search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.10 லட்சம்"

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியான லூர்துமாதா தெருவில் உள்ள சானல் ரோட்டில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டி சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியின் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட உள்ள தடுப்பு சுவருடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆனி ரோஸ்தாமஸ், ஆட்லின் சேகர், அரசு ஒப்பந்ததாரர் சுதாபாஸ்கர், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், புனிதன், புஷ்பராஜ், சகாயம், நிசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • உண்டியல் எண் ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் சேவகர்கள் ஈடுபட்டனர்.
    • காலை 9 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 4 மணி வரை நீடித்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவதற்காக வேண்டி கோவிலில் உள்ள உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்து வது வழக்கம். இதற்காக வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேச பெரு மாள் கோவில் ஆய்வா ளர் ஹேமதர் ரெட்டி, விஜிலென்ஸ் அதிகாரிகள் அசோக் குமார், சூரிய நாராயணா மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

    இந்த உண்டியல் எண் ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் சேவகர்கள் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 4 மணி வரை நீடித்தது. இதில் வருமானமாக ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் வசூல் ஆகி இருந்தது.

    • முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    • மத்திய நிதி குழு மானியத்தில் அமைக்கப்படுகிறது

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அம்மச்சியார் கோவில் வில்லிவிளை சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. அதனை ரூ.10 லட்சம் செலவில் தார் சாலையாக அமைக்கும் பணியினை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    மத்திய நிதி குழு மானியத்தில் அமைக் கப்படும் சாலை செப்பனிடும் நிகழ்ச்சிக்கு ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்லத்துரை அம்மச்சியார் கோவில் ஊர் தலைவர் சிவதாணுலிங்கம், வில்லிவிளை ஊர் தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுகுமார், ஒன்றிய செயற்பொறியாளர் சுசிலா ஜெயக்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிவமணிகண்டன், ராமச் சந்திரன், காமராஜ் சுபின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பழைய இரும்புகளை சென்னையில் உள்ள இரும்பு உருக்காலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
    • லோடு ஆட்டோ டிரைவர் சின்னத்துரை கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார். சம்பவத்தன்று அவர் சிலருக்கு போன் செய்து பேசியுள்ளது தெரிய வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40).

    தனியார் நிறுவன மேலாளர்

    இவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு தனியார் இரும்பு விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் இருந்து பழைய இரும்புகளை சென்னையில் உள்ள இரும்பு உருக்காலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

    ரூ. 10 லட்சம் கொள்ளை

    அதுபோல உடன்குடியை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சொந்தமான உருக்காலைக்கு இரும்பு அனுப்பியதற்கான பணத்தை நேற்று முன்தினம் செந்தில்குமார் வாங்க சென்றார்.

    அவர் வசூல் பணம் ரூ. 10 லட்சத்தை வாங்கி கொண்டு தனது நிறுவனத்திற்கு சொந்தமான லோடு ஆட்டோவில் தூத்துக்குடி திரும்பினார்.

    லோடு ஆட்டோவை தூத்துக்குடியை சேர்ந்த சின்னத்துரை என்பவர் ஓட்டினார். ஆட்டோ உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் சாலை இசக்கியம்மன் கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆட்டோவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நைசாக ஆட்டோவில் இருந்த ரூ. 10 லட்சத்தை எடுத்து சென்றனர்.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    கொள்ளையர்களை பிடிக்க திருச்செந்தூர் டி.எஸ்பி. ஆவுடையப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    டிரைவரை பிடித்து விசாரணை

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். லோடு ஆட்டோ டிரைவர் சின்னத்துரை கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    சம்பவத்தன்று அவர் சிலருக்கு போன் செய்து பேசியுள்ளதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் சின்னத்துரையை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

    ×