search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவிந்த"

    • ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது.
    • மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்தப் பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வசதி வனப்பகுதியில் பொழுதுபோக்கும் வகையில் குடில், பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பூங்காவில் ஜல்லிக்கட்டு காளை மான், யானை உள்ளிட்ட சிலைகள் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதால் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர் சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு குவிந்தனர். தற்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் நீர்வீழ்ச்சியில் குளிக்க காலை முதலே சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு குளித்து வருகின்றனர். மேலும் முட்டல் ஏரியில் தங்களது குழந்தைகளுடன் உற்சாகமாக படகு சவாரியும் செய்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றனர்.

    • கடலில் ஆனந்த குளியல் போட்டனர்
    • பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

    கன்னியாகுமரி, மே.20-

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்ட னர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியா குமரி முஸ்லிம் தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று தொழு கை நடத்தினர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத் துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலா தலங்க ளான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, விவேகா னந்தபுரத்தில் உள்ள ராமா யண தரிசன சித்திர கண் காட்சி கூடம், பாரத மாதா கோவில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வ மிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் விடு முறை நாளான இன்று சுற்றுலா தலங்கள்களை கட்டி உள்ளது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    • குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இரவு நேரங்களில் இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

    நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மயிலாடி, பொற்றையடி, சாமிதோப்பு பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 48.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொட்டாரம், இரணியல், முள்ளங்கினாவிளை, ஆரல்வாய்மொழி, கன்னிமார் பகுதிகளிலும் மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் மிதமான அளவு தண்ணீர் பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் கொட்டி வருவதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அருவியல் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். கேரளாவிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து இருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் திற்பரப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 36.53 அடியாக இருந்தது. அணைக்கு 130 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு- 1 அணை நீர்மட்டம் 8.20 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 8.30 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 13.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது.

    கடந்த 2 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளில் தீவிரம் காட்ட தொடங் கியுள்ளனர்.

    தக்கலை, இரணியல், குலசேகரம், தேரூர், அருமநல்லூர், பூதப் பாண்டி பகுதிகளில் கன்னிபூ சாகுபடிக்கான பணியை தொடங்கி யுள்ளனர்.

    வயல் உழவு பணி மற்றும் நாற்றுப்பாவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    • இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.
    • அதிகளவில் கூட்டம் திரண்டதால் பாதுகாப்பு க்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர்

    கோபி, மார்ச். 19-

    ஈரோடு மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    பகலில் அனல் காற்று வீசிவருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிவருகிறது. ஆனாலும் பகல் நேரத்தில் வழக்கம் போல் அனல் காற்று வீசி வருகிறது.

    இதனால் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. அத்தியா வசிய தேவை–களுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து செல்கிறார்கள்.

    அதுவும் குடைபிடித்துக் கொண்டு வருகிறார்கள். மேலும் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, இளநீர், நுங்கு, மற்றும் வெள்ளரி பிஞ்சுகள், பழச்சாறு, கரும்புசாறு குடித்து வருகிறார்கள்.

    கோடை காலம்தொடங்கும் முன்பே ஈரோட்டில் 100 டிகிரி வெயில் பதிவானது. இனி வரும் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர் குடும்பம், குடும்பாக வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் கர்நாடகா, கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர்.

    அனல் காற்றில் இருந்து தப்பிக்கும் வகையில் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    அதிகளவில் கூட்டம் திரண்டதால் பாதுகாப்பு க்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் கொடிவேரி பகுதி முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல கூட்டம் அலைமோதியது

    கன்னியாகுமரி, பிப்.26-

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள்கூட்டம்அலை மோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில்அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட "கியூ"வில் காத்திருந்தனர். காலை 8 மணிக்குபடகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார்வை யிட்டனர். கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளானஇன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவர த்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்தபோலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டுஇருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.
    • இதனால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக போலீசார் சார்பில் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களை இருப்பதால் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகி றார்கள். புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக மக்கள் தீபாவளியை வரவேற்பார்கள்.

    இந்நிலையில் தீபாவளி க்கு துணிமணிகள் வாங்க ஈரோடு கடை வீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக மணிக்கூண்டு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இதேப்போல ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. ரோடு வீதிகளில் ஏரா ளமான ஜவுளிக்கடைகள் நகை கடைகள் உள்ளன.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கடந்த சில நாட்களாக துணிமணிகளை வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்று ஞாயிற்று க்கிழமை என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது. ஜவுளிக் கடைகளில் மக்கள் போட்டி கொண்டு துணி களை வாங்கி சென்றனர்.

    ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. மற்ற இடங்களை காட்டிலும் இங்கு ஜவுளி விலை குறைவாக இருப்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை கூட்ட நெரிசலால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிக மாகவே காணப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் பட்டாசு விற்பனையும் சூடு வைக்க தொடங்கும் என்பதால் இந்த பகுதிகளில் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும்.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக போலீசார் சார்பில் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    காலாண்டு தேர்வு முடிந்து நாளை 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதால் ஈரோடு பஸ் நிலையம், ெரயில் நிலையங்களில் வழக்கத்தை விட இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஈரோடு வழியாக செல்லும் அனைத்து ெரயில்களிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சொந்த ஊருக்கு சென்ற அனைவரும் மீண்டும் ஈரோடு நோக்கி திரும்பி வருகின்றனர்.

    • பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

    ஈரோடு:

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்ப ட்டது. கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதேபோல், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி 2-ம் வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலையிலே நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானி கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கோபிசெட்டிபாளையம் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

    சாரதா மாரியம்மன் கோவில், அந்தியூரில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர்.
    • குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி நிலவரப்படி காலி யாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக அனைத்து மாவட்டத்திலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-20, ஆங்கிலம்-1, கணிதம்-4, அறிவியல்-14, சமூக அறிவியல்-8 என 47 காலி பணியிடங்களும், முதுகலை ஆசிரியர் தமிழ்-12, ஆங்கிலம்-7, கணிதம்-10, வேதியியல்-11, வணிகவியல்-18, பொருளாதாரம்-25, வரலாறு-7, கணினி அறிவியல்-2 என 92 காலி பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர். அவர்கள் அவர்களது விண்ணப்ப த்தினை கைப்பட எழுதி, ஈரோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்தனர்.

    இதேபோல் பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய கல்வி மாவட்ட அலுவலகத்திலும் விண்ணப்பிக்க அதிகளவிலான பட்டதாரிகள் குவிந்தனர். சிலர் மின்னஞ்சல் வாயிலாகவும் கல்வி மாவட்ட அலுவலருக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பலாம் என்றும், குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×