search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி ராஜேந்தர்"

    • தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் தேங்கிய மழை நீர் வடிய தாமதமானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் லெவிஞ்சிபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டு இருந்த இயக்குனர் டி.ராஜேந்தர் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். இதையடுத்து அவரை நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
    • இவர் மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார்.

    90-களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

    இதையடுத்து நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.


    தொடர்ந்து, விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "திரைஉலகில் ஒரு நடிகராய் உதயமாகி, புரட்சிகலைஞராய் பெயரெடுத்து, கேப்டன் என்று தலையெடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவராய் பதவி வகித்து, தேமுதிக தலைவராய் உருவெடுத்து, தமிழக எதிர்கட்சி தலைவராய் கால் பதித்து, தனகென்று ஒரு தனி பெயரை ஈட்டிய அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி எனது இதயத்தை ஈட்டி போல் தாக்கியது.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

    • லட்சிய தி.மு.க. என்ற பெயரில் கட்சி தொடங்கி தி.மு.க.வுக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
    • நீண்ட நாட்களுக்கு பின்னர் டி.ராஜேந்தர் தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    சென்னை:

    நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் ஆரம்ப காலங்களில் தி.மு.க.வில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் கட்சியில் இருந்து விலகிய அவர் லட்சிய தி.மு.க. என்ற பெயரில் கட்சி தொடங்கி தி.மு.க.வுக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த ஆண்டு டி.ராஜேந்தருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது கருத்து வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். இந்த சூழலில் நீண்ட நாட்களுக்கு பின்னர் டி.ராஜேந்தர் தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பாக இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை பாடி யாதவா தெருவில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் டி.ராஜேந்தர் கலந்துகொண்டு பேசுகிறார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் யுவன் சங்கர் ராஜா இசை கூடுதல் பலமாக அமைந்தது.
    • திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

    சரத்குமார் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அதன்பின்னர் தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மத்தியில் இடம்பிடித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் இவரின் இசை கூடுதல் பலமாக அமைந்தது.


    திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட யுவன் சங்கர் ராஜா ஹை ஆன் யுவன் (High on U1) என்ற இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி மலேசியாவில் ஜூலை 15 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சிலம்பரசன் மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதால் ரசிகர்களிடையே ஹை ஆன் யுவன் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


    ஹை ஆன் யுவன் இசை நிகழ்ச்சியை தொழிலதிபர் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் பெரும் பொருட்செலவில் நடத்துகிறார்கள். ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கவே யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசனை ஒன்று சேர்த்து இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜாவை வைத்து அமெரிக்காவில் உள்ள 6 மாநகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்து இருப்பதாக கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


    சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை இயக்குனர் டி.ராஜேந்தர் பாடியுள்ளார். இதனை படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    • தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக இருப்பவர் டி. ராஜேந்தர்.
    • இவர் தற்போது பேரனை வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

    தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக இருப்பவர் டி. ராஜேந்தர். இவர் தன்னுடைய மகன் சிலம்பரசனை குழந்தை பருவத்திலிருந்தே திரை உலகிற்கு தயார் செய்து வந்தது போலவே தன்னுடைய மகள் இலக்கியாவின் மகனையும் சினிமாவிற்காக தயார் செய்து வருகிறார். இசை, நடனம் என்று கற்றுக் கொடுத்து வந்தநிலையில் தற்போது பேரனை வைத்து குழந்தைகளுக்கான ஒரு திரைப்படத்தை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

    சிலம்பரசனுக்கு எங்க வீட்டு வேலன் என்ற படம் எப்படி வெற்றிப் படமாக அமைந்ததோ அதைப் போலவே பேரனுக்கும் தகுந்த ஒரு கதையை எழுதி படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார். இதற்காக பிரமாண்டமான அரங்கம் ஒன்றை டி.ராஜேந்தர் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகரும், திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியனை நேற்று சந்தித்தார்.
    • டி.ராஜேந்தர் அப்போது வேலுாரில் உள்ள தனக்கு சொந்தமான சினிமா தியேட்டர் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

    நடிகரும், திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியனை நேற்று சந்தித்தார். அப்போது வேலுாரில் உள்ள தனக்கு சொந்தமான சினிமா தியேட்டர் தொடர்பாக அவர் பேசியதாக தெரிகிறது.

