என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உண்ணாவிரதப் போராட்டம்"
- சாம்சங் ஊழியர்கள் 91 பேரின் பணி நீக்க உத்தரவையும் ரத்து செய்ய மனுவில் கோரிக்கை.
- மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி காஞ்சிபுரம் சிஐடியு செயலாளர் முத்துக்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும், இதில், சாம்சங் ஊழியர்கள் 91 பேரின் பணி நீக்க உத்தரவையும் ரத்து செய்ய மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
மேலும், மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- உண்ணாவிரதத்தை தண்ணீர் குடித்து நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி.
- போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை சட்டசபையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.
போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டனர். அங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தை தண்ணீர் குடித்து நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி. மாலை 5 மணி அளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கபட்டனர்.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அமைதி வழியில் போராட்டம் நடத்த முனைந்த கழகத்தினர் மீது காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவிவிட்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் வகையில் சென்னை முதல் குமரி வரை அனைத்து தொண்டர்களின் ஒற்றுமைக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். உறுதி! உழைப்பு!! உயர்வு!!! என்பதை தாரக மந்திரமாக கொண்டு, மக்களின் துணையோடு இந்தக் கொடுங்கோல் ஆட்சியை அகற்ற விரைவில் அம்மாவின் நல்லரசை அமைப்போம் என தெரிவித்துள்ளார்.
- பொய்யான வாக்குறுதிகளை தந்து ஏமாற்றி வருவதாகவும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர்.
- தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
ராசிபுரம்:
தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாநில நெசவாளர் பிரிவு தலைவர் கே.எஸ்.பாலமுருகன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சேதுராமன், வடிவேல், நாகராஜன், சத்தியபானு, விவசாய அணி மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் ஆர்.டி.இளங்கோ, மாவட்ட பொருளாளர் தங்கபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஹரிஹரன், கதிரேசன், சித்ரா, நகர தலைவர் வேல்முருகன், மத்திய அரசு திட்டப்பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவர் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் தி.மு.க.வினர் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை தந்து ஏமாற்றி வருவதாகவும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்