருகின்றனர்.

    இந்நிலையில் தருமபுரி நகர போக்குவரத்து பணிமனை அருகே அ.தி.மு.க, கம்யூனிஸ்ட், பா.ம.க. உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் ஊர்வலமாக பாரதிபுரம் போக்குவரத்து பணிமனை வரை நடந்து சென்றனர்.

    அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.


    தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து உடனடியாக பேச வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து பாரதிபுரம் போக்குவரத்து பணிமனை அருகில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க, தொ.மு.ச.வை சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

    இதேபோன்று பென்னாகரம் போக்குவரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்க போராட்டத்தில் தி.மு.க. தொழிற் சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், தருமபுரியில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் கையில் தொழிற்சங்க அடையாள அட்டையை வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கின.
    • மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    மதுரை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்களின் பணபலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 98 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பஸ் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அதிமுக சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று முதல் (9-ந் தேதி) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில் இதர தொழிற்சங்கத்தினர் பணிக்கு வந்ததால் மதுரை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பஸ்கள் இயங்கின.


    இந்த நிலையில் போக்குவரத்து பணிமனை முற்றுகை, மறியல் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன. இதையடுத்து மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    அங்கு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்கள் பணிமனைக்குள் செல்லாதவாறு பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் திடீரென பைபாஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருச்சி மாவட்டத்தில் 358 டவுன் பஸ்கள், 306 புறநகர் பஸ்கள் நாளொன்றுக்கு இயக்கப்படும்.
    • இனாம்குளத்தூர் பகுதிக்கு ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.

    திருச்சி:

    அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். பணியின் போது உயிரிழந்தவரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று (புதன்கிழமை) 3-வது நாளாக போராட்டம் நீடித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 358 டவுன் பஸ்கள், 306 புறநகர் பஸ்கள் நாளொன்றுக்கு இயக்கப்படும்.

    இதில் நேற்று குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் காலை 8 மணி நிலவரப்படி அரசு புறநகர் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. அதே நேரம் டவுன் பஸ்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.

    ஏற்கனவே திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஏராளமான தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆகவே அதிகாரிகள் புறநகர் பஸ்கள் இயக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க தற்காலிக டிரைவர் கண்டக்டர்களை வைத்து பஸ்கள் இயக்கப்படுகிறது. தொ.மு.ச. மற்றும் தமிழக அரசின் ஆதரவு தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள் தொடர்ச்சியாக பணியில் 2,3 ஷிப்ட் வேலை செய்கின்றனர்.


    இதற்கிடையே தற்காலிக டிரைவர் கண்டக்டர்களுக்கு ரூட் தெரியாத காரணத்தினால் பயணிகளே அவர்களை வழிநடத்தும் சுவாரசியம் நடந்தது.

    இன்று காலை திருச்சியில் இருந்து இனாம்குளத்தூர் பகுதிக்கு ஒரு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.

    இந்த பஸ்ஸின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவருமே தற்காலிக பணியாளர்கள். இவர்களுக்கு ரூட் தெரியாத காரணத்தினால் பயணிகளே பஸ் நிறுத்தத்தை அடையாளம் காட்டினர்.

    அந்த தற்காலிக கண்டக்டர் சீருடை அணியவில்லை. வழக்கமாக கண்டக்டர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தோள்பை வழங்கப்படும். ஆனால் இந்த தற்காலிக டிரைவருக்கு கலெக்சன் தொகையை வைப்பதற்கு மஞ்சபை மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஒரு கையில் டிக்கெட்டை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் மஞ்ச பை வைத்து அதில் கலெக்சன் தொகையை போட்டுக் கொண்டிருந்தார். மஞ்சப்பை கண்டக்டரை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    • பழைய ஓய்வூதியம் உள்பட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
    • சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மற்ற ஊழியர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்கி வருகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பெருமளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ஆனாலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிவித்தார்.

    இதுகுறித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சவுந்தர் ராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரினோம். ஆனால் அரசு அதை கண்டு கொள்ளவில்லை. அதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எவ்வித பலனும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள்.

    நியாயமாக எங்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து இயன்றதை இப்போது செய்து இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், மாறாக நிதிநிலைமையை காரணம் காட்டி எதையும் ஏற்க மறுப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் ஊடகங்களில் கூறுவது ஏமாற்று வேலை. அவர் பொதுமக்கள் மத்தியில் தங்கள் மீது தவறும் இல்லாதது போல காட்டிக் கொள்கிறார்.

    தொழிற்சங்கங்களுக்கு முறையான அழைப்பு கொடுக்க வேண்டும். மேலாண்மை இயக்குனர் அல்லது பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து போன் செய்து எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது தான் முறை. ஆனால் அதற்கு மாறாக ஊடகங்கள் மத்தியில் கூறுவது எங்களை அவமதிக்கும் செயலாக கருதுகிறோம்.

    வேலைநிறுத்தத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அரசு வெளியாட்களை வைத்து பஸ்களை இயக்குகிறது. இதுவும் ஏமாற்று வேலை தான்.

