search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணப்படம்"

    • சிறந்த திரைக்கதை மற்றும் ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
    • விருது குறித்த தகவலை ஜோதிகா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    நட்சத்திர காதல் தம்பதிகளான சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    அவர்களின் மகள் தியா (17), மகன் தேவ் (14) ஆகியோர் மும்பையில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகின்றனர்.

    தியா சமீபத்தில் மாணவ, மாணவிகளுக்கிடையே நடந்த குறும்பட போட்டியில் பங்கேற்று 'லீடிங் லைட்' என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.

    பெண்களின் கதைகளை பேசும் இந்த படம் சிறந்த திரைக்கதை மற்றும் ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

    சிறந்த படத்தினை இயக்கியதற்காக சூர்யா மகள் தியாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த தகவலை ஜோதிகா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில்,"சினிமா துறையில் ஒளிப்பதிவு தொடர்பான பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஆவணப்படமாக எடுத்ததற்கு பெருமைப்படுகிறேன் தியா.

    இதுபோன்று தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒளிப்பதிவு பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி" என்றார்.

    • பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி.
    • ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி

    தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 2001-ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்றார்.

    இவையனைத்தும் எஸ்.எஸ்.ராஜமவுலியை சாதாரண இயக்குனராகவே அடையாளப்படுத்தியது. ஆனால், 2012-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நான் ஈ' திரைப்படம் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

    இதன் வெற்றியைக் கணக்கில் வைத்த ராஜமவுலி இனிமேல் குறைந்த பட்ஜெட்டில் கமர்சியல் கதைகளை இயக்கவே கூடாது என்கிற முடிவில் 3 ஆண்டுகள் கடின உழைப்பால் 2015-ம் ஆண்டு இந்தியாவே திரும்பிப்பார்த்த பாகுபலி திரைப்படத்துடன் வந்தார். உலகளவிலும் இந்தியாவிலிருந்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என வியக்கும் அளவுக்கு அதன் கதாபாத்திர வடிவமைப்புகளும் வி.எப்.எக்ஸ் காட்சிகளும் பேசப்பட்டன. இதன் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வெளியாகி உலகளவில் ரூ.1850 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இறுதியாக, ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ரூ.1350 கோடி வரை வசூலித்து ராஜமவுலியை இந்தியத் திரை வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகக் காட்டியது.

    இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து "மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்கிய பெயரில் அவர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதனை, ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். மேலும், இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.

    இந்த ஆவணப்படத்தில் ராஜமவுலியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும், திரைத்துறை வாழ்க்கை குறித்தும் பேச இருக்கிறது. பிரபல இயக்குனர்களான ஜேம்ஸ் காமரூன், ஜோ ரஸ்ஸோ மற்றும் கரன் ஜோஹர் இவரைப் பற்றி பேசியுள்ளனர்.

    ராஜமவுலியின் திரைத்துறை நண்பர்களான பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராணா தகுபதி மற்றும் ராம் சரண் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜமவுலி தற்பொழுது வெளியாகி கோடிகளை அள்ளும் கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

    மேலும் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு மாபெரும் படைப்பை அடுத்து இயக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை என்பவர் ‘’காளி’’ என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார்.
    • லீனா மணிமேகலையை கைது செய்து, தவறுக்கான தண்டனையை மத்திய அரசு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் என சித்தர் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை என்பவர் ''காளி'' என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார். இந்த ஆவணப்படத்தில் இவரே நடித்துள்ளதுடன், இந்துக்களின் தெய்வமான காளியை படபோஸ்டரில் புகை பிடிப்பது போன்று அவதூறாக சித்தரித்துள்ளார்.

    மதவழிபாடுகளில் முன்னோர்கள் காலம் முதல் இப்போது வரையிலும் பாரம்பரியத்தை தவறாமல் கடைபிடித்து வரும் தமிழகத்தை சேர்ந்த இந்த இயக்குநர் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    இந்து தெய்வத்தின் புனிதத்தை பாழ்படுத்தியற்காக இந்த லீனா மணிமேகலையை கைது செய்து, தவறுக்கான தண்டனையை மத்திய அரசு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும்.

    மேலும், அவரது ஆவணப்படத்தை உலகின் எந்தப்பகுதியிலும் வெளியிட முடியாத அளவிற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கையை தாமதமின்றி உடனடியாக எடுத்திடவேண்டும். சமூகவலை–தளங்களில் பதிவிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தின் போஸ்டர்களை எல்லாம் முற்றிலுமாக இல்லாமல் செய்திடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×