    டி.ராஜேந்தரை பார்த்ததும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ஆர்வத்துடன் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில், பெண் ஒருவர் தனது குழந்தையுடன் 'செல்பி' எடுக்க முயன்றபோது, அவரை அருகில் அழைத்து டி. ராஜேந்தர் போட்டோ எடுத்துக்கொண்டார்.

    பின்னர், அங்கிருந்த மக்களிடம், "எல்லாரும் பாதுகாப்பாக, ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அரசாங்கம் கூறும் சட்டத்தை பின்பற்ற வேண்டும்" என்று கூறியதோடு, தனக்கே உரிய ஸ்டைலில், "வாழ்க்கையில எல்லாருக்கும் வேணும் டாஸ்க், உங்களோட சேப்டிக்கு போடுங்க மாஸ்க்" எனக் கூறினார்.

    இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. தனது சொந்த வேலை காரணமாக வந்த இடத்திலும் அவருக்கே உரிய பாணியில் முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.ராஜேந்தருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

    • தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • டி. ராஜேந்தர் தனது பாணியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் களை கட்டியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    டி. ராஜேந்தர்

    இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான டி. ராஜேந்தர் தனது பாணியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "குடும்பத்தோட கண்கள்... அதுதானே பெண்கள். ஞாயிறுக்கு அப்புறம் திங்களு...தை பிறந்தால் பொங்கலு. சூரியனுக்கு படைக்கத்தான் சக்கர,சக்கர பொங்கலு. கதிர் தரும் கதிரவன கரும்பா நினைக்கும் பொங்கலு" என  பாடியுள்ளார். உடல்நல பாதிப்பு காரணமாக சில மாதங்களாக ஓய்வில் இருந்த டி.ராஜேந்திர் மீண்டும் பழைய உற்சாகத்துடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

    • தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு.
    • இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் டி. ராஜேந்திரனின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


    சிம்பு

    சில காலமாகவே சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்நிலையில், விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் என்னை பார்த்தாலும் எப்போது என் மகனுக்கு திருமணம் என்று கேட்கிறார்கள். கடவுளின் அருளால் விரைவில்சிம்புவின் திருமணம் நடைபெறும்" என்று கூறினார்.

    • உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா சென்றிருந்தார்.

    உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே மாதம் 19-ந் தேதி இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

    இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா சென்றார். இதையடுத்து அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    சிகிச்சைக்குப் பிறகு டி.ராஜேந்தர் குடும்பத்தாருடன் அமெரிக்காவில் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் டி.ராஜேந்தர் இன்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம் மீது அன்பு காட்டிய தமிழக மக்கள் பிரார்த்தனையின் பலன் காரணமாக தாம் நலமுடன் உள்ளதாக கூறினார்.தமது உடல் நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் சமீபத்தில் அமெரிக்கா சென்றார்.

    இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, மேல் சிகிச்சை பெற டி.ராஜேந்தர் கடந்த 14-ஆம் தேதி அமெரிக்கா சென்றார். இதையடுத்து சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கியிருந்த டி. ராஜேந்தர் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.


    டி. ராஜேந்தர்

    இந்நிலையில், இவர் நாளை அதிகாலை 2 மணியளவில் குடும்பத்துடன் சென்னை திரும்பவுள்ளார். . மேலும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் கலையுலக நண்பர்களுக்கு டி.ராஜேந்தர் நன்றி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை சிம்புவின் 'மஹா' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்தர்.
    • டி.ராஜேந்தர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவர் டி. ராஜேந்தர். இவர் நடிகர் சிலம்பரசனின் தந்தை ஆவார். டி. ராஜேந்தருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.


    குடும்பத்துடன் டி. ராஜேந்தர்

    இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பணிகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார்.

    சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியதால் வெளிநாட்டிலே ஒரு மாத காலம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.


    குடும்பத்துடன் டி. ராஜேந்தர்

    இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிலம்பரசன் தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். 

    ×