    அதிக ஊழியர்கள் பணிக்கு வந்ததாக அமைச்சரை அதிகாரிகள் ஏமாற்றுகிறார்கள். சென்னையில் ஒரே பஸ், பல வழித்தடங்களில் இயக்கப்படும் நிலை தான் உள்ளது. 106 சதவீதம் பஸ்கள் ஓடுவதாக கூறுவது ஏமாற்று வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஆனால் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது.
    • பஸ் நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் முன்பு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதையொட்டி சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இயக்கப்படும் 1060 அரசு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஆனால் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது.


    2-வது நாளாக இன்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின. தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்பட பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பஸ்களை இயக்கி வருகிறார்கள்.

    அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு பதில் மாற்று டிரைவர்கள், தனியார் பஸ், லாரி டிரைவர்களை நியமித்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பாதிப்பின்றி பயணம் செய்து வருகிறார்கள்.

    மேலும் பஸ் நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் முன்பு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம் முழுவதும் இன்று 97.7 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
    • சென்னையில் மாநகர பஸ்கள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடின. இன்றும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

    தமிழகம் முழுவதும் இன்று 97.7 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15 ஆயிரத்து 226 பஸ்களில் 14 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மாநகர பஸ்கள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில் பஸ்களை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அசல் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    • மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15 ஆயிரத்து 226 பஸ்களில் 14 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • சேலம் பணிமனைகளில் இருந்து 794 பஸ்களில் 775 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடின. இன்றும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணி நிலவரப்படி 97.7 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15 ஆயிரத்து 226 பஸ்களில் 14 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் மாநகர பஸ்கள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் பணிமனைகளில் இருந்து 1779 பஸ்களில் 1763 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சேலம் பணிமனைகளில் இருந்து 794 பஸ்களில் 775 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை பணிமனைகளில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 1870 பஸ்களில் 1787 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    • தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடின.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1.35 லட்சம் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, அகவிலைப்படி வழங்குதல், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி. சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஒருசில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    பொதுமக்கள் உள்ளூர், வெளியூர் பயணம் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் அசு முழு அளவில் பஸ்களை இயக்கி வருகிறது.

    சென்னையில் இருந்து வழக்கமாக பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்பட்டன.

    அதேபோல வெளியூர்களிலும் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் வழக்கம் போல பஸ்களில் பயணித்தனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. மேலும் 12-ந் தேதி முதல் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு டிரைவர், கண்டக்டர்கள் முழு அளவில் பணியில் இருக்க வேண்டும்.

    அதனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்ட களத்தில் தீவிரமாக உள்ளன.

    இதற்கிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர், பஸ்களை மறிப்போர், ஊழியர்களை தாக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சில தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் தொடர்பு கொண்டு பணிக்கு திரும்புமாறு கூறி வருகின்றனர்.

    ஆனாலும் அவர்கள் பிடிவாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பஸ் நிலையங்களுக்கு சென்று பஸ்களை இயக்க விடாமல் மறிப்பது, ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையொட்டி ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பட்டியல் தயாரித்து அவர்களுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு போக்குவரத்து கழக நிர்வாகத்தின்கீழ் செயல்படும் டெப்போக்களில் எத்தனை பேர் வேலைக்கு வரவில்லை என்ற விவரங்களை சேகரிக்க உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    அதன்படி 8 போக்குவரத்து கழகங்களிலும் வேலைக்கு வராத ஊழியர்கள் பெயர் விவரங்கள் தற்போது சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

    விரைவில் அவர்களுககு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 'நோ ஒர்க், நோ பே' என்ற அடிப்படையில் ஸ்டிரகை்கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் ரத்து செய்வதோடு துறை ரீதியான சட்ட நடவடிக்கையும் பாயும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மிக குறைந்த அளவில் தான் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் மேலாண்மை இயக்குனர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

    • தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பஸ் இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறைபிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீத வரை மாநகர பஸ்கள் இயக்கக்கப்பட்டுள்ளன.
    • பல இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியிருப்பதாவது:

    * சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இன்று வழக்கம்போல் பஸ்கள் முழுமையாக இயக்கப்படுகின்றன.

    * சென்னை மாநகரில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீத வரை மாநகர பஸ்கள் இயக்கக்கப்பட்டுள்ளன.

    * பல இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    * 2025 பஸ்கள் இயக்கப்பட வேண்டிய சூழலில் 2263 பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    • தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையும், ஐ.என்.டி.யூ.சி. சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
    • சென்னையில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே சமயம் பெரும்பாலான தொழிலாளர்களை கொண்ட தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையும், ஐ.என்.டி.யூ.சி. சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

    இதனால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடியதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி மாநிலம் முழுவதும் 96 சதவீத பஸ்கள் ஓடியதாக அவர்கள் கூறியுள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் 97 சதவீத பஸ்கள் ஓடியதாக அறிவிக்கப்பட்டன.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் வழக்கத்தைவிட கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி நிலவரப்படி 112 சதவீதம் வரை மாநகர பஸ்கள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    ×