search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்பின்றி காணப்படும் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்
    X

    பராமரிப்பின்றி காணப்படும் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்

    • காதார வளாகம் 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், புதர் மண்டி காட்சி அளிக்கிறது.
    • உணவு தானியங்களை வாகனத்தில் கொன்டு செல்ல முடியாமல் தலை மேல் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட அமானி மல்லாபுரம் ஊராட்சியில் உள்ள உப்பாரஅள்ளி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

    மேலும் இக்கட்டிடத்திற்கு அருகே ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் உள்ளது.சுகாதார வளாகம் 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், புதர் மண்டி காட்சி அளிக்கிறது. பராமரிப்பு இன்றி உள்ள இந்த சுகாதார கட்டிடத்தின் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் நல சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் சிமெண்ட் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு சாலையின் குறுக்கே கற்களை வைத்து ஆக்கிரமித்து செய்து வருகின்றனர்.

    மேலும் சாலையின் நடுவே சிமெண்ட் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்வதிலும், அங்கன்வாடி மையத்திற்க்கு அரசு வழங்கும் உணவு தானியங்களை வாகனத்தில் கொன்டு செல்ல முடியாமல் தலை மேல் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×