என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுகாதார வளாகம்"
- புதிய மகளிர் சுகாதார வளாகம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என தங்க பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்து மகளிர் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தங்க பாண்டியன்எம்.எல்.ஏ. மகளிர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அப்போது அவர் அங்கிருந்த பெண்களிடம் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைத்து விட்டதா? என கேட்டார். அவர்கள் கிடைத்து விட்டது என கூறினர்.
இந்த சுகாதார வளா கத்தில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியை பார்வையிட்ட எம்.எல்.ஏ., அதுபோல் ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள் ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் வசந்தகுமார், ராம மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள், துணை தலைவர் காந்தி, கிளைச்செயலாளர்கள் ஆரோக்கியராஜ் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஏற்காடு ஊராட்சி ஒன்றிய டவுன் ஊராட்சிக்குட்ப்பட்ட ஜெரினாகாடு பகுதிதியில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
- ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆண்கள் பெண்கள் என 2 சுகா தார வளாகங்கள் கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.
ஏற்காடு:
ஏற்காடு ஊராட்சி ஒன்றிய டவுன் ஊராட்சிக்குட்ப்பட்ட ஜெரினாகாடு பகுதிதியில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு ஏற்காடு ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆண்கள் பெண்கள் என 2 சுகா தார வளாகங்கள் கட்டப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது .
இதில் கழிவறை, குளியலறை என அனைத்து வசதிகளும் உள்ளது. ஏற்காடு டவுன் ஊராட்சி மன்றம் இதன் பராமரிப்பு பணிகளை கவனித்து வந்தது. அதிகளவில் ஜெரினாகாடு பொது மக்கள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.
பூட்டப்பட்ட வளாகங்கள்
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்த சுகாதார வளாகங்கள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் ஜெரினாகாடு பொது மக்கள் பெருமளவு சிரமப்படுகின்றனர். இது குறித்து ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிசந்திரனிடம் கேட்டபோது:-
கடந்த 10 நாட்களாக தண்ணீர் தொட்டி மற்றும் எலக்ரீசியன் பணிகள் நடந்தால் இவ்வளாககங்கள் பூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 10 நாட்களாக சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளதால் ஜெரினாகாடு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.
- காதார வளாகம் 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், புதர் மண்டி காட்சி அளிக்கிறது.
- உணவு தானியங்களை வாகனத்தில் கொன்டு செல்ல முடியாமல் தலை மேல் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட அமானி மல்லாபுரம் ஊராட்சியில் உள்ள உப்பாரஅள்ளி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
மேலும் இக்கட்டிடத்திற்கு அருகே ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் உள்ளது.சுகாதார வளாகம் 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், புதர் மண்டி காட்சி அளிக்கிறது. பராமரிப்பு இன்றி உள்ள இந்த சுகாதார கட்டிடத்தின் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் நல சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் சிமெண்ட் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு சாலையின் குறுக்கே கற்களை வைத்து ஆக்கிரமித்து செய்து வருகின்றனர்.
மேலும் சாலையின் நடுவே சிமெண்ட் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்வதிலும், அங்கன்வாடி மையத்திற்க்கு அரசு வழங்கும் உணவு தானியங்களை வாகனத்தில் கொன்டு செல்ல முடியாமல் தலை மேல் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராயலூர் 3-வது வார்டில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தை கள் பயன்பாட்டிற்காக ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
- தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த சில மாதங்களாக சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது.
சங்ககிரி:
சங்ககிரி சின்னாக் கவுண்டனூர் ஊராட்சி, ராயலூர் 3-வது வார்டில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தை கள் பயன்பாட்டிற்காக ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த சில மாதங்களாக சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது.
மேலும் பராமரிப்பின்றி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெண்கள், குழந்தைகள் திறந்த வெளிக் கழிப்பிடமாக சாலை ஓரங்களையே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
புகார்
இது குறித்து ஊராட்சி மன்றத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெரிய ஏரிக்கரையில் கால பைரவர் கோவில் உள்ளது
- கோவிலின் அறக்கட்டளை தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரிக்கரையில் கால பைரவர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இங்கு பக்தர்களின் வசதிக்காக ரூ.10 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதற்கு கோவிலின் அறக்கட்டளை தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார்.
இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில் அறக்கட்டளை கவுரவவத் தலைவர் பி.சேகர், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், அறக்கட்டளை தர்மகர்த்தாக்கள் கிருஷ்ண மூர்த்தி, பைரேஸ், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன், பொருளாளர் சங்கர், செயலாளர் கணேசன், இயக்குனர்கள் சுப்பிரமணி, கோபால்,கிருஷ்ணன், நம்பிராஜ், கோவில் பூசாரி அரி, பவுன்ராஜ், நாகேந்திரன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- ரூ.1.63 லட்சத்தில் கட்டப்பட்டது
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகில் உள்ள வேப்பேரி கிராமத்தில் 2011-12-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் ரூ.1.63 லட்சத்தில் கட்டப்பட்டது.
சிறிது காலம் மக்கள் பயன்பாட்டில் இருந்தது. இதனிடையே, சுகாதார வளாகத்தை மூடி விட்டனர். அங்குள்ள மக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
சுகாதார வளாகத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தூய்மை பாரத இயக்க ஊரக திட்டத்தின் கீழ் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 772 மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள்.
மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி வளாகத்தில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமையில் எஸ்.டி.பி.ஐ. ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் முன்னி லையில் ஊராட்சி துணை தலைவர் புரோஸ் கான், வார்டு உறுப்பினர்கள் முகம்மது மீராசா, அய்யூப்கான், பீர் மைதீன் உள்பட பலர் கூடுதல் கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளித்த னர்.
பெரியபட்டினம் எஸ்.டி.பி.ஐ. ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான் கூறுகையில், இந்த அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் போதிய இடம் இருப்பதால் மாணவிகளுக்கு தூய்மை பாரத இயக்க ஊரக திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தோம்.
இது சம்பந்தமாக தொடர்ந்து குரல் எழுப்பி மாணவிகள் கோரிக்கை நிறைவேற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
- அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்களின் சாலைகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும்.
- தொழிலாளர்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.
பாநாசம்:
பாநாசம் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மக்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பாபநாசம் பேரூராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி பாபநாசம் பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். பாபநாசம் பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கழிப்பறை வசதி கட்டி தர வேண்டும்.
பாபநாசம் பேரூரா ட்சியில் வசிக்கும் தொழிலா ளர்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்திடவேண்டும். பாபநாசம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு களிலும் உள்ள தெருக்களின் சாலைகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும்.
திருப்பாலைத்துறை எஸ்.பி.ஜி மிஷின் தெரு, காளியம்மன் கோவில் தெரு பகுதிகளுக்கு சுடுகாட்டுக்கு மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும், ஆழ்குழாய் பம்பு அமைத்திட வேண்டும், சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உட்படு த்த வேண்டும் ஆகிய கோரி க்கைகளைவலியுறு த்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்ஈடுப ட்டனர்.
இந்த ஆர்ப்பா ட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ரபீக், மாநில பொருளாளர் அபிபுல்லா, மாநில அமைப்பாளர் அப்பாஸ் மந்திரி, தஞ்சை மாவட்ட தலைவர் அன்புராஜ், தஞ்சை மாவட்ட செயலாளர் செம்மலர்ச் செல்வி, பாபநாசம் ஒன்றிய தலைவர் கஸ்தூரி, பாபநாசம் ஒன்றிய செயலாளர்கள் ஷீலா, துரைகண்ணன், சீனிவாசன், மாநில துணைச் செயலாளர் ஜான், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார், பாபநாசம் ஒன்றிய தலைவர் வீரமணி, அய்யம்பேட்டை நகர தலைவர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொங்காளியம்மன் திருக்கோவிலில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
- இயற்கை உபாதையை கழிக்க கடும் அவதி பட வேண்டி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் கடை வீதியில் அமைந்துள்ள பொங்காளியம்மன் திருக்கோவிலில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக இங்கு சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கோவிலுக்கு வழக்கம் போல் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தனர்.
அவர்களில் சிலர் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முயன்ற போது அது பூட்டி இருந்தது. இதுகுறித்து அங்குள்ள அலுவலகத்தை அவர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது அதுவும் பூட்டி இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ,சாமி தரிசனம் செய்ய வரும் நேரங்களில் சுகாதார வளாகத்தை பூட்டி விட்டு அலுவலகத்தையும் பூட்டிவிட்டு அதிகாரிகள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை.
பதில் சொல்லவும் ஆளில்லை. இதனால் இயற்கை உபாதையை கழிக்க கடும் அவதி பட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்